Posts

Showing posts from October, 2017

வாசிப்பில்... 12-10-2017

Image
சமீபத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசித்தீர்கள் கார்த்திக்? -மா.கோதண்டம், சென்னை. “மூ ன்று புத்தகங்கள். அதில் ஒன்று ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது மு.ஆனந்தன் எழுதிய யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பு. மூன்றாவது சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பில் புனைவும் பிரக்ஞையும் என்ற தொகுப்பில் உள்ள பிறமொழிக் கதைகள் சில... எனக்குக் குறிப்பாக இது இப்படியான கவிதை என்றெல்லாம் பிரித்து வகுத்து வாசித்துப் பழக்கமில்லை. அந்த ஏரியாவில் அதிகம் புழக்கமுமில்லை என்றாலும், யுகங்களின் புளிப்பு நாவுகள் தொகுப்பில் ஒரு நான்கு கவிதைகள் அப்படியே அதன் படிமங்களால் மனத்தில் உறைந்துபோன காட்சிகளாக நின்றுவிட்டது. பொணந்தூக்கி சாமி, நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள், அம்மா பலூன் குட்டி பலூன், அம்மாக்களின் செவிப்பூக்கள் ஆகிய தலைப்பிலான கவிதைகள் அவை. * ஜீ.முருகனின் முந்தைய தொகுப்புகள் படித்ததில்லை. சில கதைகள் மட்டும் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அவரது காண்டாமிருகம் சிறுகதையை அந்தத் தலைப்புக்காக வாசித்தேன். ‘கண்ணாடி’ தொகுப்புக் கையில் கிடைத்த