Posts

Showing posts from October, 2012

புகழேந்தியும் ஒட்ட கூத்தனும் - ஒரு தற்காலக்கற்பனை

ஒட்டகூத்தரை உங்களுக்கு தெரிந்திருக்கும்... இல்லை தெரியாமலிருக்கும் ஆனால் நேற்றிரவில் எனக்கு அவரை நினைவில் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அல்லது இப்போது தெரிந்து இருப்பீர். நான் யார் என்பதாவது நினைவிருக்கிறதா? அட நான் தானைய்யா புகழேந்தி! நேற்றிரவு ! அது என்ன நேற்றிரவு. இதோ இப்போது தான்.. இதை எழுதும் போது கூடத்தான்.  என்ன திடீரென்று என்னை நினைத்து அழைக்கிறாயப்பா? என்று கூத்தரென்னருகில் வந்து கேட்டாலும் ஆச்சர்யமில்லை. ஆனால் வரவில்லை நான் தான் தேடிப்போகிறேன்.  ஆமாம் ஏன் அவரைத்தேடுகின்றேன். நான் எங்கே தேடினேன் அவரல்லவே என்னை மீனவன் எனவும் வீரனா என்றும் கேட்டுப்போயிருக்கிறார், இந்த சோழக்கிளங்கவிஞர்களுக்கு வேலையே இல்லாமல் சங்கப் பாண்டியரை சரமாரியாய் வறுத்தெடுப்பதே வேலையாய் போயிற்று. என்னைய்யா பழங்கதை சொல்கிறீரென்கிறீர்களோ! இல்லை அப்படியானால் உங்களுக்கு புகழேந்தி புதியவன். யார் புகழேந்தி? பாண்டிய அவையில் ஒரு பெருங்கிழவனா? இருக்கலாம்! இல்லை இளம்வயது நரம்பு புடைக்க தமிழ்சாறுகுடித்த கரிய உடல் இளையோனா ? அதுவும் இருக்கலாம். இல்லை பாண்டியத்தேவிக்கு படையல்ச்சீராக சோழநாடு கொடுத்த பெ

செய்யாத குற்றங்கள்...

Image
அய்யைய்யோ...கணக்கு.... பள்ளிக்கூட காலத்திலும் சரி... பணிபுரியும் காலத்திலும் சரி  இலக்கியத்தில் ஆர்வமுள்ள பெரும்பாலானோரைப் போல எனக்கும் கணிதம் என்றால் ஆகவே ஆகாது. ஆனால் இன்னைக்கு கணக்கு பதிவேடுகளுக்கு மத்தியில் தான் ஜீவனம் ஓடிக்கொண்டிருக்கின்றது என்பது வேறு கதை. பள்ளிப்பருவத்தில் மற்ற பாடங்களை சுமாராகவும் தமிழ்ப்பாடத்தை விருப்பத்துடனும் படித்து விடும் எனக்கு  கணிதத்துடன் எப்போதும் ஜல்லிக்கட்டுதான். அது ஒன்பதாவது வகுப்பு .... லாஸ்டுக்கும் முன்னாடிக்கும் இடைப்பட்ட பெஞ்சில் உட்கார்ந்து கொண்டு... கணிதப்பாட வேளையில்  பூவாத்தலையா விளையாடிக்கொண்டிருந்தோம் நானும் ஷேக் தாவூதும்... அப்போது நங்...என்று குறி தவறாது டஸ்டர் கட்டை ஷேக்கின் மண்டையை பதம் பார்த்தது... எங்க வாத்தியை எல்லாம் ஒலிம்பிக்ஸ்க்கு அனுப்பி இருக்கலாம்! ககன் நரங்கை எல்லாம் தூக்கி சாப்பிட்ருவார்.   'கணிதத்தில் மட்டும்தான் உங்கள் ஜீரோ மதிப்பெண் வாங்க முடியாது வாழ்க்கையே கணக்குத்தான் என்றார்.. ஆனால் அதை ஒரு சாதனையாக செய்து அடிக்கடி அவரை வெறுப்பேற்றிக் கொண்டிருக்கும் அவரது முதல் தர சிஷ்யப்பிள்ளையான என்னை அவர்... இவனை அடிச

இன்றைய செய்திகள் ... அனைத்தும் நிஜம் தானா?

இன்றைய நவீன உலகின் மிகப்பெரிய அபாயம். செய்திச் சானல்கள் என்றால் நிச்சயமான உண்மையும் அதுவே! 24 மணி நேரமும் சுவாரஸ்யமும், விறுவிறுப்பும் மிகுந்த தீனி இவர்களுக்கு தேவை.  நான் நினைக்கிறேன் தமிழ்நாட்டு செய்தித் தொலைக்காட்சிகளை விட தினசரிச் செய்திகள் பெரும்பாலும் குறைவானைவையாய இருக்கும் என்றே! பழைய நகைச்சுவை ஒன்று உண்டு. செய்தியே இல்லாமல் போனால் செய்தித்தாள்களில் என்ன செய்தி வரும்? அதற்கென்ன பேஷா போச்சு.. இன்று திருநெல்வேலியில் எந்த செய்தியுமே இல்லை! கடந்த நூற்றாண்டுகளில் இதுபோல நிகழ்வுகள் ஏதும் நடந்ததே இல்லை. அதேபோல திருநள்ளாறிலும் செய்திகளே இல்லை.....ன்னு அதையே செய்தி ஆக்கி விடுவார்கள்! என்பதாக அந்த நகைச்சுவையின் அர்த்தம் இருக்கும். யதார்த்தத்தில் ஒவ்வொரு நிமிடமும் அப்படியான சுவாரஸ்யங்கள் நிகழ்வதில்லை. ஆகவே இந்த செய்திச்சானல்கள் தங்களுடைய மாஸ்டர் மூளையைப் பயன்படுத்தி ஒரு செயற்கையான பரபரப்பு திட்டமிட்டு உருவாக்கப்படுகிறது. அது, மத்திய பிரதேசத்தின் சிறு கிராமத்தில் ஒரு சிறுத்தைப்புலி கிணற்றுக்குள் விழுந்துவிட்ட செய்தியாக இருக்கும்.  கிணற்றை சுற்றி பதினைந்து லைவ் வாகனங்கள் நின்றுகொண்