Posts

Showing posts from September, 2017

கி.ரா- 95 | கி ரா என்றொரு கீதாரி - தொகுப்பு : கழனியூரன்

Image
நா னிலமாக இருந்த தமிழ் நிலம் பின்வந்த இலக்கியங்களினால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு விலங்குகள், பறவைகள். சரி, இந்த ஐந்தில் கரிசல் எங்கே வருகிறது. காணவே காணோம். கரிசல் மட்டுமில்லை உட்கார்ந்து தடவினால் இன்னும் பல புதிய நிலத் திணைகள் அண்மைய கால வரலாற்றில் நம்மால் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை எல்லாம் நாம் கண்ணைமூடிக்கொண்டு கடந்து போய்விட முடியாது. அங்கே ஒரு தனித்த வாழ்க்கை இருக்கிறது. வேறெங்கும் நிலவாத தட்பவெட்பம் சுடுகிறது. மழைக்குப் பிறகு வண்டிமை போல களிம்பாக வழுக்கும் தனித்த நிலம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஒரு வாய்மொழி நீண்டு நிலைத்திருக்கிறது. இந்த வாய்மொழிகளை, ஆவணங்களை, நிலக்காட்சிகளை, வாழ்க்கையை, மனிதர்களை தன் எழுத்தில் பதிந்தவர் கி.ராஜநாராயணன். அவர் தெற்கத்தி கரிசல் நிலத்தில் செய்த எழுத்து வேலைகளில் பாதியை உலகின் வேறெந்த திசையில் வாழ்கிற அல்லது வாழ்ந்த வேறெந்த படைப்பாளியாவது தொடர்ந்து தன் தொன்னூற்றைந்து வயது வரை செய்து வந்தார்