Posts

Showing posts from July, 2016

திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

Image
சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது.
பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன். ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள்.
நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின் புகைப்படங்களுக்கு முகங…

ஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...

Image
நேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன்.

எட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவது படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.

முதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக் கூடத்துக்குன்னு தனியா ஹாக்கி கிரவுண்ட் …