Posts

Showing posts from July, 2015

சுரேந்திரனின் கதை

Image
சுரேந்திரனின் கதை எங்கே தொடங்கும் என்றெல்லாம் எனக்குத் தெரியாது. அவன் அந்தக் கதையை எங்கே முடித்திருப்பான் என்பது பற்றியும் எனக்குத் தனியாக எந்த புரிதலுமிருக்க வில்லை.ஆனால் அவன் எப்படியாவது தன் கதையை எழுதிவிடச் சொல்லி என்னிடம் கேட்டுக் கொண்டே இருந்தான். எனக்கு அவன் அப்படிக் கேட்பது வேடிக்கையாக இருந்தது. கதைகளை எழுதச் சொல்கிற நிறைய பேரை நான் அப்படியாகத் தான் பார்த்துக் கொண்டிருந்தேன். இருந்தேன் என்ன இப்போதுவரை அப்படித்தான்.
காது வலிக்க வைக்க தன் கதைகளைச் சொல்வார்கள். அதை எழுத்தில் பார்க்க அவர்களுக்குப் பிடிக்கும் போல. இத்தனைக்கும் நான் கதை எழுதுகிறவனில்லை. ஆனாலும் என்னிடம் ஏன் சொல்கிறார்கள் என்று நானும் யோசிக்கவே இல்லை. சொல்கிறவர்களுக்கு அத்தனை ரசனையாக இருக்கும் கதை, கேட்கிற எனக்கு சலிப்பாகவே இருந்திருக்கிறது.
நான் ஒருபோதும் யாருடைய கதையையும் காது கொடுத்துக் கேட்பதில்லை. சுரேந்திரனுக்கு இந்த உண்மை தெரியாததால் அவன் தன்னுடைய வாழ்க்கையில் எதிர்கொண்ட சிக்கல்களை எல்லாம் அதி தீவிரமாய் என்னிடம் சொல்லிக் கொண்டேயிருப்பான்.
பிள்ளையார்கோவில் வேப்பமரத்தடிதான் அவன் கதைசொல்லுமிடம். காவிப் பட்டையும…

சாயிபு நண்பன்.

Image
சுப்பிரமணியபுரத்திலே பெரிய வீடு பைசலுடையது. சாயிபுமார் வீடு என்றாலும் அவர்களைத் தவிர்த்து வாய்க்கால் கரைக்கு அந்தப் பக்கம் வேறு சாயிபு ஆட்கள் இல்லை. பெரிய வீட்டுப் பையனான பைசல் பத்தாவது வரைக்கும் எங்கள் பள்ளிக்கூடத்தில் தான் படித்தான்..  ஊரிலேயே முதல் முதலில் கம்ப்யூட்டர் வாங்கின வீடு அவர்களுடையது. பைசலின் அத்தா ஊரறிந்த கால்நடை மருத்துவராக இருந்தார். ரயில்வே பீடர் ரோட்டுக்கு முன்னால் இருக்கும் பள்ளிவாசல் நிலம் இவர்களுடையது தான்.  
பள்ளிக்கூடத்திலே எனக்கென்று ஒரு கேங்க் இருந்ததால்  எத்தனைத் தப்புத்தண்டாக்கள் நிகழ்ந்தாலும்  “கூப்பிடு குணசேகரனை” என்பார்கள். காலப்போக்கில் அது ஒரு சொல் வழக்காகவே மாறியிருந்தது. ஒன்று தப்பை விசாரிக்க அழைப்பார்கள். அல்லது “நீ பண்ணலைன்னா வேற யாரு பண்ணிருப்பா சொல்லு” என்பார்கள். எங்கள் பள்ளிக்கூடத்தில்  வம்புதும்புகள் செய்வதற்கென்றே வடிவமைக்கப்பட்ட  காதாப்பாத்திரத்தை நான் ஏற்றிருந்தேன்.
பைசலுக்கும் எனக்கும் நெருக்கம் தொடங்கியது எட்டாவது துவக்கத்தில். தெளிவாகச் சொல்ல வேண்டுமென்றால்... காலாண்டு கொஸ்டீன் பேப்பரை கைமாற்றிக் கொண்டதிலிருந்து... 
முத்துக்குமார் என்ற மணப்ப…

தூரக்கிழக்கு கரையோரம் தான் தாழப்பறந்து வரும் மேகம் தான்!

Image
கிருபா மோசஸ் வாத்தியார் வீட்டில் தான் அப்போது கிராமபோன் இருக்கும். பித்தளையில் வாய் விரிந்து நிற்கும் கூம்பு பாத்திரத்திற்குள் எப்போது தலையை விடலாம் என்று பார்க்கும் நாயின் படம் போட்ட, வட்டமான ஹெச்.எம்.வி இசைத்தட்டுகளை சதுர அட்டையில் பேக் செய்து வைத்திருப்பார்கள்.
ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போய்விட்டு வந்ததும், மத்தியானத்து கோலா உருண்டையும், கோழிக்கறியும் பொறித்து வேகும் வரைக்கும் வெஸ்டர்ன் இசையில் சிம்பொனிகள் ஒலித்துக் கொண்டேயிருக்கும். கிர்ர்ர்ர் என்று எப்போதாவது இரைந்ததும் மோசஸ் வாத்தியாரின் மகன் சாம் வந்து, முள்கட்டையை விலக்கி, இசைத்தட்டை திருப்பி, துடைத்து... இப்படி  என்னென்னவோ செய்வார். கூர்ந்து கவனித்துக் கொண்டேயிருப்பேன்.
விக்டர் வீட்டில் ரேடியோகிராமுடன் கூட கிராமபோன் இருந்தது. அதன் அளவைச் சரியாகச் சொன்னால் இரண்டு கம்ப்யூட்டர் டேபிள்களை நீளவாக்கில் வைத்தால் எப்படியிருக்கும். அப்படியொரு இசை மேசைக்குள் இடதுபக்கம் கிராமபோன், வலதுபக்கம் ஏதோ பழைய ரஷ்யப் படங்களில் வரும் ரகசியகுறியீடுகளை அனுப்பும் கருவி போல நிறைய திருகல் உருண்டைகளுடன்  ரேடியோகிராம் இருக்கும்.
முன்னாள் மிலிட்டரிக்கா…

எங் கதெ - இமையம்

Image
எதேச்சையாக எழுத்தாளர் இமைய(ம்)த்தைச் சந்தித்தேன். முரளிகிருஷ்ணன் தான் அறிமுகப் படுத்தி வைத்தார். சாவுச் சோறும், கோவேறு கழுதைகளும் இமையம் என்ற படைப்பாளனோடு என்னை ஏற்கனவே வாசிப்பினால் நெருக்கி விட்டிருந்தது.

சமீபத்தில் வந்த “என் கதெ” வாங்கிப் படிக்க நினைத்துக் கொண்டேயிருந்தேன். வாசிக்கிறவன் பிரச்சனை இந்த “நினைத்துக் கொண்டே இருப்பது மட்டும் தான்”. இறுக்கக் கையைப் பற்றிக்கொண்டு என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். நிகழ்காலத்து இறப்புகளின் மீதான கதையாளர்களின் பார்வை படாதது குறித்து அவருக்குள்ளிருந்த  உக்கிரமான வார்த்தைகள் சில மிதந்து விழுந்தன.

நெருக்கடிகாலத்தில் இல்லாமலாக்கப்பட்ட ராஜனின் தந்தை தன் ,அகனை எழுதுகிறார். மலையாளத்தில் பாலியல் தொழிலாளியான பெண்ணொருத்தி தன் கதைகளை எழுதுகிறாள். இங்கே எழுதுகிறவர்கள் தன் பழங்கதைகளை இன்னும் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்களென சில நிமிடங்களுக்குள் அவர் பார்வையை தீட்டிக் காண்பித்தார்.

 “எங்கதெ” குறுநாவலை கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டேன். பேரன்புடன் தம்பிக்கு என்று எழுதியிருந்தார். சில மணிநேரங்களுக்குள் பாதிப் பக்கங்களை வாசித்து நகர்ந்திருந்தேன்.  க…

1550கி.மீ மோட்டார் சைக்கிள் பயணம்

Image
கடந்த மாதத்தின் இறுதியில் ஒரு வாரம் திட்டமிட்டபடி ஊருக்குச் சென்றுவிட்டு திரும்பினேன். இடையில் பல சுவாரசியமான சம்பவங்கள் நிகழ்ந்தது. முதல் சுவாரஸ்யமே சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு டூவீலரில் புறப்பட்டது.. (தலைகவசம் உட்பட)
28-06-2015 மாலையில் சென்னையிலிருந்து ஈசிஆர் சாலை பிடித்து புதுச்சேரி- கடலூர்- காரைக்கால்-நாகப்பட்டினம்-திருத்துறை பூண்டி - அதிராமப்பட்டிணம்- தேவிப்பட்டிணம்- கீழக்கரை- சாயல்குடி- வேம்பார் வழியாக தூத்துக்குடி வந்து சேரும்போது மணி ஒன்பது. தூத்துக்குடியில் சேகர் ஏற்கனவே நகரத்தின் மையத்தில் அறை ஏற்பாடு செய்து தந்திருந்ததால் அங்கேயே புறப்பட்டு சந்திரசேகர் அவர்களின் இல்லத் திருமணத்தில் நேரம் பிந்தாமல் கலந்துகொண்டோம்.
இப்படி நீண்டதூரம் மோட்டார் சைக்கிளில் பயணங்கள் போவதை நிச்சயம் வீட்டில் சொன்னால் அனுமதி கிடைக்காது என்பதால் மேலிடத்தில் மட்டும் அனுமதி வாங்கிவிட்டு இந்த பயணம் துவங்கி இருந்தது. காலை ஐந்து மணி முதல் கீழக்கரை-  சாயல்குடி - வேம்பார் பகுதிகளில் கேமிராவுக்கு வேலை கொடுக்க ஆரம்பித்தாயிற்று... 
வறட்சி மிகுந்திருந்த இந்த பகுதிகளில் தேங்கின மழை நீர் குட்டைகளிலும், அதனு…

நெருப்பு ருசி குடித்த மனிதர்கள்

Image
வாடைக் காத்தும் கடல் காத்தும் தங்களுக்குள்ள வினோதமா ஒரு கூட்டணி வச்சுகிட்டு தென்னை மரங்க கூட சத்தமாய் ஏதோ பேசிக் கிட்டிருக்கும் போல.
இசக்கியம்மன் கோயில் கொடையன்னைக்கு இப்படித்தான் தூறலும் காத்தும் கலந்து அடிச்சு கீத்துப் பந்தலை வாய்க்கா கரை வரைக்கும் கொண்டு போயிடுச்சு.
காத்து இப்படி பொரட்டி எடுக்கும் போது பன மட்டைகளை கொழுத்துறத நீங்க பாக்கணும். கருக்கு மட்டை இங்க இருக்க நெருப்பு ஏழடிக்குத் தள்ளி சாய்ஞ்சி மேலமேல ஏறி , கீழ விழுந்து திரும்ப எழும்பும்.மெட்ராஸுக்கு வந்த புதுச சோளக் குருத்தை கரியடுப்பில் வாட்டினதை உத்து உத்து பாத்துகிட்டிருந்தாங்க சனமெல்லாம். வெங்கல பானை அடிக்கும் ஆசாரியண்ணன் வீட்டு நடூ கூடத்துல மாட்டுவண்டி பைதாவைச் சுத்துனா கங்கு பறக்க தீ புடிக்கும்.அப்போல்லாம் அது பெரிய நெருப்பு வித்தை.
பாளையங்கோட்டை வீட்டுக்குப் பின்னாடி அப்படியே குளம் தான். வேலிக்காத்தான் தாண்டி எந்த ஜந்தும் தோட்டத்துக்குள்ளாற நுழைச்சுடாம  தட்டி மறிக்குதது தான் ஆச்சிக்கி முக்கியமான வேலை. கிணத்தில் தண்ணி இறைக்கிறதெல்லாம் ரெண்டாம் பட்சம் தான்.
அந்த குளந்தான் எங்க பயலுவளுக்கு ஆடுகளம். குளத்து வரப்பில நிக்கும் …