உலக புகைப்பட நாள் (World Photographic Day)

உலக புகைப்பட நாள் (World photograph day) இன்று ஆகஸ்டு 19.

19ம் நூற்றாண்டின் துவக்கத்தில், லூயிசு டாகுவேரே என்பவர், "டாகுரியோடைப்' எனப்படும் புகைப்படத்தின் செயல்பாட்டு முறையை  வடிவமைத்தார். 1839ம் ஆண்டு ஜனவரி 9ம் தேதி  "பிரான்ஸ் அகாடமி ஆப் சயின்ஸ்” இம்முறைக்கு  ஒப்புதல் அளித்தது. ஆகஸ்ட் 19ம் தேதி, பிரான்ஸ் அரசு "டாகுரியோடைப்' செயல்பாடுகளை "ப்ரீ டூ தி வேர்ல்டு" என உலகம் முழுவதும் அறிவித்தது. 

இதனை எடுத்துரைக்கும் வகையில் இன்றைய தினம் உலக புகைப்பட தினமாக கொண்டாடப்படுகிறது. 
            உலகின் முதல் புகைப்படக்கருவி / செயல்படும் விதம் 
                             உலகின் முதல் புகைப்படம்.உலகை உலுக்கிய புகைப்படங்கள் சில


  “It all started with a man in a white shirt
who walked into the street and raised his right hand
no higher than a New Yorker hailing a taxi,

James Barron wrote the following day in The New York Times.

1989ம் ஆண்டு ஜூன் 5-ம் நாள் சீனாவின் பெய்ஜிங் தியானன்மென் சதுக்க எதிர்ப்புப்போராட்டத்தின் போது போராட்டக்கார்ர்களை ஒடுக்க அணிவகுத்து வந்த டாங்குகளை வழிமறிக்கும் விதமாக தனிமனிதனாக நின்றவரின் புகைப்படம்

யார் என்ன பெயர் என்பதெல்லாம் தெரியாத அந்த மனிதரின் புகைப்படம் மறுநாள் நியுயார்க் டைம்ஸ் நாளிதழில் வெளியாக உலகப்புகழ் அடைந்தார். 20-ம் நூற்றாண்டின் சிறந்த புகைப்படமாக அந்த புகைப்படம் அமைந்தது.


ஒரு போரையே நிறுத்தும் வல்லமை ஒரு புகைப்படத்துக்கு இருந்தது. ஆம்!

       ஜூன் 8, 1972 ஆம் ஆண்டு வியட்நாம் போரின் போது இப்படம் எடுக்கப்பட்டது. தன் கிராமத்தின் மீது போடப்பட்ட குண்டுகளால் எரிக்கப்பட்டு தீக்காயங்களோடு ஓடிவரும் இச்சிறுமியின் பெயர் 'Phan Thi Kim Phuc'. இந்தப் பெண்ணின் கதறல் உலகம் முழுவதும் எதிரொலிக்க இந்த புகைப்படம் காரணமாக அமைந்த்து.


இப்படத்தை எடுத்தவர்
'Nick Ut' என்னும் வியட்நாமியப் புகைப்படக்காரர். அந்த ஆண்டுக்கான 'புலிட்சர் விருது' பெற்றது இந்த புகைப்படம். 


30 ஆண்டுகளுக்குப் பின் 'Phan Thi Kim Phuc'.
ஒரு புகைப்படத்திற்காக உலகப்புகழ் பெற்று புலிட்சர் விருது பெற்று
அதே புகைப்படத்திற்காகவே தற்கொலையும் செய்து கொண்டவரும் உண்டு.

கெவின் கார்ட்டர்- தென்னாப்பிரிக்காவின் ஜோஹன்ஸ்பர்க்கைச் சேர்ந்தவர் 1993 இல் சூடானில் நிலவிய பசி பஞ்சத்தில் தவிக்கும் மக்களின் நிலைகளைக் காமிராவில் பதிவு செய்தார். பசியினால் உடல்மெலிந்த சிறுமி ஐக்கியநாடுகள் சபையின் உணவளிக்கும் கூடாரத்திற்குத் தவழ்ந்து சென்று கொண்டிருப்பதை படமெடுத்தார் கெவின். அச்சிறுமியின் உயிர் எப்போது பிரியும் அவளை இரையாக்கிக்கொள்ளலாம் எனக் காத்திருந்து வல்லூறு ஒன்றையும் சேர்த்தே க்ளிக் செய்ய 1993 மார்ச் திங்கள் 26 ம் தேதி நியூ யார்க் டைம்ஸ் நாளிதழில் இந்த புகைப்படம் வெளியானது.
          
சொல்லிவைத்தாற்போல எல்லா வாசகரும் கேட்ட கேள்வி  “அந்த சிறுமி என்னவானாள்? உயிர்பிழைத்தாளா?” என்பது தான் காட்டரிடம் பதில் இல்லை. 1994 மே திங்கள் 26-ம் நாள் கொலம்பிய பல்கலைக்கழகத்தில் புகைப்படத்திற்கான புலிட்சர் விருதப் பெற்றுக்கொண்டார். ஆனாலும் சிறுமியை காப்பாற்றாத குற்ற உணர்ச்சி அவரை சுழன்றடிக்க, சில நாட்கள் கழித்து ஜோஹன்ஸ்பர்க் கடற்கரையில் தன் காரிலேயே தற்கொலை செய்துகொண்டார். காரில் கிடந்த கடிதம் இப்படி தொடங்கியது..  I am Really, Really Sorry. 
January 12, 1960 ஜப்பானிய சோசலிச கட்சியின் தலைவராக இருந்த Asanuma என்பவர் ஒரு எதிர் மாணவனால் கொல்லப்படுவதற்கு சில விநாடிகள் முன்.
1963 தெற்கு வியட்நாமில் Thich Quang Duc என்ற பெளத்த துறவி அரசாங்கத்தின் கொடுமைகளை எதிர்த்து தீக்குளிக்கும் காட்சிஎரியும் பொது இந்த துறவி அசையவுமில்லை எந்தவொரு சத்தமும் போடவில்லை.இராணுவ துருப்புகளின் முன் வீரம் காட்டும் சிறுவன்.

.
 போரில் தாய் தந்தையை இழந்த குழந்தை


                                                            
போபால் விசவாயுக் கசிவின்
அடையாளமாகிப்போன புகைப்படம்.


2013-க்கான சிறந்த புகைப்படத்திற்கான  
சோனி விருது பெற்ற புகைப்படம். 

2015-க்கான சிறந்த புகைப்படத்திற்கான  
சோனி விருது பெற்ற ஜான் மூரின் புகைப்படம். 
2015 Sony World Photography Awards

Comments

  1. படங்கள் ஒவ்வொன்றும் அசத்தல்..!

    ReplyDelete
  2. அருமையான தகவல்கள்... வாழ்த்துகள்... நானும் ஒரு ஒளிப்படக் கலைஞன்... எனக்கு இந்தத் தகவலை அறியத் தந்தமைக்கு நன்றி

    ReplyDelete
  3. அற்புதம். I am really really sorry புகைப்படம் கண்களில் நீர் கசிவதைத் தடுக்க முடியவில்லை. எல்லாப்புகைப்படங்களும் நெகிழ வைக்கின்றன. சூப்பர். ரசனைக்குரிய பதிவுகள்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

வேட்டையன்கள்

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா