Posts

Showing posts from August, 2015

சென்னை -376

Image
ஜெண்டூஸ் என்பார்கள் அந்த மக்களை. அவர்கள் தெலுங்கு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களே மதராஸ் நிலத்தில் பூர்வீகமாய் வசித்து வந்தவர்கள். வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற சின்னச் சின்ன கிராமங்கள் கொண்டடங்கிய நிலப்பரப்பு அது.

பரந்து விரிந்த கடற்கரை, இரண்டு ஆறுகள் கடலைச்சேரும் ஆற்றுக்கழிமுகம். (கூவம் , அடையாறு) பார்த்ததுமே இந்த இடத்தில் வியாபாரத்தைத் தொடங்கலாம் என்று ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்த ஆர்மகாம் கவுன்சில் உறுப்பினர் “பிரான்சிஸ் டே” முடிவு செய்தார். அடையார் கரை டச்சுக்காரர்களுக்கு, கூவக்கரை பிரிட்டிஷ் காரர்களுக்கு.
எந்த ஒரு நாடும் பிறநாடுகளை வென்று ஆட்சிக்கு ட்படுத்திய பிறகு தங்கள் வணிகக் கடை விரிக்கும் வழக்கத்திலிருந்து மாறாக இந்தியாவை வணிகத்திற்காக உள்நுழைந்து பிறகு ஆட்சிக்கு உட்படுத்தினார்கள் மேலைநாட்டுக்காரர்கள். அப்படி வணிகம் செழித்த முக்கிய நகரம் சென்னை.சுருக்கமாய்ச் சொன்னால் உலகப்போரில் குண்டுவீசித் தாக்கப்பட்ட ஒரே இந்திய நகரம் சென்னை தான். அந்த அளவுக்கு வியாபாரம் இங்கே கொழுத்தது.

முதலில் இங்கிருந்த பொருட்களை தங்கள் நாடுகளுக்கு ஏற்றுமதி…

குளத்தில் வைத்து எரித்தோம்.

Image
சாலைகள் மீது ஒரு விருப்பு உண்டு. வெயிலடிக்கும் போது தார்வாசனையும், மழையடிக்கும் போது ஈரவாசனையும் கிளம்பும் சாலைகளில் வண்டிகட்டிக்கொண்டு கிளம்புவது ஒரு வயசுச்சேட்டை.

சைக்கிள் ஓட்டப் பழகிய திருநெல்வேலி ரெட்டியார்பட்டி சாலையில் மூட்டைப் பெயர்த்து ரத்தம் வழிந்ததும் குட்டி சொன்னான்.  “ரத்தம் வந்துருச்சில்ல இனி சைக்கிள் ஓட்டப் பழகிக்கிடுவ” என்று. ரத்தம் வந்ததற்கும் சைக்கிள் கத்துக்கொள்ளவும் இடையே இருக்கும் பூர்வாங்க உறவை விளங்கிக்கொள்ளவே முடியவில்லை என்னால்.

விளையாடப் போனால் வீடு திரும்பும் போது வெளுத்துக் கட்டும் வழக்கம்  பல்லவர், சோழர் பாண்டியர் காலம் முதல் இப்போது வரைக்கும் பல வீடுகளில் வழக்கத்தில் இருக்கிறது. அதையெல்லாம் கணக்கிலெடுக்காமல் பொழுதுக்கும் வண்டிச்சாலைகளின் ஓரங்களில் அமர்ந்துகொண்டு போகும் வரும் வண்டிகளை வேடிக்கை பார்ப்பதுண்டு.

ஒவ்வொரு ஊருக்கும் இடையே உள்ள சாலைகளின் தொலைவை குறுக்கே கடக்க மண்பாதைகள் இருக்கும். சில சமயம் குளத்துக்குள் இறங்கி ஒத்தையடிப்பாதைகள் பயணிக்கும். முயல்வேட்டைக்கு அந்த குளத்துக்குள் தான் இரவில் பதுங்குவோம்.

அங்குள்ள பாதைக்கு குளத்துச் சாலை என்ற பெயர் மட்ட…

காத்திருந்தால் வருவேன்

இந்த டிசம்பர் கச்சேரி, பரதநாட்டிய அரங்கேற்றம், இசை விழா, நாடகம் இந்தமாதிரி சமாச்சாரங்களுக்கெல்லாம் போய்வந்தது பற்றி சுஜாதா மாதிரி ஆட்கள் சிலாகிப்பதை வாசிப்பதுண்டு. குமுத விகடனில் படங்கள் போடுவார்கள். உச்சஸ்தாதியில் தெரிந்த முகங்களாய் இருக்கும் சிரோன்மணிகள் ஆ! என்றபடி போஸ் கொடுத்திருப்பார்கள். இவ்வளவைத் தாண்டி இசைக்கும் நடனக்கலைக்கும் நமக்கு நாலு லாந்தர் விளக்கு தூரம்.

நண்பர் ஒருவர்  “மயிலாப்பூர் பாரதி வித்யாபவனில் யூ.எஸ்ஸிலிருந்து வந்த பொண்ணு ஒருத்தி பரதமும், ஒடிசியும் இங்கே கத்துட்டு ஆடுறா!  என் மகள் க்ளாஸுக்குப் போற குருதான் இவளுக்கும் குரு. நீங்களும்  கட்டாயம் பார்க்க வாங்க”. என்று அழைத்தார். அந்த அழைப்பே வித்யாசமாக இருந்ததால் ஒருவித கூச்சத்தோடு திரையரங்கம் போல இருந்த மயிலாப்பூர் கோயில் தேருக்குப் பக்கத்தில் இருக்கும் பவனுக்குள் நுழைந்தேன்.

எனக்கு இந்தப் பெயரை தமிழில் எழுதவரவில்லை. மட்டுமல்லாமல் தப்பாயிடக்கூடாதே. முன்விளம்பரத்தில் இருந்தபடி, smt. Kaustavi sarkar குருவாகக் கற்றுக் கொடுத்து,  “ஸ்ரேயா மோகன்செல்வன்” என்ற அமெரிக்க இந்தியப் பெண் நடனமாடுகிறார் என்று புரிந்துகொண்டேன்.

பூ…

சண்டே ரகளைஸ்....

Image
நேற்றுமாலை தேனாம்பேட்டை சிக்னலில் மஞ்சள் தொப்பியுடன்  “தோழன்” அமைப்பின் நண்பர்கள் ஹெட் லைட்டுகளில் கருப்பு ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டிருந்தார்கள். சாலையின் இரண்டு பக்கமும் ஹெல்மெட், சீட்பெல்ட் அவசியத்தை வலியுறுத்தும் பதாகைகளைப் பிடித்துக் கொண்டு யுவதிகள் இரண்டுபேர்.

அங்கிருந்து எல்லீசு சாலைக்குச் சென்று திரும்பும் போது அண்ணா சிலை அருகே உள்ள சிக்னலில் இன்னும் நிறைய பெண்கள் ரெட் சிக்னல் இயங்கிக் கொண்டிருந்த நேரத்தில், எனக்குப் பக்கத்தில் ஹெல்மெட் அணியாமலிருந்த இரண்டு இளைஞர்களை குறிவைத்து “ஏன் சார் ஹெல்மெட் போடலை?” என்று சீரியஸாகவே முகத்தை வைத்து  வாட்டி எடுக்க, இளைஞர்களுக்கு வெட்கம் தாங்கவில்லை.

விழிப்புணர்வுக்காக விடுமுறை நாட்களில் இப்படி களமிறங்கும் கல்லூரி இளையோர்களைக் காண்மதே மகிழ்ச்சியாக இருந்தது.

அங்கிருந்து பெரம்பூர் சென்று கிரியுடன் கொஞ்சம் ஊர் சுற்றிவிட்டு, ஸ்பெக்ட்ரம் மாலுக்குள் நுழைத்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தோம். கூட்டமாக மக்கள் இருந்த இடத்தில் எட்டிப் பார்த்தால்! வளர்ப்பு மீன்களைக் தண்ணீர் தொட்டியில் விட்டு, அதில்  கால்களை நனைக்க மீன் வந்து கால்களைக் கடிக்கிறது. ரொம்ப…

கே.எஸ்.ஆர் - K.S.Radhakrishnan.

Image
எனக்கு நன்றியுடன் சொல்லவேண்டிய வார்த்தைகள் நிறைய இருக்கின்றது. எதுவும் எழுதக் கூடாது என்று தடுத்துவிட்டார்.  ஆனாலும் நினைத்தமட்டும் எழுதத் தான் வேண்டும்.

கே.எஸ்.ஆர்  - K.S.Radhakrishnan.
_______________________________ஏதாவது ஒரு புதிய காரியத்தைச் செய்து முடிக்க நினைத்தால், உடனே அவர் முன்னால் போய் நிற்பேன். சாதக பாதகங்களைப் பற்றியெல்லாம் கூட ஒரு வார்த்தை பேசாமல்,  “தாராளமாச் செய்யுங்க நான் என்ன உதவி செய்யனும்” என்பார். ஒரு கடுஞ்சொல் கூட கிடைக்காது.

எந்த காரியமானாலும் தனியே அழைத்து என்னுடைய கருத்து இது; பிறகு உங்கள் விருப்பம் போல் செய்யுங்கள் என்று தெளிவுபடுத்துவார். தனிமனித சுதந்திரத்தையும், சுயமரியாதையையும்  மதிக்கின்ற மனிதர்.

ஒரு அரசியல் கட்சியின் முக்கியப் பொறுப்பில் இருக்கும் அவரின் வீட்டில் அதற்கான எந்த படோபடமும் இருக்காது. இதுவரையிலும் நானும் பார்த்ததில்லை. அண்ணன் வாழ்க, தலைமை வாழ்க போன்ற கோசங்கள் எதையும் கொஞ்சமும் சட்டை செய்ய மாட்டார். முதலில் எல்லாம் நிறைய ஆச்சர்யப் பட்டிருக்கிறேன்.

எளிமையான குணம், யாரிடம் நெருங்கிப் பேசாத, அதே நேரம் மனதிற்கு நெருக்கமாகிவிட்டால் அவர்களை அப்பட…