Posts

Showing posts from August, 2014

சென்னை 375*

Image
1.        தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட் டது கி.பி. 1639 , ஆகஸ்ட் 22 ஆம் நா ள் . அதாவது இன்றுடன் 375- வது வயதினை சென்னை நகரம் அடைந்திருக்கின்றது . அதனைக் கொண்டாடும் வகையில் சென்னை தினம் 375 கொண்டாடப்படுகின்றது. 2.        பத்திரிகையாளர்களான சசி நாயர் , மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா , மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004 உருவாக்கியதே இந்த சென்னை தினம். 3.        முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி , உணவுத் திருவிழா , மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 4.        சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1 ம் நூற்றாண்டு முதல் பல்லவ , சோழ , மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்களும் சென்னை கடற்கரை மூலம் வந்துள்ளனர். இந்தப் பகுதி முதலில் சென்னப்பட்டணம் என்ற சிறிய கிராமமாக இருந்தது. 5.      வந

க்றிஸ்டி - ஒரு டைரிக்குறிப்பு

Image
1999 *** அது ஏன் க்றிஸ்டி மட்டும் அப்படி ஈர்த்துவிடுகிறாள் . எல்லோரைக்காட்டிலும் . அழகாய் இருப்பதினாலா .. அப்படிச் சொல்வதென்றால் ப்யூலாவும் தான் அழகினள் . பார்ப்பவர்களை எல்லாம் ஈர்த்துவிட க்றிஸ்டி ஒன்றும் அப்சரஸும் இல்லை . க்றிஸ்டி உள்ளத்திலிருந்து அழகானவள் .  அப்படித் தான்   நான் நினைத்துக் கொண்டிருக்கிறேன் . தாராளமாக நீங்களும் ஒப்புக்கொள்வீர்கள் .  ஈகிள் புக்செண்டரில் ப்ரில் இங்க் பாட்டில் வாங்க வரும்போதெல்லாம் க்றிஸ்டியை அவள் தங்கை ஜேஸ்ப்ரினோடு பார்த்திருக்கிறேன் . முச்சூடாக வெள்ளை நிறம் . கொஞ்சம் தாங்கிப் பிடிக்காவிட்டால் உருகி விழுந்துவிடுவாள் போல ஐஸ்க்ரீம் தேகம் . மிரட்சியான கண்கள் . இங்க் பாட்டிலைத் தவிர உலகில் எதுவுமே முக்கியமற்றதைப் போல இறுகப் பிடித்துக் கொண்டு ஜேஸ்ப்ரினோடு நடந்து சொல்லும் போது ரசித்திருக்கிறேன் . ஜேஸ்ப்ரின் அவள் தங்கை . க்றிஸ்டி கலகல பெண் எல்லாம் இல்லை .. பிரகாசமான ஒளிபோல அவள் பார்வை இருக்கும்தான் , ஆனாலும் அதன் பொருட்டு அவளிடம் சின்ன சப்தம்கூட எழாது , ப