என் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள்.
அன்னாரை யானை முட்டியது ஜூன் மாதத்தில். பிறகு மூன்று மாதம் கழித்தே அவர் மரணம் சம்பவித்தது. இடையே சுதேச மித்ரனில் வேலைக்கும், வெளியூர் பயணங்களுக்கும் சென்று வந்தபடி தான் இருந்தார்.
யானை தாக்கிய பிறகு, புதுச்சேரியிலிருந்த பாரதிதாசனுக்கு அனுப்பிய கடிதத்தில், " தான் உடல் நலம் தேறிவிட்டதாக " பாரதி எழுதவும், "நான் நம்ப மாட்டேன் ஒரு புகைப்படம் எடுத்து அனுப்புங்கள்" என்று பாரதிதாசன் பதில் எழுதியிருக்கிறார். அதற்காக, சென்னை பிராட்வே ரத்னா கம்பெனி ஸ்டூடியோவில் 1921ஜூலையில் எடுத்தபடம் தான் முண்டாசு பாரதி.
அதைத்தான் பாரதி தாசனுக்கு ஒரு பிரதி அனுப்பி வைத்தார்.
1921 செப்டம்பரில் வ.வே.சு ஐயர் ஒரு கட்டுரை எழுதியது தொடர்பாக போலிசாரால் கைது செய்யப்பட, பாரதி உடல்நலமில்லாமல் இருந்த தகவல் அவருக்குக் கிடைத்தது. காவலர்கள் சூழ பாரதி வீட்டுக்கே வந்து உடல் குணமடைய மருந்து எடுத்துக்கொள்ள அறிவுருத்திச் சென்றார் வ.வே.சு.
அவர் வந்துபோன அதே தினத்தில் கவிஞன் உயிர் நீர்த்துப் போனது.
பாரதி மரணத்தின் காரணம் கடுமையான வயிற்றுப் போக்கு (வயிற்றுக் கடுப்பு) செப்டம்பர் முதல் வாரத்தில் இருந்தே விடுப்பில் தான் இருந்தார். வேலைக்கு 12ம் தேதி திரும்புவதாகச் சொல்லி அனுப்பின அதே தினத்தில் அவர் உடல் திருவல்லிக்கேணி கிருஷ்ணாம்பேட்டைமயானத்தில் தகனம் செய்யப்பட்டது. பத்து நாளும் மனிதர் சிகிச்சையும் எடுத்துக்கொள்ளவில்லை மருந்தும் எடுத்துக் கொள்ளவில்லை.
பாரதி மறைந்தது சரியாக இரவு 1:30மணிக்கு... பொழுது விடிந்த பிறகே அவர் மரணச் செய்தி நண்பர்களுக்கும், உறவினர்களுக்கும் அறிவிக்கப்பட்டது. மரணத்தின் போது உடல் மெலிந்து ஐம்பது கிலோவுக்கும் குறைவான எடையில் இருந்தார்.
பாரதிக்கு மகன்கள் கிடையாது இரண்டு மகள்கள் மட்டுமே. மூத்தவர் தங்கம்மாள், இளையவர் சகுந்தலா. ஆக தூரத்து உறவினரான ஹரிஹர சர்மா என்பவர் தான் பாரதி உடலுக்கு எரியூட்டினார்.
பாரதி மறைந்ததும் செல்லம்மாள் தன் கணவரின் படைப்புகளை தன் சகோதரர் அப்பாத்துரையின் துணையுடன் சிறுசிறு நூல்களாக வெளியிடத் துவங்கினார். "சுதேச கீதங்கள்" என்ற இரு பாகங்களுக்குமேல் அவரால் வேறொன்றும் இயலவில்லை.
பாரதியின் படைப்புகள் அத்தனையும் வெறும் 4000ரூபாய் காப்புரிமைக்குக் கை மாறியது. அதிலும் செல்லம்மாள் வாங்கின கடன் 2,400போக மீதம் 1,600 மாதம் 200என எட்டு தவணையாகக் கொடுப்பதென்று ஒப்பந்தம் செய்யப்பட்டது. பாரதியின் படைப்புகளுக்கான காப்புரிமையை வாங்கியவர் சி.விசுவநாத ஐயர்.
( செல்லம்மா பாரதி எனக் கையொப்பமிட்ட அந்த ஐம்பது பைசா பத்திரத்தின் பிரதிகளைச் சில நாட்கள் முன்பு கையில் பெற்ற போது இனம்புரியாத உணர்வு எனக்குள்)
ஆனால், உலக சரித்திரத்திலே நடைபெறாத இலக்கிய பரிமாற்றமாக விசுவநாத ஐயரிடமிருந்து காப்புரிமையை வாங்கி 1949ல் பாரதி மறைந்து 27வது ஆண்டில் அவரது படைப்புகளை நாட்டுடைமையாக்கியது அரசாங்கம்.
கடையத்தில் தன் கடைசி வரை வாழ்ந்தார் செல்லம்மாள். தன் பேரப்பிள்ளைகளை எப்படியாவது படிக்க வைத்துவிட வேண்டுமென்று செல்லம்மாள் அளவில்லாத தாகத்தோடு இறைஞ்சினதை அவருடைய மூத்தமகள் தங்கம்மாளின் மகளும், பாரதியின் பேத்தியுமான டாக்டர். எஸ்.விஜயபாரதி தன் நினைவுகளில் இருந்து குறிப்பிடுகின்றார்.
தங்கம்மாளும், சகுந்தலாவும் முறையே மலேசியாவில் உள்ள மலாக்கா, செரம்பான் ஆகிய நகரங்களுக்குத் தத்தம் கணவரோடு புலம்பெயர்ந்தார்கள். இன்றைக்கு அவரது பேத்தி டாக்டர்.எஸ்.விஜயபாரதி காப்புரிமை குறித்த பன்னாட்டு வழக்கறிஞராக கனடாவில் மகள்களோடு வசிக்கின்றார்.
பாரதியோ நம் எல்லோரிடையேயுமாக பெயர்களிலும், தெருக்களிலும், நகர்களிலும், ஊர்களிலும், கவிதையிலும், காட்சியிலும், வார்த்தையிலும், வரிகளிலும் நெஞ்சுரத்திலும் நீங்காமல் வாழ்கின்றான்....
ஆம் எம் கவிஞனுக்கு மரணமில்லை...
![]() |
பாரதி |
![]() |
பாரதி குடும்பத்துடன்... |
![]() |
சுதந்திரம் மாத இதழ் |
![]() |
தம்பதியாக... |
![]() |
நண்பர்களுடன்... |
![]() |
பாரதியின் மகள்கள் தங்கம்மாள்- சகுந்தலா |
![]() |
திருவல்லிக்கேணி இல்லம் |
![]() |
பாரதியின் மரணத்திற்குப் பின் செல்லம்மாள் குடும்பத்துடன். |
![]() |
சகோதரி |
டாக்டர் விஜயபாரதி மற்றும் அவரது கணவர் மறைந்த பேராசிரியர் சுந்தர் ராஜனும் பாரதி 125வது பிறந்தநாள் நிகழ்ச்சியில் கலந்துகொண்டபோது எடுத்தபடம். |
தொகுப்பு:
-கார்த்திக்.புகழேந்தி.
11-09-2015.
11-09-2015.
(கற்றதும் பெற்றதும் நூல்கள் / இணையம்)
என் கவிஞனுக்கு மரணமில்லை - பாரதி நினைவலைகள். = கார்த்திக் புகழேந்தி -
ReplyDeleteஇந்தப் பதிவு ஒரு பொக்கிஷம். அருமையான, அரிய படங்கள், அரிய தகவல்கள் அடங்கியது. எனது பக்கத்தில் பகிர்கிறேன். I am proud of You கார்த்திக் புகழேந்தி - வாழ்த்துகள் கார்த்திக் புகழேந்தி
நன்றி அய்யா! உங்கள் வார்த்தைகள் ஊக்கத்தை எப்போதும் தருகின்றன...
Deleteariya thagavludan pugai padamum arumai.
ReplyDeleteநன்றி..
Deleteவாழ்வாங்கு வாழ்ந்த கவிஞனின் வாழ்வும், அவன் மரணமும், அவன் குடும்பமும், பின்னர் அவன் சந்ததிகளும் புலம் பெயர்ந்து , அவன் போராடிப் பெற்ற சுதந்திர நாட்டில் வாழாமல், வேற்று நாடுகளில் வாழுகிறார்கள் என்பதை அறியும்போது நெஞ்சு மிகவும் கனக்கத்தான் செய்கிறது. ராஜ்குமார் பாரதி (பாடகர்) அவருக்கு எவ்வகையில் உறவு?
Deleteபாரதியாரின் மூத்தமகள் தங்கம்மா பாரதிக்கு பானு, லலிதா, விஜயா, மோகன், செல்லப்பா என்று 5 பிள்ளைகள். இவர்களில் லலிதா பாரதியின் இரண்டாவது மகன் தான் ராஜ்குமார் பாரதி.
DeleteArumayana thagavalgal.. Mikka nandri
ReplyDeleteநன்றி..
Deleteஅரிய புகைப்படங்களுடன் தகவல்....புகழேந்தி....சூப்பர்..
ReplyDeleteநன்றியும் ப்ரியங்களும்...
Deleteஅன்புநிறைந்த கார்த்திக் புகழேந்தி இந்தப் பதிவு மிக அருமை. பாரதி குறித்த தேடல்கள் ஒருபோதும் தீராநதியாகத் தொடர்ந்துகொண்டே இருக்கும்போல. அதிலும் செல்லம்மாள் பாரதி கையெழுத்துடனான பத்திரம் கண்டபோது சிலிர்ப்பாக இருந்தது. தற்போது காரைக்குடியில் பாரதியார் என்னும் எனது நூல் முடியும் தறுவாயில் உள்ளது. அதில் இந்தப் பத்திரப் பக்கங்களை எடுத்தாள விழைகிறேன். இதுகுறித்து மேலும் தகவல்கள் இருப்பின் தந்தால் இந்நூலுக்கு உதவியாகவும் இருக்கும். எனது தொடர்பு எண்- 9443190440 (கிருங்கை சேதுபதி)
ReplyDelete