Posts

Showing posts from August, 2018

வாத்தியாரைச் சந்தித்த கதை

Image
1948-ல், தூத்துக்குடி மாவட்டம் பண்ணையூரில் (நயினார்புரம்) வாத்தியாராக ஆர்.எஸ்.ஜேக்கப் பணிக்குச் சென்றபோது அவருக்கு வயது. 19. அங்கு பள்ளிக்கூடம் என்ற பெயரில் இருந்தது ஒரு ஓலைக்குடிசை.  "ஏலா புதுசா பள்ளக்குடி வாத்தியார் ஒருத்தரு வந்திருக்காருலா" என்று குறுக்கு மறுக்காக ஓடின 10க்கும் குறைவான சாதி வேற்றுமையோடு வாழ்ந்து பழக்கப்பட்ட பிள்ளைகளைச் சமத்துவத்தோடு அமரவைத்து, இருவாசல் முறையை ஒழித்து, சுற்றுப் புறத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட பிள்ளைகளைத் தன் பண்ணிக்கூடத்தில் சேர்த்து, அவர்கள் படிப்புக்குத் தடையாக இருந்த ஊர் பண்ணையாரை எதிர்த்து, அவரது கொலை முயற்சிகளில் தப்பி, ஊரையே அடிமைத்தனத்தால் தன் கட்டுக்குள் வைத்திருந்த பண்ணையாரின் சுரண்டலை அம்பலப்படுத்திய வாத்தியாரின் பள்ளிக்கூட அனுபவம் சினிமாத்தனங்களை எல்லாம் மிஞ்சுவது. பொதுவுடைமைச் சித்தாந்தந்தின் மீது ஏற்பட்ட ஈடுபாட்டால் அன்றைக்குத் தீவிரமாக இயங்கிவந்த தோழர்கள் பாலன் (பாலதண்டாயுதம்), மாயாண்டி பாரதி, நல்லக்கண்ணு, ஆகிய வேறு பலரோடு அறிமுகங்கள் இல்லாமலே நெருங்கிய நட்பு பேணியிருக்கிறார். தென்மாவட்ட ரயில் கவிழ்ப்பு சம்பவத்தால