Posts

Showing posts from March, 2015

ரெண்டு ரூவாத்துட்டு

Image
கருப்பண்ண சாமி கோயிலுக்குப் பின்பக்கம் பாளையங் கால்வாய் வழிந்தோடுகிறது. ஊருக்குள் நுழைய உடைந்த பாலம் ஒன்று மிச்சமாய் இருக்க பாலத்தின் முனையில் அந்த ஆலமரம் விழுதுகளை கால்வாய்க்குள் ஊறப்போட்டபடி நிமிர்ந்து நிற்கும். கோவில் பூடங்களுக்கும் ஆலமரத்துக்கும் உள்ள இடைவெளியில் தான் பாரதி அக்காவுக்கும் சிவபாண்டி அண்ணனுக்குமிடையே காதல் பிறந்திருக்கக் கூடும். அவர்களை அங்கேதான் இரண்டொருமுறை பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடம் விட்டு வரும்போது சைக்கிள் கேரியரில் பெப்ஸி ஐஸ் என்றெழுதிய மரப்பெட்டிக்குள் சாக்ரீம் ஐஸை ஐம்பது பைசாவுக்கு விற்கும் பெரியவரை பின் தொடர்ந்து ஓடிய நாளில், மஞ்சள் தாவாணியில் இருந்த  பாரதி அக்காளை சிவபாண்டியண்ணன் கட்டிப்பிடித்துக் கொண்டிருந்தார். கட்டிப் பிடிப்பதென்பது எத்தனை சுகானுபவம் என்பதெல்லாம் எனக்கு அறிமுகப்பட்டிருக்காத வயது அது. மறுநாள் பள்ளிக்கூடம் விட்டதும் மேல்சட்டை இல்லாமல் டவுசரை மட்டும் இழுத்து முறுக்கிக் கொண்டு நேரே ஆலமரத்தடி கோவிலுக்கு விளையாட ஓடினேன். கோவில் என்பது கொடை எடுக்கும் காலங்களில் மட்டுமே பெரியவர்களுக்கானது. மற்ற பொழுதிலெல்லாம் அது எங்களைப்போன்ற வீட

கெளதம புத்தனும் அன்னப்பறவை லெக்பீசும்..

இந்த உலகம் எப்போதுமே முந்திக்கொண்டு புலம்புபவனுக்காக பால்பேதமில்லாமல் படைப்புகளையும், தத்துவங்களையும், போட்டோஷாப் இமேஜ் கொயட்களையும்  தந்துவிட்டிருக்கின்றது. நேரே போய் நறுக்கென்று ஏண்டா எருமை ஒழுங்கா பேசமாட்றேன்னு நண்பனிடம் கேட்டு சண்டை பிடிக்கும் திராணி நமக்கிருந்தாலும், அப்படியெல்லாம் இல்லையே மச்சி வா ரெண்டு டீ சொல்லு என்று பாக்கெட்டிலிருக்கும் பதினாறு ரூபாய்க்கு உலைவைத்துவிடுவானோ என்ற ஒரே காரணத்துக்காக நாம் அடக்கி வாசித்திருப்போம். ஆனால் அந்த தேவதத்தனோ அன்னப்பறவையின் லெக்பீஸை மென்று சுமைத்துவிட்டு அடுத்த நாள் புத்தனாகி பேஸ்புக்கில் நல்ல நல்ல பஞ்ச் வசனங்களை எழுதுவான். நமக்கு ஒரு எளவும் புரியாதென்றாலும்... என்னவோ சொல்லவாரேனே இந்த யுக கேந்திர பதாதைகளுக்கென்று நெருங்கிப் பார்த்தால் கழிசடை நம்மைத்தான் கழுவி ஊற்றிக் கொண்டிருக்கும். அடேய் உன்னைய என் சொந்த சித்தப்புவ விட மரியாதையா நடத்திட்டு இருந்தேனடா நீயா என்னைத் திட்டுற. சரி இவ்வளவு நாள் என்கூட பழகி இருக்கியே எனக்கு இங்லீஷ் தெரியாதுன்னு கூடவா உனக்குத் தெரியாது என்று கேட்கத் தோன்று. சபை நாகரீகம் என்னும் சப்பைக்கட்டுக் கட்டி நாம் அம

மூன்றெழுத்துச் சொல்!

Image
சொல்லவேண்டி இருப்பது இரண்டே இரண்டு வார்த்தைகள் தான். ஆனால் அப்படியெல்லாம் உங்களைச் சுலபமாய் விட்டுவிடுவதில்லை. அப்படி நான் விடுகிறவனுமில்லை என்பதும் உங்களுக்குத் தெரியும். ஆகவே வேறு வழியில்லை முழுக்க வாசிக்கத்தான் வேண்டும்.. இவ்வளவு பழகிட்டோம்.. இனி என்ன தயக்கம் தைரியமாக தலையைக் கொடுக்கவும்.. பள்ளிக்கூட காலத்துக்குப் பிறகுதான் ஒழுங்கா புத்தகத்தைக் கையிலெடுத்து படிக்கவே கத்துக்கிட்டேன். மீன்  தூண்டிலுக்கு மண்புழுகோர்த்து  தக்கைக்கு மயில்குச்சி சீவி, வெள்ளிமலை பாறையிடுக்கில் குருவிமுட்டை சுட்டு, பாசிநரம்பில் புறாக்கண்ணி சுருக்கி, ட்ராக்டர் ட்யூப் குளியலில் படித்துறைகளையே அதகளப்படுத்தி, இடிமழையில் விழுந்த நாவல்மரம் பழக்கார ஆச்சி வீட்டு ஓட்டில் விழுந்தப்பவும் கிளிக்குஞ்சி கிடக்குதுலே ஈசு (ஈஸ்வரன்)   என்று ஓடேறிக் குதிச்சு, வண்டை வண்டையா திட்டு வாங்கி, வீட்டிலும் வகைக்கு நாலுன்னு உதை வாங்கி வளர்ந்ததென் பால்யகாலம்.. முதல்முதலா ஊருக்குள்ள கொண்டை ஆண்டனா வச்ச போனு நான் வாங்கினப்போ எனக்கு வயசு பதினாறு. எங்கப்பா முறைச்சத்தை மூணுகுயர் நோட்டில் கதையா எழுதலாம். மார்கெட்டிங், மிஷின் கட்டிங

வற்றாநதி விமர்சனக்கூட்டம்.

Image
ஒரு சின்ன விதை ஒவ்வொரு சொட்டு ஈரத்தையும் பற்றிக் கொண்டு, முட்டிமோதி மண்ணைக் கிளர்ந்து, மேல்நோக்கி எழுந்து நின்றபின், தான் முளைவிட்ட இடத்தில் வேர் கிளப்பி நிற்கத் துவங்குவது போல் இந்தநூல் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை வலுவாக்கிக் கொண்டிருப்பதாய் உணர்கிறேன். கனவுப்பிரியன் என் புத்தகத்தின் அணிந்துரையில் ஒரு வார்த்தை எழுதி இருப்பார் “காட்டுச்செடிகளுக்கு யாரும் நீரூற்றிப்போவதில்லை ” என்று.. இன்றைக்கு நிஜத்தில் எத்தனையோ பேர் வந்து நீரூற்றிக் கொண்டிருக்கின்றார்கள். அத்தனைபேரின் வார்த்தைகளுக்கும், பேரன்புக்கும் நன்றிக்குரியவனாகி நிற்கின்றேன். நாள் 07-03-2015 அன்றைக்கு மாலை பனுவல் புத்தகநிலைய அரங்கில் என் முதல் புத்தகத்தின் நூல் அறிமுகம் மற்றும் விமர்சனக்கூட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சி பற்றிய அனுபவங்களுக்கு முன் சிறு முன்கதை.. மு.க * ஆறேழு வயது மட்டுமே நிரம்பிய புத்தக வாசிப்பாளன் நான்.  பெரும்பாலானவர்களைப் போலே  ”சுஜாதா  என் ஆதர்சம்” என்ற பொன்மொழியோடே எழுத்துலகத்தில் எட்டிப்பார்க்கத் தொடங்கினேன். எழுத்துலகத்தைத் தாண்டிய சிந்தனைகளின் உந்துதலால் என்னைச் சுற்றி இருக்கும் மனிதர்கள் எல்லாம் கதைமா