Posts

Showing posts from November, 2017

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

Image
2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான்.  அன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன்.  முழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் எ