Posts

Showing posts from September, 2015

Coffee To Copy

கோவை மண்டலம் முழுக்க கவனித்ததில் அங்காங்கு ஆவின் சார்பில் நேரடி தேனீர் விடுதிகள் எழுப்பி இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு டீ, ஐந்து ரூபாய்க்கு வடை வகைகள், பஜ்ஜி மாதிரியான மேற்படி ‘கடிகளுக்கு’ ஏழு ரூபாய் என சிக்கன விலை.  கூட்டம் பரபரவென்று நிற்கிறது.  நிறைய பழம்பெரும் பாய்லர் டீக்கடைக்காரர்களுக்கு அடிபிடித்திருக்கும் வியாபாரத்தில். கண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி.  இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும். காபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது (!) வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம்  (XEROX) தொடங்குங்களேன். [ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்]  காப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள்  அடிக்கும் கொள்ளையை மேலோட்டமாகப் பார்த்தாலே அ

விநாயகர் ஊர்வலமும் அதன் பின்னேயுள்ள கால்நூற்றாண்டு அரசியலும்.

Image
எ ங்கள் கிராமத்தில் ஒரு வழக்கம் உண்டு. அறுவடைக்குப்பிறகு களத்துமேட்டில் நெல்லடிக்கும்போது காற்றின் வீச்சம் குறைவாக இருந்தால் வேலை நடக்காது. அப்போது அங்கே கிடக்கும் மாட்டுச்சாணத்தில் பிள்ளையார் பொம்மைபிடித்து, நெல் அளக்கும் ஆழாக்கு படியைக் கொண்டு கவிழ்த்து உள்ளே இருக்கும் பிள்ளையாருக்கு மூச்சுமுட்டட்டும் என்று வைத்துவிடுவார்கள். சற்று நேரத்தில் காற்றும் வந்துவிடும்.   இப்படி எளியமக்களால் நெருக்கமாகவும், பல தண்டனைக்கும் உள்ளான விக்னேஸ்வரனின் கதை ஏகக்கணக்கில் புனையப்பட்டது. இன்றைய காலகட்டத்தில் பிள்ளையார் சதூர்த்தி பிரம்மாண்ட விநாயகர் சிலைகளோடு கொண்டாடப்படும் கலாச்சாரத்தின் பின்னால் இருக்கும் மத துவேஷம் மிக நுணுக்கமானது. அதைப்பற்றிப் பேசும் முன் விக்னேஷ்வரன் எப்படியெல்லாம் மத, சமூக, அரசியல் காரணங்களுக்காக வஞ்சிக்கப்பட்டிருக்கிறார் என்று பார்க்கவேண்டியது முக்கியம்.   பிள்ளையார் கதை சிவனின் மனைவி பார்வதியின் உடல் அழுக்கில் பிறந்து, பார்வதிக்கு காவல் இருந்தபோது, சிவனை மாளிகையின் உள்நுழையத் தடுத்ததால் ஆத்திரமடைந்து அவர் விநாயகரின் தலையை வெட்டி எறிந்ததாகவும், பின் பார்

சுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்

பாரதி கொஞ்சம் நினைவுகள். *** *** *** வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி... மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன். *** "யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங்கேயோ போகப்போறான்." "இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்." *** "செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே! பொட்டையும் காணோம்." "இதோ இருக்கிறதே." "கண்ணன் படத்துக்கு கீழிறிந்து ஏன் மாற்றி வைக்கிறாய். காலையில் வணங்கத் தேடுவேன் தெரியாதா. சரி வருகிறேன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது." "கிழிந்திருக்கிறதே கோட்டு நெஞ்சுப்பக்கம்" "நூல் கொண்டா. தைத்துக்கொள்ள" "வெள்ளைதான் இருக்கிறது" "தைத்துவிட்டு வண்டிமையினைத் தேய்த்துவிட்டால் ஆகிறது" *** "செல்லம்மா வா கடலலைகள் கவிழ்ந்துவிழும் அழகு ர

என் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.

Image
         அன்னாரை யானை முட்டியது ஜூன் மாதத்தில்.  பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார்.    யானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், " தான் உடல் நலம் தேறிவிட்டதாக " பாரதி எழுதவும், "நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார். அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி.    அதைத்தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார்.     1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது. காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து  உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு.    அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.    பாரதி மரணத்தின் காரணம் கடுமையான வயிற்றுப் போக்கு (வயிற்றுக் கடுப்