Posts

Showing posts from February, 2016

அகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி

Image
குகை.மா.புகழேந்தியின் “அகம் புறம் மரம்” கவிதைத் தொகுப்பை அலுவலக நண்பரின் மேசையிலிருந்து எதேச்சையாக எடுத்து வாசிக்கத் துவங்கினேன். கட்டிடங்களுக்குள் உட்கார்ந்து ஒரு காட்டை வாசிக்கிற அனுபவத்தை தந்துபோனது அந்தக் கவிதைகள்.
            புதுவீடு கட்டுவதென்று முடிவானபிறகு, புறவாச இரண்டு தென்னம்பிள்ளைகளை நடுவதென்று முடிவானது. பருத்த கன்னுக்கு அண்ணன் பேரும், இளசுக்கு என் பேரும் வைத்து வளர்த்தோம். அத்திவாரம் கல்நிரப்பி, கட்டிடம் எழுந்தபோது அரை ஆள் உயரத்துக்கு மரங்கள் ரெண்டும் கீற்றுவிட்டிருந்தது.  கட்டிட வேலைக்காக கட்டின தொட்டியை அப்படியே பரமாரிக்க ஆரம்பித்ததால் புழங்குகிற தண்ணீரெல்லாம் மடைவழியாக தென்னம்பிள்ளையின் பாத்திக்குப் போய்விடும்.
            இந்தப்பக்கம் ரெண்டு மூணு வாழைகள், ஒரு மாங்கன்னு, கீரைச்செடி, பூசணி, முருங்கை என்று வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனைக் காயும் தோட்டத்திலே விளையத் தொடங்கியது. எல்லாம் இருந்தும் நமக்கு அந்தத் தென்னையின் மேலுள்ள அக்கரை கிறுக்குத்தனமானது. மோட்டரைப் போட்டுவிட்டால் அப்படியே வானம் பார்த்து எழும் தண்ணீர் கீழ்நோக்கி வழிகிற இடத்தில் நின்று கொண்டு க…

கண்ணாத்தி

Image
ன்னைக்கு கருக்கலில் சொன்ன வார்த்தையில
இன்னவரைக்கும் எனக்கு எந்த ஒரு சந்தேகமும் இல்ல பார்த்துக்க...
பழுது கிழுதுன்னு எதுவும் இல்லாத உங்கன்னத்துக்கு மேல
ரெண்டு கண்ணு இருக்குதுபார் அதத்தான் சொல்லுறேன். என்ன கண்ணுட்டீ அது. கூழாங்கல்ல முழுங்கிட்டு, 
தொண்டைக்குள்ள தண்ணீய புடிச்சு வச்சுக்கிட்டமாதிரி
ஈர கண்ணு. கன்னுக்குட்டிக்கு இருக்கும் பாத்தியா அப்புடி. ஓம் பார்வையில விழாதவரைக்கும் நா பத்திரமாத்தான்டீ இருந்தேன்.
எப்ப முள்ளுக்காட்டுல சுள்ளி பெறக்க நின்னவள்ட்ட,
கொதவள வறண்டுபோச்சி, ஏ புள்ள கொஞ்சம் குடிக்கத் தண்ணி கிண்ணி கெடைக்குமான்னு கேட்டனோ அப்ப இருந்து
மழ பொத்துக்கிட்டு ஊத்துன கததாம்போ... அடைமழ அன்னைக்கி சாயம் மக்கிப்போன சன்னல் கம்பில
வரிசைகட்டி நிக்கும் பாத்தியா நீர்க்குண்டு.
அந்தமாதிரி ஒரு பார்வை பார்த்தியே. செத்தேம்....போ

ஒரு நெத்திய ஏத்தி, இந்தக் கன்னத்த எக்கி வக்கனமா
நீ வீசிவிட்டுப் போற கொளுக்கட்ட
பார்வைய ஏஞ்சேக்காளிக்குப் புரிய வைக்கணும்ன்னா
ஊருக்கு நடுவாப்புல இருக்கும்  வட்டக்குளத்தில
போட்டு வெளாண்ட பரூம் சீனிக் கல்லைத்தான் நான் முங்கித் தேடணும். அதே குளத்துல அரப்பும் மஞ்சளும் …

ரோலக்ஸ் வாட்ச் | சரவணன் சந்திரன் | 2ன்ட் இன்னிங்ஸ்

Image
மீபத்தில் ஒரு இரண்டரை அடி உயரக் குதிரைக்குட்டியோடு சிறுவன் ஒருவன் விளையாடிக்கொண்டிருக்கிற காணொளியினைப் பார்த்தேன். ரொம்பவும் மகிழ்ச்சியாக அவர்கள் ஒருவரை ஒருவர் முந்திக்கொண்டு சந்தோஷித்துக் கொள்கிற காணொளி அது. அதே மாதிரியான உணர்வை ஒரு புத்தகம் வாசிக்கும்போதுகூடப் பெறமுடியும் என்பதை கடைசியாக நேற்றைக்கு மாலையில் வாசித்த “ரோலக்ஸ் வாட்ச்” நாவலின் மூலம் நான் உணர்ந்துகொண்டேன்.
             “வெள்ளி முதல் ரிசர்வ் செய்யப்படுகிறது”  போஸ்டர் ஒட்டின திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக ப்ரிவ்யூ தியேட்டரில் அமர்ந்து ஒரு ரசிகனாக கைத்தட்டி, விசிலடித்து, ரசித்துப் பார்ப்பதுபோல ஒவ்வொரு படிநிலையாக இந்நாவலை இதுவரைக்கும் இரண்டு முறைப் படித்திருக்கிறேன். “ஐந்து முதலைகளின் கதை” நாவல் வழியாக ரொம்ப சாதாரணமான வாசிக அறிமுகம்தான் சரவணன் சந்திரன் அண்ணனுடன். அவரது முதல் நாவலின் தாக்கத்தில் நண்பர்களிடமெல்லாம் ஐ.மு.கதையினை வாசித்துப் பார்க்கச் சொல்லிப் பரிந்துரைத்தேன். இந்த இரண்டாம் நாவலான “ரோலக்ஸ் வாட்ச்”-சை கையில் கொடுக்கும்போது, “பழசெல்லாம் மறந்துவிட்டு ஒரு விமர்சகப் பார்வையோடு வாசித்து எப்படி இருக்கிறதென்றுச் சொ…

விருது வாங்கிய பொழுது...

கடந்த ஞாயிற்றுக்கிழமை நேமத்திற்குச் சென்றிருந்ததாக எழுதி இருந்தேனில்லையா. விசயம் வேறொன்றுமில்லை. வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்டிருந்த சமயத்தில் நிறைய தரப்புகளில் இருந்து உதவிகள் பெற்றுக் கொண்டிருந்தோம். அப்படியாக லதா அருணாச்சலம் அக்கா கைகாட்டியதின் பேரில் அவரது தோழியார் ஒருவரது வீட்டில் போர்வைகளும் கொஞ்சம் துணிமணிகளும் வாங்க நானும் கவிமணியும் நேரில் சென்றிருந்தோம்.
            கூடவே, சாப்பாடு பொட்டலம் வாங்க அவகாசமில்லை யாருக்காவது சமைத்துக் கொடுக்க முடியுமென்றால் உதவட்டும் என்று பக்கத்து மளிகையில் ஒரு மூட்டை அரிசியும் வாங்கிக் கொடுத்தார். அவை அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் அறிமுகமான நண்பர் மனோகர் என்பவரது உதவியுடன் 250பேருக்கு மதிய உணவாகச் சமைத்து வழங்கப்பட்டது. இதெல்லாம் பழங்கதைதான்.
            அன்றைக்கு அரிசி உள்பட உதவிகளை வழங்கினவரின் சிநேகிதர் நேமத்தில் மெம்பராக இயங்குபவர் போல. கல்கி மாணவ சேவா சமிதி சார்பில் வெள்ள நிவாரணப் பணிகளில் ஈடுபட்ட 100பேருக்கு விருது வழங்கும் திட்டத்திற்கு என் பெயரையும் பரிந்துரைத்திருக்கிறார். லதா அக்கா எடுத்ததுமே அவன் இதுக்கெல்லாம் வரமாட்டா…

உறுமீன் வரும் வரை...

வேளச்சேரியில் மூன்றாவது மாடியில் தன்னந்தனியாக ஒருதனி வீடு வாடகைக்கு எடுத்து, ரொம்ப சந்தோசமாகக் குடிபுகுந்து பத்து நாட்கள் ஆகிறது. சமையல் உபகரணங்கள் வாங்கவேண்டிய அவசியத்தைத் தள்ளிப்போட்டுக்கொண்டே இருந்ததால் சாப்பாடெல்லாம் ஹோட்டல் வசம்தான்.
            நேற்றைக்கு திருமழிசை தாண்டி நேமத்தில் நடந்த ஒரு விழாவுக்குச் சென்றுவிட்டுத் திரும்பும்போது போரூர் ஏரிக்கரையில் மீன் வியாபாரம் நடந்துகொண்டிருந்தது. சரி இன்னைக்கு வீட்டுச் சாப்பாட்டுக்கு வழிபண்ணுவோம் என்று ஸ்ரீ அக்காவுக்குப் போன் அடித்தேன். வருவதற்கு சாயங்காலம் ஆகிவிடும் பிரச்சனை இல்லையா என்றார். ஒரு சந்தேகத்தோடு மீன் வாங்கும் ஆசையைக் கைவிட்டுவிட்டு. நண்பனது அலுவலகத்துக்குப் போய் கொஞ்சம் அரட்டைகளைப் போட்டுவிட்டு இரண்டு பேருமாக மாலையில் வேளச்சேரிக்குத் திரும்பினோம்.
            காதலர் தினக் கொண்டாட்டத்தில் கடற்கரைச் சாலை வாகனங்களால் நிரம்பி வழிந்தது. சரி பட்டினப்பாக்கத்துக்குல் வண்டியைத் திருப்புவோம் என்று உள்ளே நுழைந்தால், மறுபடியும் மீன்கள். இது ஆகிறதில்லை. ஹோட்டல் சாப்பாட்டுக்குச் செத்த நாக்குக்கு கொஞ்சம் உயிர்ப்பு கொடுப்போம் என்று களமிறங…

வேர்மண்டிய கதைகளைத் துரத்துகிறேன்....

Image
நாட்டார் வழக்காற்றியல் மீதும், தொன்மங்களின் மீதும் ஒரு பெரிய ஈடுபாடும், அதன் கதைகளைக் கேட்டு சிலிர்ப்பதில் நிறையவே பேராசைகளும் இயல்பிலே எனக்குள் இருந்திருக்கிறது. ரெண்டு வாரம் முன்னே புத்தக வெளியீடு நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு நானும் அம்மையும் நண்பனும் அவனது மனைவியும் சூழ்ந்து உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, கையிலிருந்த மண் கலயத்தை இடது தொடையில் பிடித்துக்கொண்டு எட்டு வயசில்கேட்டுப் பழகின பெரும்புலையன் கதைப்பாடலை வில்லுப்பாட்டு மெட்டாகவே பாடி, தாளம் போடுக் கொண்டிருந்தேன். அம்மை அப்படியே அதிசயித்துப் போனாள். "இதெல்லாம் எப்படிமா நியாபவம் வச்சிருக்க" என்றாள். எனக்கே தெரியவில்லை. அறுவடைக்குப் பிறகு, காய்ந்த அடி வைக்கல் பிட்டத்தில் குத்த, சாக்குப்பை விரித்து, ராத்திரி கொடையில் கொட்டக் கொட்ட விழித்திருந்து வில்லுப்பாட்டு கேட்டபோதே அது அடியாழ மனசில் ஊறித் ததும்பியிதுக்க வேண்டும். கேமிராவைத் தூக்கிக் கொண்டு காடுமேடாகச் சுற்றி அலையும் போது எங்காவது ஒரு நாட்டார் தெய்வத்தின் சிலையைக் கண்டுவிட்டால் போதும் சுற்றிச்சுற்றி வந்து அதன் பேரென்ன ஊரென்ன கதையென்ன என்றெல்லாம் விசாரிக்காமல் உறக்…

அரவம் | நாகம்| சர்ப்பம்| பாம்புகள்

Image
            சம்பந்தமில்லாமல் பேசிக் கொண்டிருந்தோம். அது வழக்கம்தான் என்றாலும், இன்றைக்கு சர்ப்பங்கள் குறித்து அவள்தான் தொடங்கினாள். பாலா அண்ணனின் பதிவில் என் பின்னூட்டம் பார்த்துவிட்டு, நாகங்கள் பற்றி என்ன நினைக்கிறாய் என்றாள். தூங்கப் போகிற நேரத்தில் இவளொருத்தி என்று திட்டிவிட்டு போனை வைத்தேன்.
            கண்மூடின திசையெல்லாம் அரவ அசைவு தான். அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய் மாதிரி. சார்ஜர் ஒயர், ஹேல்டரில் தொங்கும் இடுப்பு பெல்ட், கொடிக்கயிற்றின் மிச்சம், புது ட்யூப் லைட்டின் உறை என எல்லாம் பாம்புபோல நெளிகின்றன.  திட்டிக்கொண்டேன்.கேட்டிருக்காது அவளுக்கு. பாம்புக் காதில்லை. கண்தான் கொஞ்ச(சு)ம் கழுகு.
இந்தக் காலையில், நாகங்கள் பற்றி, நாக நெடுந்தீவு பற்றி, நாகர்கள் பற்றி ஏன் நாகர்கோயில் பற்றிகூட வாசித்தது, கதைகேட்டதெல்லாம் நினைவுக்குள் ஓடினது.

            பாண்டவ சகோக்கள், நாகர்களின் காட்டை அழிக்க, அங்கே மயனால் கட்டப்பட்ட  “இந்திரப்பிரஸ்த மாளிகை”.  நாகர் உலகம் புகுந்து நஞ்சு குடித்து வீராதிவீரனான பீமன் இப்படி இதிகாசங்கள் ஒருபக்கம்.
            ஊர்க்காட்டில் பாம்பின் வால் பிடித்து, தலை…

சொக்கப்பனை | கடங்கநேரியான்| கவிதைநூல்

Image
சொக்கப்பனை முழுதாய் வாசித்து முடித்துவிட்டேன்.  நிகழ்ச்சிக்குக் கிளம்பும் முன், இன்னுமொருமுறை வாசித்துவிட்டு எழுதலாம் என்று புத்தகத்தைத் தேடினால் கிடைக்கவில்லை. இங்குதானே வைத்தோமென்று அறைமுழுக்க ஒழுங்குபடுத்தியும் கண்ணில்மட்டும் சிக்கவே இல்லை. ஒன்று யாரும் படிக்க எடுத்துச் சென்றிருக்கவேண்டும் அல்லது இன்னும் நன்றாகத் தேடியிருக்க வேண்டும் .

புத்தகத்தைத் எடுத்துச் செல்கிறவர்கள் பற்றி எங்கள் வாத்தியார் ஒன்று சொல்வார்.  “எடுத்துட்டுப் போய் என்ன செய்யமுடியும்?  படிக்கத்தானே முடியும். படிச்சிட்டுப் போறாம் விடு” என்று. வாத்தியார் பேச்சை இப்போதாவது கேட்போமே என்று விட்டுவிட்டேன்.

கடங்கநேரியானின் கவிதைகள் எனக்கு நன்கு பழக்கப்பட்ட திணையில் உதித்தவை. அவரது அதிகாரத்திற்கு எதிர்த்திசைய்ல் பயணிக்கிற கலைமுகமும் எனக்கு ரொம்பப் பரிச்சயமானது. ஆக இந்த கவிதைகள் மட்டும் அந்நியமாகியா நின்றுவிடும்? ரொம்ப மெனக்கிடாமல், இந்தத் தொகுப்பில் வாசித்து, மனத்துக்கு நெருங்கின கவிதைகள் பற்றி எழுதத் துணியும் போது வார்த்தைகள் தன்னாலே சுரந்து முண்டுகின்றன. சீவின பனம் பாளை மெல்லக் கசிவது மாதிரி.

வேப்பம் பூ உதி…