Posts

Showing posts from 2018

வாத்தியாரைச் சந்தித்த கதை

Image
1948-ல், தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூரில் (நயினார்புரம்) வாத்தியாராக ஆர்.எஸ்.ஜேக்கப் பணிக்குச் சென்றபோது அவருக்கு வயது. 19.

அங்கு பள்ளிக்கூடம் என்ற பெயரில் இருந்தது ஒரு ஓலைக்குடிசை.  "ஏலா புதுசா பள்ளக்குடி வாத்தியார் ஒருத்தரு வந்திருக்காருலா" என்று குறுக்கு மறுக்காக ஓடின 10க்கும் குறைவான சாதி வேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பிள்ளைகளைச் சமத்துவத்தோடு அமரவைத்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப் புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தன் பண்ணிக்கூடத்தில் சேர்த்து, அவர்கள் படிப்புக்குத் தடையாக இருந்த ஊர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலை முயற்சிகளில் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் சினிமாத்தனங்களை எல்லாம் மிஞ்சுவது.

பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார்.

தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால் 200…

ஸ்டோரீஸ் அர்ஷியா அசை

Image
arshiya syed hussain basha, எஸ்.அர்ஷியா, அர்ஷியா, ‘அசை’ ஸ்டோரீஸ்...


எஸ்.அர்ஷியா எஸ். அர்ஷியா (எஸ். சையத் உசேன் பாஷா) மதுரையைச் சேர்ந்தவர். விவசாயம்சார் தொழிலைச் செய்பவர். மனைவி அமீர்பேகம். மகள் எஸ். அர்ஷியா. 1987 – 1994 வரையில் தராசு மற்றும் கழுகு அரசியல் வார இதழ்களில் பணி. ‘தராசு‘வில் பயிற்சி நிருபராகச் சேர்ந்து, பின்னர்  தென் மாவட்டங்களுக்கான நிருபராக உயர்வு பெற்றவர். நமது ‘கழுகு’ தர்பார் வார இதழை நான்கு நண்பர்களுடன் இணைந்து நடத்தியதோடு, முக்கியப் பத்திரிகைகளுக்கு பலத்தப் போட்டியாக இருந்த அதில், அர்ஷியா இணையாசிரியராகப் பணிபுரிந்தார். .
ஆசிரியரின் நூல்கள் சிறுகதைகள் கபரஸ்தான் கதவு மரணத்தில் மிதக்கும் சொற்கள் நாவல்கள் ஏழரைப்பங்காளி வகையறா பொய்கைக்கரைப்பட்டி அப்பாஸ்பாய் தோப்பு கரும்பலகை அதிகாரம் சொட்டாங்கல் நவம்பர் 8, 2016. கட்டுரைகள் சரித்திரப் பிழைகள் மொழிபெயர்ப்புகள் நிழலற்ற பெருவெளி திப்புசுல்தான் பாலஸ்தீன் பாலைவனப் பூ மதுரை நாயக்கர்கள் வரலாறு கோமகட்ட மாரு
அஞ்சலிடs.arshiya12@gmail.com