Tuesday, 15 November 2016

அவளும் நானும் அலையும் கடலும்மழை இன்னும் கொட்டித் தீர்த்தபடியேதான் இருந்தது. நாளைக்குச் சந்திக்கலாம் என்று கடைசியாக ஒரு குறுஞ்செய்தி வந்திருந்தது அவளிடமிருந்து. கொடிய இரவின் நீளத்திற்கு அது இன்னமும் அகலத்தைக் கொடுத்துக் கொண்டிருந்தது. போகலாமா வேண்டாமாவென்ற குழப்பம் ஒருபக்கம். போனாலும் என்னத்தைப் பேசுவது புரண்டு புரண்டு படுக்கிறேன் உறக்கம் பிடிக்கவில்லை கண்களுக்கு.
முதல்தடவை திருவான்மியூர் புத்தகக்கடையில் அவளைச் சந்திக்கும்போதே நீண்டநாளாகத் தெரிந்தவனைச் சந்தித்தது போல, அவளாகவே பெயரைச் சொல்லி அழைத்தாள். கிட்டேவந்து, ‘உங்க புக் வாங்கத்தான் வந்தேன்’ என்றாள். பெயரைச் சொல்லி அறிமுகப் படுத்திக் கொண்டாள். படித்துக்கொண்டே ஏதோ ஒரு என்.ஆர்.ஐ ட்ரஸ்ட்டில் இயங்குவதாகச் சொன்னாள். கையில் வறீதையா கான்ஸ்தந்தின் எழுதின ‘என்னைத் தீண்டின கடல்’ இருந்தது. வெள்ளை நிற சல்வார், வெறும் நெற்றி, குதிரைவால் தலைமுடி என்று எந்த களேபரங்களும் இல்லாமல் பளிச்சென்று சிரித்தாள்.
*
இரண்டாவது தடவையில் எழும்பூர் ரயில் நிலைய நடைமேடையில் எதேச்சையாக அந்தச் சந்திப்பு நிகழ்ந்தது. மின்சார ரயிலில் இப்போதுதான் வந்திறங்கியதாகச் சொன்னாள். “நீங்க!?” என்ற அவளுடைய மிகச் சுருக்கமான கேள்விக்கு 'திருவல்லிக்கேணி வரைக்கும் ஒரு வேலையாக....' என்ற முடிவுறாத பதிலைச் சொன்னேன். படிக்கட்டுகளில் இறங்கி நடக்க ஆரம்பித்தோம்.
“அந்திமழையில் வந்திருந்த கதை வாசிச்சேன். எக்ஸ்டார்னரி” என்றாள். கதையைப் பற்றி இன்னும் ஏதாவது சொல்வாள் என்று எதிர்பார்த்தேன். ம்ஹூம் அதற்குமேலே அதுபற்றி ஒருவார்த்தையும் வரவே இல்லை. அளவுக்கு அதிகப்படியாக வார்த்தைகளை உதிர்க்கிறவள் இல்லைபோல என்று நினைக்கும்போதே திரும்பிப் பார்த்துச் சிரித்தாள். மனசுக்குள் நினைத்தது கேட்டிருக்குமோ!
“எனக்கு இப்போ சூடா ஒரு காபி குடிக்கணும். உங்களுக்கு!” என்றபோது வந்தா வா வராட்டிப் போ என்பதுபோல இருந்தது. ரோசம் எதுவும் பார்க்காமல் போகலாமே என்று கூட ஒட்டிக்கொண்டேன். கென்னத் சந்துக்குள் நுழைந்து அங்கிருந்த தரை லோக்கலான டீக்கடையில் தனக்கொரு காபி சொன்னாள். ஆவி பறந்த கண்ணாடித் தம்ளரை ஒரு மடக்குக் குடித்துவிட்டு ‘ஓ சாரி உங்களுக்கு சொல்லவே இல்லை பாருங்க, அண்ணா இன்னொரு காபி’ என்றாள். கூடவந்து அசிங்கப்பட்டதாக இருந்தது. இன்னைக்கு யார் முகத்தில் முழித்தோமோ!
*
நண்பர் ஜவஹரின் அடையாறு இல்லத்தில் நடந்த முழுநாள் விருந்தில் கலந்து கொண்டிருந்தேன். இரவு நெடுநேரம் பிந்தி, ஓலாவில் வீட்டுக்குத் திரும்பும்போது, வாட்ஸப்பில் அந்தச் செய்தி வந்திருந்தது.
‘கலாபம் ஆடும் கனவில் வாழ்கிறேன்’ அப்படின்னா என்ன அர்த்தம்..?’ யார் என்ன என்று தெரியாமல் கலாபத்திற்கான அர்த்தத்தை அனுப்பினேன். சிலவினாடிகளிலே அதே எண்ணிலிருந்து அழைப்பு வந்திருந்தது. நான் தான் ஜெ., என்றாள். குரல் கேட்டதுமே சட்டென்று யாரெனப் புரிந்துவிட்டது. எண் எப்படிக் கிடைத்தது என்றெல்லாம் அபத்தமாகக் கேட்டுவிடக் கூடாதென முடிவெடுத்துக் கொண்டேன்.
“சங்கப் பாடல்களில் கலாபம் என்று எங்கேயாவது சுட்டிக் காட்டியிருக்கிறார்களா?” என்றாள். “நிறைய இருக்கிறதே! சிறுபாணன் ஆற்றுப்படையில் நல்லியக்கோடன் பெருமைகளைச் சொல்லும் வரிகளில் ‘மணிமயிற் கலாப மஞ்சிடை பரப்பி’ என்ற வரிகளைக் குறிப்பிட்டுச் சொல்லி விளக்கினேன். கலாபத்துக்கு வேறு பொருள்படக் கூறியிருக்கிறார்களா என்று வினவினாள். நிறைய விவரணைகளுக்குப் பிறகு அழைப்பைத் துண்டித்து, வீடு வந்து சேர்ந்தபோது மணி பனிரெண்டு.
*
நீங்கள் கலந்துகொண்டு பேசினால் நன்றாக இருக்கும் என்று திரும்பத் திரும்பச் சொன்னாள். உங்களுக்காக வருகிறேன் என்று ஒப்புக் கொண்டிருந்தேன். தேனாம்பேட்டையில் அமைந்திருந்த அந்தக் கத்தோலிக்கக் கல்லூரியில் நாட்டுப்புற கதைகளில் பெண்கள் என்ற தலைப்பில் பேச வேண்டும். பெண்கள் தினத்தை முன்வைத்து இப்படி ஒரு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். கல்லூரிக்குள் நுழையும்போதே நண்பர்கள் சிலரோடு வந்து வரவேற்றாள்.
அன்றைக்கு நீலநிற மேல் வஸ்திரத்தை கழுத்துச் சுருக்கமாகச் சுற்றி, எம்ப்ராய்டரி அலங்காரங்கள் கொண்ட கருப்பு நிற சல்வார் அணிந்திருந்தாள். கண்களுக்கு மையிட்டு இமைகளை ஒழுங்குபடுத்தி இருந்தாள். வெள்ளையும் நீலமும் கலந்த குண்டு வடிவ இமிட்டேஷன்களை தாராளமாகச் சூடியிருந்தாள். பார்வையில் படுகிறமாதிரி அவள் மட்டுமே அங்கு நடமாடுவதாகப் பட்டது. நிகழ்ச்சி முடிந்து புறப்படும்போது, கிட்டேவந்து, நன்றி என்றாள். முதல் தடவையாகக் கை குலுக்கிக் கொண்டோம்.
*
ரொம்ப உற்சாகமாக இருந்தது அன்றைக்கு காலைத் தூங்கி எழுந்தபோது. இரவு முழுக்க அவளோடு குறுஞ்செய்திகளில் பேசிக்கொண்டிருந்தேன். நிறைய இலக்கியமில்லாமல் தனிப்பட்ட விஷயங்களைப் பகிர்ந்துகொண்டாள். உங்களுடைய அந்தப் புத்தகத்தை வாசித்து, பிடித்துப்போன பிறகே, வேண்டுமென்று தேடிவந்து உங்களிடம் அறிமுகமாகிக் கொண்டேன் என்றவள் சொன்னபோது கிளர்ச்சியாக இருந்தது. நீங்க வாங்க போங்க எல்லாம் வேண்டாம். வசந்த் என்றே… குறுக்கிக்கொள்ளச் சொன்னேன்.
நீ நான் ஆகிப் போயிருந்த அதேநாளில், இதுவரைக்கும் ஒரு கதையைப் பற்றியாவது ஒரு வார்த்தை பேசியிருப்பாயா! வாசிக்காமலே வாசித்ததுபோல பாவ்லா பண்ணிக் கொண்டிருக்கிறாய் ஜெ., நீ..! என்று சேட்டையாகச் சீண்டினேன். மழுப்பிக்கொண்டே போனவள் எதிர்பாராத தருணத்தில் பொசுக்கென்று உடைந்து அழுதுவிட்டாள். என்ன ஏதென்றே தெரியாமல் விக்கித்து நிற்கிற நொடியில், ‘நான் உன்னுடைய அப்பாவைப் பற்றினக் கதையில் என் அப்பாவையே பார்த்தேன். அவர் இல்லாத காரணங்களால் பிரச்சனைகள் எழும்போதெல்லாம் மனசுக்குச் சங்கடம் தீர உன்னுடைய அந்தக் கதையைப் படித்துக்கொள்வேன், கண்ணீர் நிரம்பி ஓடும். நிம்மதியாகத் தூக்கம் வரும். அப்பா கனவில் வந்து தலையை வருடிக் கொடுப்பார் என்றாள். உணர்வு ரீதியாக இப்படி ஒரு பதில் அவளிடமிருந்து வரும் என்று நான் நினைக்கவே இல்லை.
*
நாங்கள் அந்த நூலகத்தின் பின்னால் உள்ள கல் இருக்கையில் ஒருவருக்கொருவர் இரண்டடி இடைவெளிவிட்டு அமர்ந்திருந்தோம். நாகலிங்க மரத்தின் உதிர்ந்த பூ ஒன்றைக் கையில் பிடித்துச் சுற்றிக்கொண்டே இருந்தாள். இரண்டொரு நாளுக்கு முன் மழை பெய்திருந்த பிறகான சுத்த வாசனை காற்றில் அடித்தது. பழைய செங்கல் கட்டடம் பாசி பிடித்து அமைதியோடிருந்தது. அமைதியைக் கலைத்து, ‘ஏன் அப்படியே பார்த்துட்டு இருக்கே!’ என்றாள். அடக்கமாட்டாமல், உன் கண்கள் ரொம்பத் தனித்துவமானது. யாராவது ஒரு ரெண்டு வினாடி சேர்ந்தமாதிரி அதைப் பார்த்துட்டே இருந்தான்னா செத்தான். தயவு செய்து உன் கொலைக்கருவியைப் பத்திரமாகப் பார்த்துக்கொள் என்றேன். பூவை என்மீது தூக்கி எறிந்தாள். நாகலிங்க மரத்திற்கு குண்டு பொழியும் மரம் என்ற பேர் ரொம்பப் பொருத்தம்.
*
“வேம்பின் பைங்காய் என்தோழி தரினே, தேம்பூங் கட்டி என்றனிர் இனியே!” என்று பாடினபோது அர்த்தம் கேட்டாள். பச்சை வேப்பங்காயைக் கையிலெடுத்து தலைவனுக்குத் தருகிறாள் தலைவி. நீ தந்தால் அது தேன் சிந்தும் பூங்கட்டி என்று தலைவன் அதனை உண்கிறான். இதெல்லாம் அசட்டுத்தனம் என்றாள். இருக்கட்டுமே என்றதும் சிரித்துக்கொண்டாள். இப்படிக் காலநேரமில்லாமல் ஓயாமல் பேசிக்கொண்டே இருந்தோம்.
புத்தகங்களின் வரிகளை, சங்கப் பாடல்களை மேற்கோளிட்டு விளக்கங் கேட்டுக்கொண்டே இருப்பாள். அலைப்பேசிக்கு ஓய்வே கொடுப்பதில்லை. அவளுக்குப் பிடித்த பாடலையே அலிப்பொலியாக வைத்திருந்தேன். கண் கண்ணாடிகள் அணிவதைத் தவிர்த்துவிட்டு லென்சுக்கு மாறச் சொன்னாள். இருட்டும் அரக்குமான சட்டைகளைத் தவிர்த்து வெளிர் நிறச் சட்டைகளை அவள்தான் தேர்ந்தெடுத்து வாங்கிக் கொடுத்தாள். ரெண்டுபேருக்குமே ஒருத்தரை ஒருத்தர் பிடித்திருந்தது. மிகச் சரியாகச் சொன்னால், பழகின இரண்டாவது வருடத்தில் காதல் என்கிற பூ மொட்டவிழுகிற பருவத்தின் நுனியில் நின்று கொண்டிருந்தோம்.
*
“எனக்கு உன்னைப் பிடிச்சிருக்கு ஜெ., அதை நான் உனக்குச் சொல்லத் தேவை இல்லை. நான் நிறைய அடிகளை வாங்கி முக்கித்தக்கி முன்னுக்கு வந்தவன். நல்ல வேலை இருக்கு. அது இல்லைன்னாலும் காப்பாற்ற சொந்தத் தொழில் இருக்கு. கொஞ்சமா எழுதுறேன். அது மனசுக்குப் பிடிச்சு செய்யும் வேலை. இப்போ அதே அளவுக்கு உன்னையும். கஷ்டத்திலயும் உன்னை நல்லாப் பார்த்துப்பேன்னு நீதான் நம்பணும். யோசிச்சுகூட சொல்லலாம்”
பட்டென்று பதில் வந்து விழுந்தது. “நான் அப்படில்லாம் உன்னை நினைச்சதுகூட இல்லை. நீ என்னோட நல்ல நண்பன். என் குடும்பத்தில் ஒருத்தன். உன்னை நல்லா தெரியும் எனக்கு. சும்மா உப்புச் சப்பில்லாத காரணத்துக்காக உன்னை மிஸ் பண்ண வைக்காத ப்ளீஸ். முடியாது. இப்படியே இருப்போமே.. ப்ளா.. ப்ளா.. ப்ளா..” அதன்பிறகு அவள் பேசின எதையும் காதிலே ஏற்றிக்கொள்ளவில்லை.
*
ஒரு விருப்பம் அதைச் சொல்லியாகிவிட்டது. அது நிராகரிக்கப் படலாம் அல்லது எந்த சாமி புண்ணியத்திலாவது ஏற்றுக் கொள்ளவும் படலாம். இரண்டில் ஏதாவது ஒன்றுதானே வழி! எனக்கு முதலாவது நேர்ந்திருக்கிறது. அதற்காக கலங்கிப் போய் அந்த இடத்திலே சரிந்து விழுந்துவிடவா வாழ்க்கையில் இவ்வளவு போராட்டங்களையும் கடந்து வந்திருக்கிறோம்.
கிட்டத்தட்ட மூன்று ஆண்டுகள் அதன்பிறகும் அதே அதே நட்போடு பொழுதுகள் கழிந்தது. எந்தச் சிக்கலும் இல்லை. சண்டைகள், சிரிப்புகள், கேலிகள், சாப்பாட்டுக் கடைகள், காபிகள், சிகரெட் என்று தொடர்ந்துகொண்டேதான் இருந்தது. எந்தப் புள்ளியிலும் மீண்டும் வேதாளமாகி முருங்கை மரத்தை நாடுகிற எண்ணம் மட்டும் வந்துவிடவே கூடாது என்ற முடிவோடிருந்தேன். நிஜத்தைச் சொன்னால் ஒரு கதை எழுதுகிறதைவிட அது ரொம்பச் சங்கடமான வேலையாக இருந்தது.
*
தூங்கி எழுந்து கடிகாரத்தைப் பார்த்தேன். மணி எட்டு இருபது காட்டியது. குளித்துப் புறப்பட்டு, பைக்கில் ஆனந்த் தியேட்டர் நிறுத்தத்தை வந்தடைந்தேன். பஸ்ஸில் இருந்து இறங்கிய வேகத்திலே வந்து முதுகில் ஓங்கிக் குத்தினாள். ‘எத்தனை போன் டா அடிக்கிறது பிசாசு!’ என்றாள். போன் அடிச்சியா எப்போ என்று பாக்கெட்டைத் தடவினேன். ஆறு மிஸ்டு கால்கள் காட்டியது. ‘பைக் ஓட்டிக்கிட்டு இருந்தேன் எரும. ஆமா நீ இன்னும் வேலைக்குக் கிளம்பல?’
‘இன்னைக்கு கோல்டன் பீச்ல ஒரு அசைன்மெண்ட். பதினோரு மணிக்கு நேரா ஸ்பாட்டுக்கு வந்துட்றதா சொல்லிட்டேன். இன்னும் ஒரு மணி நேரத்தில் அங்கே இருக்கணும். சரி டிபன் சாப்ட்டியா! வா சாப்பிடப் போகலாம்.பசி உயிர் போகுது”
‘சரி ஏறு! ஆமா, அதென்ன அப்படி ஒரு மெஸேஜ் அனுப்பி இருக்க. என்னை ஏன் வரக்கூடாதுன்ற”
“எங்க!”
“ம்ம்ம் உன் கல்யாணத்துக்குத் தான்”
“அத நாம அப்புறம் பேசிப்போம்”
“அதெல்லாம் முடியாது, எனக்கு இப்போ சொல்லு. நான் ஏன் வரக்கூடாது!”
“வரக்கூடாதுன்னா வரக்கூடாதுதான். ஏன் எதுக்குன்னுல்லம் கேக்காத!”
“சனியனே கூட வேலை பாக்குறவனுக்கெல்லாம் இன்விடேஷன் கொடுத்துட்டு இருக்க. வாட்ஸப் க்ரூப்ல இருக்குறவன்லாம் எனக்கு மெஸேஜ் சொல்றான். டிசம்பர்ல டிக்கெட் போட்டுட்டோம்னு… நீ என்னடான்னா யார்கிட்டயும் சொல்லாதன்னு என்னைச் சொல்லிட்டு இந்த வேலை பார்த்து வச்சிருக்கியான்னு கேட்டா கடைசில என்னையே வரக்கூடாதுன்னு சொல்ற..”
“ஆமா அப்படித்தான். நேரா பார்த்து வண்டியை ஓட்டு”
“இங்கபாரு இதெல்லாம் நல்லால்ல பார்த்துக்க. நீ கூப்பிடலன்னா வரக்கூடாதுன்னு தான் நினைச்சுக்கிட்டு இருந்தேன். ஆனா நீயே இப்படி வரவேக்கூடாதுன்னு சொல்வன்னு சத்தியமா எதிர்ப்பார்க்கல”
“………”
“ என்ன பிரச்சனை உனக்கு”
“எதுவுமில்ல. போ!”
*
மழை இப்போது ஓய்ந்திருந்தது. ஜெ., கல்யாணத்திற்குப் போகவா வேண்டாமா என்ற குழப்பத்தைத் தூர வைத்துவிட்டு பழைய புகைப்படங்கள் இருந்த போல்டரைத் திறந்து பார்த்துக் கொண்டிருந்தேன். ’அவளும் நானும் அலையும் கடலும்’ பாரதிதாசன் பாடல் ஒலித்தது. அவளுக்குப் பிடித்த பாடல் நான் இன்னும் மாற்றியிருக்கவே இல்லை.

-கார்த்திக் புகழேந்தி
15-11-2016.
Photo Courtesy : Hari Krishnan Photography 2012

அரிகில் பதியே - Arikil Pathiye - Song Lyrics | Oru Murai Vanthu Paarthaya | Malayalamஅரிகில் பதியே இடநெஞ்சில் 
ஆரோ மூழும் ராகம்
மிஷிகள் மொழியும் மதுரம் கினியும் 
நீ யென்னில் ஈனம்
மழையே.. மழையே  (இளவெயிலே)

என் கனவில் அவள் அறியாதே! 
தளிரறியும் புலரிகளில் மஞ்சின் தூவல் வீசி..
மெல்லே ..ஏ…  மெல்லே.. ஏ…

புதுமழையில் மெய் புனரும்… பூவின் மௌனம் 
இதழ் விரியும் ஈ ராவின்.. நிறமோகம் 
மனமறியாதே திரயுகயோ  நீ… எண்டே உள்ளம்

நின்னில் ஞான் மௌனமாய் அலியும் அனுராகம்
நின்னே தொட்டு பூமேட போரும் காற்றாய் நீலே.. 
நின்னோடென்னாய் சேரான் துடிக்கும் மோகம்
மழையே மழையே… பூ மழையே!

அரிகில் பதியே இடநெஞ்சில் 
ஆரோ மூழும் ராகம்
மிஷிகள் மொழியும் மதுரம் கினியும் 
நீ யென்னில் ஈனம்
ஓ..ஓ..

ராவில் பொன் கனவாய் 
சாரேயோடையன்னு
நீரில் நீ வரவா யால் 
என்னில் பூக்காலம்

நீயும் ஞானு மென்னும்
மறுதீரங்கள் தேடி
ஒன்னாய் சேர்ந்னு பாரும்
தேன்கிளிகள் !

நின்னே ஞான் ஏகையில்
தேடுமே சத்யயில்
நின்னிலே கித்துவான் மோகமோடே!

அரிகில் பதியே இடநெஞ்சில்
ஆரோ மூழும் ராகம் 
மிஷிகள் மொழியும் மதுரம் கினியும் நீ யென்னில் ஈனம்
மழையே ஏ...

என் கனவில் அவள் அறியாதே! 
தளிரறியும் புலரிகளில் 
மஞ்சின் தூவல் வீசி..

மெல்லே ..ஏ…  மெல்லே.. ஏ…  ஓ.... 

Movie: Oru Murai Vanthu Paarthaya | Music: Vinu Thomas 
Lyrics: Abhilash Sreedharan, K R Narayanan 
Director: Sajan K Mathew 
Starring: Unni Mukundhan, Sanusha

Thursday, 27 October 2016

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyricsதெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம்
நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே
புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும்
புளகங்ஙள் இழை நெய்‌தொரு குழல் ஊதிய போலே
குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
அழகே......
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே.......
என்னுயிரில் விடரும் பனிமலரே...

மலரே நின்னை காணாதிருந்நால்
மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே
அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால்
அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே
ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில்
அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச
தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி
ஓரோரு வர்ணங்ஙளாயி

இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில்
ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில்
தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே
அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே......
அழகே.....

குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம்
மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம்
அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம்
என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம்
அழகே....
அழகில் தீர்த்தொரு சிலையழகே
மலரே....
என்னுயிரில் விடரும் பனிமலரே...

அகலே யாரோ பாடுன் நுவோ | சார்லி Charlie | Akale Song |Tamil Lyrics
அகலே… ஏ…அகலே
அகலே...
அகலே யாரோ பாடுன் நுவோ
அந்தமில்லா காலம் கொண்டு வச்சதாரு…
எது ஸ்வப்ன ஜாலம்
பல கல்லொலமென்னொடு முல்லகெ துல்லடுமா
சந்தமுள்ளதானோ.. உள்ளனிஞ்சதானோ என்கிவிட்டதே
ஒ..ரக்ஞாத விஸ்மேய ஸ்வர்கீய சங்கீதமா…
நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ…
நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ…
நிமிஷமதோ…ஓ….ஓஹ்..ஓ… ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ ஓஹ்..ஓ…
அகலே ஏஏ…. அகலே…
அகலே நேரம் பூக்கும் மீடு
அகலே நேரம் பூக்கும் மீடு
அகலே…ஏஏ….அகலே…ஏஏ….
அகலே…ஏஏ…. அகலே…ஏஏ….
அகலே…ஏஏ………..
தானானானே தானானே தானாரெனா
தார தானே ஹோ…
தானதான தாந்தான
தான தான தான தானே….
அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ…
ஓஹ்….
அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ…ஹே.

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil


என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. Ennu Ninte Moideen


Friday, 21 October 2016

சொற்களைத் தேர்ந்தெடுத்தவர் “பாப் டிலன்”மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என, ஐந்து நோபல் பரிசுகளும் அறிவித்து முடித்த பின், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி. 

அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து கொண்டிருக்கும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்கள், அந்நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிந்த போது, போராட்ட இயக்கங்களுக்கு, டிலனின் பாடல்கள் தான் தேசிய கீதம். 50 ஆண்டுகளாக, தன் பாடல் வரிகளில் அணையாத தழல் கொண்டிருந்த இசையைத் தந்து கொண்டிருக்கிறார், டிலன். யூதப் படுகொலைகளினால், அமெரிக்காவில் தஞ்சமைடைந்த டிலனின் குடும்பம், துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்டது. 

சிறுவனாக இருந்த போது, ராபட் என்றே அறியப்பட்ட டிலன், பள்ளி நாட்களில், இசைக் குழுக்களை உருவாக்கி பாடல்களை அரங்கேற்றிய போது, 'உன்னுடையது இசையல்ல... இரைச்சல். அதன் அதிர்வுகள் எங்கள் காதுகளை அடைக்கிறது. நீ வாசித்தது போதும். கீழே இறங்கு' என்று வெளியேற்றப்பட்டார். 

மின்னசோட்டாவிலிருந்து, நியூயார்க் திசையை நோக்கி, இசைக் கனவுகளோடு புறப்பட்ட போதும், தான் ஒரு அகதி என்ற காரணத்தால், ரயிலில் இருந்து ஆற்றில் துாக்கி வீசப்பட்டார். ஆற்று வெள்ளத்தில் சிக்கித் தவித்தவரை காப்பாற்றிய பெண், டிலனுக்கு உணவளித்து, அவர் பாடல்களை லயித்துக் கேட்டார். 

கேட்டு முடித்த கணமே, 'உன் பாடல்கள் எளியவர்களுக்கானது. நீ உன் காலத்தைப் பாட வேண்டும்; உன் காலத்தில் நிகழ்வனவற்றைப் பாட வேண்டும்' என்றார். அங்கிருந்து தான் துவங்கியது, டிலனின் பயணம். 
மனித உரிமைப் போராளியும், போர் எதிர்ப்பாளருமான ஜோன் பயேஸ், தன்னுடைய இசை ஆல்பத்தில், முதன்முதலாக, டிலனை அறிமுகம் செய்தார். அவரே, பிறகு டிலனின் காதலியாகவும் ஆனார். ஆரம்ப காலத்தில், மேற்கத்திய இசை மரபுகளில், தன் பாடல்களை இசைத்தவர், மெல்ல அவற்றை ஒருபுறம் ஒதுக்கிவிட்டு, தான் வாழும் மண்ணின், மக்களின் இசையை கையிலெடுத்தார். 

இசையைத் தாண்டியும், தன் கூர் ஆயுதமாக டிலன் தேர்ந்தெடுத்தது, தன் சொற்களைத் தான். சுதந்திரம் என்பது என்ன, போர் இந்த உலகத்தை என்ன செய்யும், மனிதனுக்கு, அமைதி எப்பேர்ப்பட்ட தேவை என்பதைத் தீர்க்கமாக எடுத்துரைக்கும் சொற்களாக அவை இருந்தன; இருக்கின்றன. 

'தி எட் சலிவான்' என்ற தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், பாப் பாட இருந்தார். நிகழ்ச்சிக்கான ஒத்திகையின் போது, அவரது பாடல் வரிகள், தங்கள் ஆதரவு இயக்கத்துக்கு எதிரானதாக இருக்க, சில வரிகளை நீக்கிக் கொள்ளுங்கள் என்றார் நிகழ்ச்சி பொறுப்பாளர். 'உங்கள் தணிக்கைக்கு இணங்கிப் போவதைவிட, என் படைப்புக்கு நேர்மையாக இருந்த நிம்மதி போதும். நான், இந்த நிகழ்ச்சியில் பாடப் போவதில்லை' என்று பதிலளித்துவிட்டு, கிடாருடன் வெளியேறினார் டிலன். 

பாப் மற்றும் ராக் இசை ஜாம்பவான்களிலே, அதிக பாடலை தந்தவர் பாப் டிலன். மொத்தம், 460 பாடல்கள். 'நெவர் எண்டிங் டூர்' என, உலகம் முழுக்க தன் செவ்வியல் இசையாலும், எதிர்ப்புச் சொற்களாலும், தன்னுடைய அரசியலைப் பாடியபடியே சொன்னார். எந்த இசைக் கலைஞரையும், தன் நாட்டுக்குள் இசை நிகழ்ச்சி நடத்த அனுமதிக்காத சீனாவே, பாப் டிலனை, தன் நாட்டில் பாடச் சொல்லி அழைத்து சிறப்பித்தது. 


தன்னுடைய சுயசரிதையை, தானே எழுதிய பாப் டிலனின், 'க்ரானிக்கல்ஸ் வால்யும் ஒன்' புத்தகம், சிறந்த நுாலுக்கான தேசிய விருதுக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அவரது வாழ்க்கையைச் சித்தரித்து எடுக்கப்பட்ட, “ஐ ஆம் நாட் தேர்” என்ற திரைப்படத்திலும், அவரே கூட, டிலனாகச் சில காட்சிகளில் நடித்திருக்கிறார். 


சமரசமில்லாத படைப்பாளனாகத் திகழும் டிலனை, விருதுகள் ஒருபோதும் புறக்கணித்ததில்லை. தன்னுடைய பாடல்களுக்காக, 11 கிராமி விருதுகள், ஆஸ்கர், குளோப் விருதுகள், ஹால் ஆப் பேம் என, பல்வேறு விருதுகளை வாரிக் குவித்தவருக்கு, நோபலும் இப்போது மணிமகுடமாகி விட்டது. 

எனது அனைத்து தேடல்களும் ஒருபுறமிருக்க 
ஆகையால் எனது கிடாரை கையிலெடுத்து
அடுத்த பாடலை இசைக்க துவங்குகிறேன்.


-நன்றி தினமலர்
15-10-2016

பாப் டிலன்; கட்டுரையும் விளக்கமும்.

வணக்கம் Thiruvendra Kumar உங்களுடைய செய்தி கிடைத்தது. அதில் பாப் டிலன் பற்றி தினமலரின் வெளியான எனது கட்டுரையும், எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையும் உங்களை குழப்பியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டும் வெவ்வேறு விதமாக பாப் டிலனைத் தங்களுக்கு அடையாளப் படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கட்டுரை பாப் டிலன் என்பவர் யார்? அவருடைய வாழ்க்கை, இசைப்பயணம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஸ்கெட்ச்களுக்குள் மட்டும் எழுதப்பட்டது. பாப் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா, அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் கொடுப்பது சரியா என்ற விவாதத்திற்குள் நான் நுழையவே இல்லை. எனக்கு டிலனைப் பற்றி ஓர் அறிமுகம் எழுதவேண்டும் என்று தோன்றியது. "I am Not There" படத்தைப் பார்த்ததிலிருந்து. க்ரானிகல்ஸ் வால்யூம் ஒன் பற்றித் தெரிந்துகொண்டதிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக டிலனின் பாடல்களின் மொழிப்பெயர்ப்பை வாசித்ததிலிருந்து, நான் டிலனின் பாடல்களைக் கேட்கிறேன். அவை பற்றிய மேலதிக விசயங்களைத் தெரிந்துகொள்கிறேன். அமெரிக்க நாட்டுப்புற செவ்வியல் இசையைத் தன் பாடல்களுக்குப் பயன்படுத்துகிறார் பாப் என்று தெரிந்ததும் எனக்கு உற்சாகமாக இருந்தது. நான் நாட்டுப்புறத்தை நேசிக்கிறவன். ஒவ்வொரு மண்ணுக்கும் இருக்கும் பூர்வாங்க அடையாளம் அதன் கலைகள். மண்ணின் இயல் அளவுக்கு இசையும் முக்கியத்துவம் வாய்ந்ததில்லையா? அதுவே டிலன்பற்றி எழுதவைத்தது. அப்போதும் சொற்களைத் தேர்ந்தெடுத்தபர் டிலன் என்றே தலைப்பிட்டிருந்தேன். ( டிலன் போலவே எனக்கு க்ரீஸ் நாட்டைச் சேர்ந்த யானி (Yanni)மீதும் ஈர்ப்பு உண்டு. இருவரும் நேரெதிர் துருவங்கள் ) பிறகு நீங்கள் குறிப்பிட்ட எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரைகள் வாசித்தேன். ஆசான் மாதிரி தீர்ப்பு எழுதுகிற அளவுக்கு நான் பெரிய வாசிப்பாளன் இல்லை. அவருடைய கட்டுரையில் டிலன் பற்றிக் குறிப்பிடும்போது, “ இடதுசாரிகளில் ஒருசாரார் அவரை புகழ்ந்து பேசுவர். *ஒருவகை அமெரிக்க இலட்சிய வாதமாகவும் அமெரிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பாகவும் அவரது பாடல்கள் பார்க்கப்பட்டன. *ஆனால் அன்று ஒரு பெரும் அலையாக இருந்த பாப் மார்லியுடன் ஒப்பிட்டால் அவரது பாடல்கள் சற்றே சோகையானவை” என்று குறிப்பிட்டிருந்தார். நிறைய ஷரத்துகளை எழுதிவிட்டுப் பின்னே, பாப் டிலனின் நடனத்துக்காக இலக்கியத்திற்கான நோபல் பரிசு வழங்கப் பட்டிருக்கலாம் என்று நயமாக நக்கலும் அடித்திருந்தார். நான் அதை ரசித்தேன். இந்த ஒப்பீடு வகைமைக்கும், நோபல் குழுவின் நியாய தர்மங்கள் மீதான விமர்சனங்கள், என்றெல்லாம் போகாமல் டிலனின் வாழ்க்கையை நேர்மறையாக அறிமுகப் படுத்தவேண்டும் என்ற எண்ணத்தில் எழுதினத்தான் தினமலரின் வெளியான கட்டுரை. உங்களது கேள்வியால் இந்திரா பார்த்தசாரதியின், “பாப் டிலன் இசை இலக்கியமாகுமா?” கட்டுரையும் வாசிக்க நேர்ந்தது. ஒரு பாடலாசிரியருக்கு இலக்கியத்திற்கான நோபல் வழங்க ஒரு அடிப்படை நியாயத்தை இ.பா அதில் எடுத்து வைத்திருந்தார். அதுவும் தமிழ்நிலத்தின் பாடல் இலக்கிய முன்னோடிகளான பாணர்கள், விறலியர்கள், கூத்தர்கள் ஆகியோரை முன்வைத்து அவர்கள் படைத்ததும் இலக்கியம் தான் என்று எழுதியிருந்தார். அந்தக் கட்டுரையை தான் முழுமையாக மறுப்பதாகவும் ஆசான் குறிப்பிட்டிருந்தார். சரி அது பெரியவர்கள் பஞ்சாயத்து. எழுத்தாளர் சாருநிவேதிதா ஒருகூட்டத்தில் பேசியது நினைவுக்கு வருகிறது எனக்கு. “இங்கே மட்டும்தான் ஒரு ஒரு எழுத்தாளனை எழுத்தாளனே இல்லை என்று சொல்கிற மனநிலை நிலவுகிறது” என்கிற ரீதியில் ஒரு கருத்தை அவ்வளவு பகடியாகக் குறிப்பிட்டார். எனக்குச் சிரிப்பு வந்தது. அது உண்மையும்தான் இல்லையா? சமீபத்தில் அகாதமி விருது வாங்கின தமிழ் நாவலைக் (கானகன்) குறிப்பிட்டு, “தம்பி அந்த நாவல் எப்படி இருக்கிறது இப்படி ஒரு நாளிதழில் அந்நாவலுக்கு விருதுவழங்கப்பட்டதற்கு எதிர்விவாதமாக ஒரு கட்டுரை எழுதப் போகிறேன். அதனால் உங்கள் கருத்தைக் கேட்டுவிட்டு எழுதலாம் என்று நினைப்பதாக மூத்த எழுத்தாளர் ஒருத்தர் கேட்டார். கூடவே வேறு எந்த நாவலுக்குத் தந்திருக்கலாம் என்ற பட்டியலையும் கேட்கவும், “சார் தயவு செய்து முதலில் கானகனைப் படித்துவிட்டாவது உங்கள் கட்டுரையை எழுதத் தொடங்குங்கள். தவிர இதெல்லாம் புதிதாக எழுதவருகிற எங்களுக்கு ஒரு தொடக்கம். வழக்கம்போல கல்லால் அடித்துவிட்டுப் போகாதீர்கள்” என்று பொறுமையாகச் சொல்லிமுடித்தேன். அவரும் அதைக் கேட்டுக் கொண்டு அந்த எண்ணத்தைக் கைவிட்டதாகச் சொன்னார். இங்கே இப்படித்தான் நிலைமை. வெல்கிறவனை கல்லால் அடித்து காலால் மிதித்துவிடத்தான் துடிக்கிறார்களே ஒழிய அவன் படைப்பைப் பற்றி சின்ன விவாதத்தைக்கூட கிள்ளிப் போடமாட்டேன் என்கிறார்கள். நீங்கள் ஒன்று செய்யுங்கள் பாப் டிலனின் பாடல்களை எஸ்.சண்முகம் மொழிப்பெயர்த்திருக்கிறார். பிரமிள் என்ற தளத்தில் வாசிக்கக் கிடைக்கிறது. வாசித்துப் பாருங்கள். நன்றி. -கார்த்திக்.புகழேந்தி 21-10-2016

Wednesday, 12 October 2016

ஐஸ் ஹவுஸ் - சென்னை

2014 இறுதியில் திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் அறையெடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது போக்கு வரத்துக்கெல்லாம் பேருந்து பயணங்களைத் தான் நம்பியிருந்தேன். ஒவ்வொரு தடத்துக்கும் ஒவ்வொரு எண் கொண்ட பேருந்துகளை அடையாளம் கண்டுபிடிக்க நண்பனின் உதவியை நாட வேண்டிவரும். அறைக்குத் திரும்பும்போது மட்டும் சரியாக ஐஸ் ஹவுஸ் வழித்தடத்தில் செல்லும் பேருந்தைப் பிடித்து, பார்த்த சாரதி கோயில் ஆர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வேன்.
அப்போதுதான் இந்த ‘ஐஸ் ஹவுஸ்’ என்று ஏன் பேருக்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன். என் துருப்புச் சீட்டுகள் சிலர் வழியாகக் கேட்டறிந்தபோது, காயிதே மில்லத் சாலை முனையில் உள்ள பள்ளிவாசலைக் கைகாட்டி இதுதான் ஐஸ் ஹவுஸ் என்றார்கள். நானும்கூடக் கொஞ்ச காலத்துக்கு அதையே நம்பிக் கொண்டு திரிந்தேன்.
‘கலோனல் லவ்’ என்பவர் எழுதிய ‘வெஸ்டிஜெஸ் ஆஃப் மெட்ராஸ்’ புத்தகத்தில் ஐஸ் ஹவுஸ் பற்றி எழுதிய ஒரு குறிப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அப்போது தான் உண்மையான ஐஸ் ஹவுஸ் பற்றியும், அதன் பேருக்கான வரலாறும், சாமுவேல் ஆஸ்டின் பற்றியும், ஃப்ரெட்ரிக் தாதர் பற்றியும் தெரியவந்தது.
இன்றைக்கு, மெரினா கடற்கரைக்கு எதிரே இளஞ்சிவப்பு வண்ணத்தில் இரவெல்லாம் மின்விளக்கு வெளிச்சத்தில் ஒளிரும் ‘விவேகானந்தர் மண்டபம்’தான் ஐஸ் ஹவுஸ் கட்டிடம். அதைக் குறிப்பிட்டே ஐஸ் ஹவுஸ் பேருந்துத் தடத்திற்கும் நிறுத்தத்திற்கும் பெயர் வந்திருக்கிறது. அதெல்லாம் இருக்கட்டும் ஐஸ் ஹவுஸ் பின்னால் உள்ள வரலாறு என்ன ?
கதையை இன்றிலிருந்து சரியாக 210 வருடங்களுக்குப் பின்னால் எடுத்துப் போனால், அமெரிக்காவின் பாஸ்டன் நகரில் ஃப்ரெட்ரிக் தாதர் (Fredric Tudor) என்ற பலே கில்லாடி ஒருத்தர் மேற்கத்தியத் தீவுகளுக்கு ஐஸ்கட்டிகளை ஏற்றுமதி செய்யும் திட்டத்தோடு களமிறங்குகிறார். அமெரிக்க பேரேரிகளின் நன்னீர் ஐஸ்கட்டிகளை வெட்டியெடுத்து அட்லாண்டிக் கடல்வழியாக கப்பலேற்றிக் கொண்டுபோய் பிறநாடுகளில் விற்றுக் காசாக்கும் வேலையைக் கச்சிதமாகத் தொடங்குகிறார். ஆண்டு 1805.
தாதர் பற்றிக் கேள்விப்பட்ட சாமுவேல் ஆஸ்டின் பாஸ்டன் வர்த்தகர் 1833ல் என்ற இந்தியாவிலும் நீங்கள் கடைவிரிக்கலாம். நானும் உங்களோடு கைகோர்த்துக் கொள்ளத் தயார் என்று கடிதம் எழுதுகிறார். சும்மா இல்லை 26000 கி.மீட்டர் தூரம். கட்டி ஏத்தி கொண்டுவந்து இறக்க இது ஒன்றும் கடலைப் பொறி அல்ல. ஐஸ்கட்டி. வழியிலே கரைந்துபோனால் மொத்த உழைப்பும் ஸ்வாஹா…
தாதர் அமெரிக்காவின் சிக்னல் புக்கை வைத்து இந்தியாவின் கொல்கட்டா கங்கைக் கரையைக் கணிக்கிறார். 1833மே 12ம் தேதி 180டன் ஐஸ்கட்டிகளோடு கடற்பயணம் தொடங்குகிறது. நான்கு மாத பயணத்திற்குப் பிறகு செப்டம்பரில் இந்தியக் கரையை அடையும்போது 100டன் பனிக்கட்டிகள் தாதர் மற்றும் ஆஸ்டின் கூட்டாளிகளின் கைவசம். தொடர்ந்து ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகம். செலவு போக அடுத்த இருபது ஆண்டுகளில் இரண்டு லட்சம் டாலர் லாபம் சம்பாதிக்கிறார்கள் இருவரும். உருகியதுபோக மிச்சமெல்லாம் காசு.
கொல்கத்தாவை அடுத்து மும்பையிலும் பிறகு 1842ல் மதராஸிலும் ஐஸ் வியாபாரம் தொடங்குகிறார்கள். குதிரைகளிலும் காளை வண்டிகளிலும், பல்லக்குகளிலும் ஐஸ் பார்களைத் தூக்கிக் கொண்டுபோய் விற்க வேண்டியது. ஒரு பவுண்டு ஐஸ் நான்கு அணா. வெப்பமண்டல நாடுகளில் ஐஸ்கட்டிகளை தேக்கி வைத்துப் பாதுகாக்கத் தோதான இடம் வேண்டும் என்ற காரணத்தால் மெரினா கடற்கரை அருகினிலே வட்டவடிமமான சேமிப்புக் கிடங்கை உருவாக்குகிறார்கள். அப்படி உருவானதுதான் மெரினா கரையில் உள்ள ஐஸ் ஹவுஸ் கட்டடம்.
ஃப்ரெட்ரிக் தாதர் பற்றித் தேடி வாசித்தால் எண்பது வயதுவரை வாழ்ந்த இந்த மனிதன் அமெரிக்காவின் ஒரு ஏரி குளங் குட்டையையும் விட்டு வைக்கவில்லை உலக நிலப்பரப்பில் மிகப்பெரிய ஏரிக்கூட்டமான வடஅமெரிக்கப் பேரேரியின் (Great Lake) பனிப்படலத்தைப் பாளம் பாளமாக வெட்டி எடுத்து, கப்பல் கப்பலாக ஏற்றி, உலகமெங்கும் அனுப்பி விற்று, லாபம் சம்பாதித்திருக்கிறார். பாஸ்டனின் “ஐஸ் கிங்” என்று தாதரைக் கொண்டாடித் தீர்த்திருக்கிறார்கள்.
என்னதான் சம்பாத்தியத்தை அள்ளிக் குவித்தாலும் தொழில்முன்னேற்றம் என்று ஒன்று காலமாற்றத்தில் வந்து பொடனியில் அடிக்குமில்லையா. இந்தியாவிலே ஐஸ் தயாரிக்கும் தொழில்நுட்பங்கள் வளர்ந்த பிறகு ஐஸ்கட்டிகளை அதிகளவு காசுகொடுத்து வாங்கத் தேவை இல்லாமல் போகவே தாதர் தன் ஐஸ் ஏற்றுமதித் தொழில்களை நிறுத்திக் கொண்டார்.
அதன்பிறகு மதராஸ் ஐஸ் ஹவுஸ் கட்டடம் பிலிகிரி ஐயங்கார் என்கிற உச்சநீதிமன்ற வழக்கறிஞரால் விலைக்கு வாங்கப்பட்டு மதத் தலைவர்கள் தங்கும் இல்லமாகவும் கல்விக்கூடமாகவும் மாற்றப்பட்டது. 1897 பெப்ரவரியில் விவேகானந்தர் இங்கே ஒன்பது நாட்கள் தங்கியிருந்திருக்கிறார். பிறகு பிராமண கைம்பெண்கள் தங்கும் இல்லமாக்கப்பட்டு , இன்றைக்கு விவேகனந்தர் இல்லமாக அறியப் படுகிறது ஐஸ் ஹவுஸ் கட்டடம்.

-கார்த்திக். புகழேந்தி
12-10-2016.

பிற ஆவணங்கள் :
* Papers of John Adams, Volume 18: December 1785 - January 1787,
* The Ice Trade between America and India, from The Mechanics' Magazine (1836)
* How ice came to India, 1833


* Varnam post on The Forgotten American Ice Trade - Indian perspective on the ice trade with Calcutta.

Monday, 3 October 2016

அஜ்வா - ஏழு பேரீச்சம் பழங்கள்
ஒரு குரல் நாவல் முழுக்கக் கதை சொல்கிறது. ஒரு ராட்சதக் கை அந்தக்குரலை கண்காணித்துக் கொண்டே பின்தொடர்கிறது. அந்தக் கை ஒருசமயம் வானம் அளவுக்கு விரிந்து வரவேற்கிறது. அந்தக் கை பாவங்களை மன்னிக்கிறது, அந்தக் கை வழிநடத்துகிறது. அந்தக் கை தைரியத்தைக் கொடுக்கிறது. அந்தக் கை ஏழு பேரிச்சம் பழங்களை வழங்குகிறது. இறுதியில் ஒரு குடையாக மாறி கதைசொல்லும் குரலுக்குச் சொந்தக் காரனைத் தாங்குகிறது.

அஜ்வா. போதை உலகத்தில் தன்னைத் தொலைத்துவிட்ட ஒருவனது மீட்சியின் கதைதான் அஜ்வா. மீட்சியென்தோடு மட்டும் அல்லாமல் தான் வாழ்ந்த உலகத்தின் சந்துபொந்துகளுக்கெல்லாம் நம்மை அழைத்துச் சென்று அதன் கட்டமைப்புகளையும், கசடுகளையும் அவ்வுலகிலிருந்து மீண்டவர்களையும், மாண்டவர்களையும் பற்றிய கதைகளை முன்பின்னென்று எந்த ஒழுங்கமைவுகளும் எதுவுமில்லாமல் ஒரு மிதபோதைக் காரனின் மனநிலையிலேயே சொல்லிச் செல்கிறார் சரவணன் சந்திரன்.

மூன்றாவது நாவலைப் புரட்டும்போதும் அதே வேகம். இடையில் கீழே வைத்துவிட முடியாத விறுவிறுப்பு. செய்தித் தாள்களின் ஆறாம்பக்கத்து பத்திகளின் தலைப்பில் புதைந்துகிடக்கும் ஆதாரச் சம்பவங்களின் மையப்புள்ளிக்குள் நுழைந்து அதன் அடியாழம் வரைக்கும் உள்ள தகவல்களைச் சீட்டுக்கட்டுமாதிரி விசிறிச் செல்கிற  “கான்” மூவி தன்மை. என்று அஜ்வா நமக்கு நெருக்கமாக அறியப்படும் சம்பவங்களின் பின்னணியிலே உருவாக்கப் பட்டிருக்கிறது.

சரவணன் சந்திரன் அண்ணனின் முதல் நாவலான, ‘ஐந்து முதலைகளின் கதை’யின் பலமாக நான் கருதுவது அதன் புதிய களமும் எளிய விறுவிறுப்பான வேகமும் கூடவே கதைசொல்லும் உத்தியும் தான். இரண்டாவது நாவலான ‘ரோலக்ஸ் வாட்சு’ம் கூட மேல்த்தட்டு அதிகார வர்க்கத்தின் எல்லைக்கோட்டுக்கு அப்பால் நுழைந்து அங்கே தன்னை நிரூபிக்கத் துடிக்கும் ஒரு சாகசக்காரனின் கதையாகத் தான் பார்த்தேன். இவ்விரண்டு நாவல்களுமே எவ்வளவுதூரம் அதன் கதையாடல் யுக்திக்காக வரவேற்கப்பட்டதோ அதேயளவு நாவலில் வரும் பல கதாப்பாத்திரங்கள் கனம்சேர்க்காமல் கடந்துபோய்விடுகிறது என்ற விமர்சனத்துக்கும் உள்ளானதைக் கவனித்தேன்.


அஜ்வாவில் அந்த தன்மை மேம்பட்டிருக்கிறது.. மற்றபடி ‘கிரே’ உலகத்து மனிதர்களின் கதையை நம் கண்களுக்குப் புலனாகிற அளவுக்குக் கிட்டே அழைத்துச் சென்று சொல்லுகிற ‘ஸ்ட்ரெய்ட் நரேஷன்’ தன்மையை ஒருவாசகனாக நான் கருதுகிறேன். கதைநாயகனுக்கு மிகப் பக்கத்தில் நிற்கிற இன்னொருவனின் கண்ணாக நான் ஒவ்வொரு சம்பவங்களையும் அணுகுகிறேன்.

அஜ்வாவில் வரும் கதைநாயகனின் மிகப்பெரிய பிரச்சனை அவனுடைய பயம். இருட்டு, மரணம், உயரம், தனிமை என்று மரபணுவிலே பயம் ஆட்டிப் படைக்கும் ஒருவனுக்கு அமையப் பெறும் நாடோடித்தனமான வாழ்க்கையும், அதன் மற்றொரு வாயில் திறப்பாக கிடைக்கும் போதைப்பழக்கமும் அதிலிருந்து மீள முடியாத காலத்தின் நினைவுகளுமாகச் செல்கிறது கதை. இடையே, தான் சந்தித்த மனிதர்கள், தன் சகாக்கள், தன் நாடோடி வாழ்க்கைக்குக் காரணமானவர்கள், தன் எல்லைக்குள் எவரையும் அனுமதிக்காத நாயகி, பாவமன்னிப்புகள் வழங்குவதற்காகவே பால்யத்திலிருந்து பழகின நண்பன்,  ‘உனக்கு விதிக்கப்பட்ட எல்லாவற்றிலிருந்தும் நீ விலகி நல்லவழிக்குத் திரும்புவாய்’ என்று நம்பும் தாய், தனக்காக தற்கொலைப் படையாகவே மாறிவிடக்கூடும் என்றெண்ணும் அத்தை என்று தன்னைச் சுற்றியுள மனிதர்களுக்குள்ளிருந்தே கதையை நிகழ்த்தி இருக்கிறார் சரவணன் சந்திரன் அண்ணன்.

போகிறபோக்கில் சொல்லிச் செல்லும் கிளைக்கதைகளின் மூலம் வேறு ஒரு உலகத்திற்குள் செல்லும் பயணம் தான் நாவலின் உணர்வு மையம். தனக்கிருக்கும் சின்னச் சின்னத் திருட்டுப் பழக்கம், பய உணர்வு, இந்தச் சுபாவங்கள் தரும் உளைச்சலிலிருந்து விடுபட முடியாத/ முயலாத  ஒருவனின் மன உலகம் தான் கதைக்களம். இடையே சராசரி மனிதர்களின் வார்த்தைகளில் வெளிப்படும்  தத்துவங்களையும், கரிசல் மக்களின் வாழ்கையையும் கூட்டுச் சேர்த்து  கதையைக் கடத்தும் லாவகத்தை படித்துமுடித்ததும் சரவணன் அண்ணனிடம் குறிப்பிட்டே சொன்னேன்.

ஏழு பேரிச்சம் பழத்தை வைத்துக்கொண்டு உன்மத்த உலகத்தில் வாழ்கிற ஒருவனது வாழ்வை நூற்று இருபது பக்கங்களுக்குள் ஒரு நீரோடையின் சலசலப்பு போல அந்தத்திலிருந்து தொடங்கி ஆதியில் கொண்டுபோய் இருத்தி வைத்திருக்கிறார்.

-கார்த்திக்.புகழேந்தி.
03-10-2016

Wednesday, 10 August 2016

இட்டிலிஉடம்பு சரியில்லாத அப்போதுதான் மனசு இட்டிலியை ஏற்றுக்கொள்ளத் துணிகிறது. அதென்னவோ இட்டிலி, தோசை என்றால் நம் வீட்டில் சுட்டது மட்டும்தான் மனசுக்குப் பிடித்து சாப்பிடத் தோணும். சில நேரம் தோசை விதிவிலக்கு. ஊர்ப்பக்கங்களிலெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் பண்டிகைக்கு மட்டும்தான் இந்த மாவுப் பதார்த்தம் கிடைக்கும். பெரியம்மையின் மூத்த மகளைப் பெண் பார்க்க வரும்போது, நான் கையில் நிற்காத பிள்ளையாக திரிந்துகொண்டிருந்தேன். விடிந்தால் சொந்தமெல்லாம் வந்துவிடுமென்று வட்டம் போட்டு ஆட்டுரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள் அத்தை சித்தி அம்மைகள்.
கைவலி எடுத்தால் சித்தியிடமிருந்து பெரியம்மை, அவளிடமிருந்து சின்ன அத்தை என்று நான்கு ஐந்து ஆள் மாறும் அரவை. அவ்வளவு பெரிய ஆட்டுரல் அது. எட்டு பத்து கிலோ குழவியைத் தூக்கி கல்லைக் கழுவும் வலு கொண்ட பெண்கள் இருந்த வீடு அது. உப்பு, சோடாப்பு கூட குறைய அல்லது மாவு பதத்தில் ஏதும் குறை இருக்கா இல்லையா என்பதற்கு ஒரு சொலவடை உண்டு. "ஆறு கைபோட்டு அரைச்ச மாவுல கூறு கொறை சொல்ல முடியாது கேட்டியளா" என்று. இதற்கு நான் ரெண்டு அர்த்தம் பண்ணிக்கொண்டேன்.
ஆறு பெண்கள் கைவைத்து அரைத்த மாவில் இட்டிலி பதமில்லை என்றால் நீயென்ன குறை விட்டாய் நானென்ன குறைவிட்டேன் என்று சொல்ல முடியாதில்லையா... இப்படி ஒன்று.
இன்னொன்று ஆறுபேரில் யாராச்சும் 'அது சரிபாரு இது சரிபாரு' என்று சொல்லிச் சொல்லியே பக்குவத்தை விட்டுவிடாமல் பார்த்துக் கொள்வார்கள் என்பதால் குறையே இருக்காது என்றும் பொருளாக்கிக் கொண்டேன்.

காலையிலே மாப்பிள்ளை வீட்டாள்கள் முதல் பஸ்ஸுக்கே வர ஆரம்பித்துவிட்டார்கள். 'இட்லி இப்பத்தான் வேவுது' என்று ஆச்சி சொல்ல, வந்தவர்களுக்குச் சுக்குக் காபி படிபடியாய் அளப்பு இல்லாமல் போய்க்கொண்டிருந்தது. பொடி உள்ளி உரித்து, பொட்டுக்கடலை இடித்து, ராத்திரியே துருவிவைத்த தேங்காய், சட்டினியாகிக் கொண்டிருந்தது. கிரைண்டரும் மிக்ஸியும் எட்டியே பார்க்காத காலம். ஆவிபறக்க இலைபோட்டு, விரல் குழிவிழுந்த முதல் இட்லியை பரிமாறும் போது, இட்லி சூட்டுக்கு வாழையிலை நெகிழ்ந்து ஒரு வாசனை அடிக்கும் பாருங்கள். அது தனியாய் ஒரு ருசியை மூக்குக்குக் கொடுக்கும்.
இந்த காலைத் தீனி முடிந்து மதியத்துக்கு இன்னுங்கொஞ்சமாக வந்த மாப்பிள்ளை வீட்டாருக்கு தனிக் காபி, அடுத்து மதியச் சோறு, பிள்ளைவளுக்கு பசிக்குப் பாலூட்டவிட்டு, நடுவீட்டில் தொட்டில் கட்டி, இன்னின்ன கதைபேசி, அரும்பு வாங்கி பூ கட்டி, பெண்களுக்கு மிச்ச மருதாணி வைத்து, மூஞ்சி கழுவி, கோவிப்பொட்டு வைத்து மல்லிப்பூ அலங்காரமெல்லாம் பண்ணி சாயந்திரம் பஸ்ஸுக்குக் கிளம்பிப் போகும் போது உறவு ஒண்ணுமண்ணு ஆகிவிடும். பெண்ணும் மாப்பிள்ளையும் பார்த்துப் பேசத்தான் இடமிருக்காது. கைக்குள்ளயும் காலுக்குள்ளயும் நண்டு சிண்டுகள் அலைந்து கெடுத்திருக்கும்.
போகும்போது, அந்த வூட்டுப் பொண்ணு ஒண்ணு அழகாய் இருப்பதும், அவங்க பயல் ஒருத்தன் நம்வீட்டுப்பிள்ளையை நகத்தால் கீறி காயம் பட்டதுமாக, ஏக நினைப்புகளோடு ஒரு வைபவம் முடிந்திருக்கும்.

அத்தோடு திரும்ப கல்யாணத்து அப்போதான் ஆட்டுரலுக்கு வேலை. இந்த வீட்டுக் கல்யாண வைபவ வழக்கமெல்லாம் அப்பா காலத்தோடு சரி. தவசுப்பிள்ளைகள் எல்லாம் பள்ளிக்கூட விடுதியில் ரவை கிண்டுகிறார்களே பிறகெப்படி. சுந்தரம் தெங்காசியில் வீடு கட்டினதுக்கே மதியச்சாப்பாடு முதக்கொண்டு எல்லாம் கேட்டரிங் ஆர்டர் தானாம். பொறந்த நாள் காதுகுத்துக்கெல்லாம் மண்டபம் பார்த்துவிடுகிறார்கள்.

இட்டிலியில் ஆரம்பித்து எங்கேயோ வந்துவிட்டோம் பாருங்கள். புதுமைப் பித்தன் ஒருதரம் என்னைமாதிரியே ஐயர்வாள் கடையில் இட்டிலி சாப்பிடப் போனாராம். ஆறிப்போனதை வைத்திவிட்டு சுடச்சுட சாம்பாரை ஊத்தி இருக்கிறார் ஐயர்வாள். "என்னைய்யா ஆவி சுடுகிறது; ஆன்மா குளிர்ந்திருக்கிறது" என்று நயமாக கம்மெண்ட் அடித்துவிட்டாராம் விருத்தாசலம் என்கிற பு.பி., நெல்லைக் கண்ணன் ஐயா சொல்லிக் கேட்டது இது. நமக்கு இட்டலி என்றாலே மல்லிப்பூவுக்குப் பிறகு குஷ்பூ நியாபகம் வந்துவிடுகிறதே. எல்லாம் இந்த பத்திரிகைகளின் மொக்கை ஜோக்குகள் பண்ணின வேலை. இன்னும் ராஜாக்கள் புறமுதுகு காட்டின ஜோக்குத்தான் குவிகிறது. உருப்படுமா தலைமுறைகள். 

மோகனபுரி தீபம் ஹோட்டல் அருமையான ரெண்டு இட்லியும், ஒரு ஆப்பமும், ஏலக்காய் போட்ட தேங்காய் பாலும், நாலு குழிப்பணியாரமும், தக்காளி பச்சடியும் சாப்பிட்டு வந்தேன். அதுதான் இவ்வளவு பேச வைத்திருக்கிறது என்னை. 
தின்னப் பொறந்தவனில்லையா திருநெல்வேலிக்காரன். இப்ப ஊர்பெருமை பீத்திட்டான்னு நாலுவேர் திட்டுவாங்க பாருங்க. வோய் நீங்க திட்டுனாலும் நாங்க தின்னுக்கிட்டே எழுதுவோம். எழுதிக்கிட்டே திம்போம்.

-கார்த்திக்.புகழேந்தி
09-08-2016


Monday, 25 July 2016

திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது.

பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன்.  ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள்.

நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின் புகைப்படங்களுக்கு முகங்காட்டி, ஏழுமணிக்கு பேருந்திலேறி, கிண்டி தாண்டவும் குமரேசன் அண்ணன் மற்றும் சேர்மராஜ் என்று மற்ற குழுவினரோடு ஒன்றிணைந்திருந்தோம். (மூன்று பத்திகள் சுய விளம்பரத்துக்கே தீர்ந்துபோனதால் இனி நேராக திருவலங்காட்டிலே வண்டியை நிறுத்திவிடுவது உத்தமம். )

திருவலங்காடு பற்றி முன்பொரு பனுவல் சுற்றுலாவிலே அறிந்தேன். ராஜேந்திரனின் அரச முத்திரையோடான செப்பேடுகள் கிடைத்த ஊர் என்று பேராசிரியர் சொல்லியிருந்தார். பிறகு கொஞ்சம் தேடிப் பார்த்ததில் அது சைவத்தில் முக்கியமாக அறியப்படும் ஐந்து சபைகளில் இரத்தின சபை என்று தெரிந்தது. நெல்லை சைவத்திற்கு முக்கியமான ஊர் (தின்பதில் அல்ல). அங்கே சித்திர சபையாக குற்றாலமும், தாமிர சபையாக நெல்லையப்பர் கோயிலும் இருக்க, மதுரை வெள்ளி சபையும், சிதம்பர பொற்சபையும் என நான்கு சபைகளையும் கண்டிருக்கிறேன். திருவலங்காட்டின் ரத்தின சபையே மிஞ்சி யிருந்தது.

காரைக்கால் அம்மையார் கதையை நெல்லைக் கண்ணன் ஐயா சொல்லக் கேட்க வேண்டும். ஒருதடவை சூடிக் கொடுத்த சுடர்கொடி ஆண்டாள் சிறந்தவரா! இல்லை சிவனுக்கே தாயான காரைக்கால் அம்மை சிறந்தவரா என்று ஒரு பட்டிமன்றத்தில் தலைப்பு வைத்திருக்கிறார்கள். போச்சா! பாரதி பாஸ்கருக்கு சிறப்பு அர்ச்சனை ஐயா வழங்கியதை சென்னை புத்தகக் கண்காட்சி அறியும்.

சைவ வைணவ எதிரெதிர் முழக்கங்களை திருநெல்வேலியில் பயங்கரமாகக் கேட்கலாம். ஆயர்குடி என்பதால் நம் சொந்தபந்துக்கள் எல்லாம் முகுந்தா முகுந்தா என்பார்கள், ஆச்சி என்ன நினைத்தாளோ நம்மை திராவிடக் கடவுள் முருகனின் முன்னால் கொண்டுபோய் நிறுத்திவிட்டாள். ஆக நடுவே உட்கார்ந்து இந்த சைவ வைணவ பேச்சுவார்த்தைகளைக் கேட்பதில் நமக்கு கச்சிதமாகப் பொழுது போகும். அப்படிக் கேட்ட கதைகளில் ஒன்றுதான் காரைக்கால் அம்மையார் கதை. பெரிய புராணம் சொல்லும் அவர் கதை நிகழ்ந்த திருவலங்காட்டு கோயில் மண்டபத்தில் அமர்ந்து கொண்டு பேராசிரியரின் பேச்சைக் கேட்டோம்.

முதலாவதாக இங்கே கிடைத்த செப்பேடு பற்றி விவரித்தார். பிறகு மெல்ல கதைகள் வளர்ந்து இராஜேந்திரனுக்குப் பிறகு வரிசையாக வந்த சோழர்களின் கதைகளுக்குள் நுழைந்தது. ரொம்ப முக்கியமான விஷயம் என்னவென்றால் ஆதித்த கரிகாலனைக் கொன்றது யார் என்ற ரகசியம் இந்த பயணத்தில் ‘ரிவீல்’ செய்யப்பட்டது. கூடவே அவர்களுக்கு வழங்கப்பட்ட ‘சிட்டிசன்’ க்ளைமாக்ஸ் ரீதியிலான தண்டனை பற்றிய கல்வெட்டுத் தகவலையும் விவரித்தார். பொன்னியின் செல்வன் ஆர்வலர்கள் மேற்படி விபரங்களுக்கு பேராசிரியர் பத்மாவதி ஆனையப்பன் அவர்களின் புத்தகத்தை வாசிக்க.

இரண்டாவது அமர்வில் பழையனூர் நீலியின் கதையும், சொன்ன வாக்கைக் காப்பாற்ற இயலாமல்  ‘ஆகுதி’ பாய்ந்த வேளார்ளர்கள் கதையும், பிறகு காரைக்கால் அம்மையார் கதையும் விவரித்தார். கோயில் முழுக்க நடந்தோம். நல்ல காற்றும், இரைச்சல் இல்லாத அமைதியும் மனசைப் போட்டு வாங்கியது. அகரமுதல்வனிடம் கேட்டேன் பயணம் எப்படி என்று. ‘நாலாவது வகுப்பில் எனக்கு காரைக்கால் அம்மையார் பாடத்திட்டத்தில் உண்டு. நான் தலையால் நடக்க நினைத்த இடத்துக்கு நீங்கள் பேருந்தில் அழைத்துச் சென்றிருக்கிறீர்கள் புகழ்” என்றார்.

எப்போதும் இந்த பேருந்தில் நமக்கு லாஸ்ட் பெஞ்சே வசதி! போனமுறை நான் கலந்துகொண்ட பயணத்தில் அருண் சம்பந்தன் பாடிய எம்.ஜி.ஆர் தத்துவப் பாடல்களுக்காகவே நான் அவருக்கு நண்பனானேன். இந்த முறை தலைவன் இல்லாதது பெருங்குறை. தீபக் கூட வரவில்லை. அட அ.கா.ஈஸ்வரன், தயாமலர் ஆகியோர் கூட வராதது ஆச்சர்யமாக இருந்தது. ஆனாலும் எல்லா பயணத்திலும் அன்றொரு நாள் மட்டும் அறிமுகமாகி பிறகு ஆள் அடையாளம் தெரியாமல் போகிற பனுவல் வாசகர்கள் இருந்தார்கள். அவர்கள் வழமைபோல பல ஏ.ஆர் ரஹ்மான் பாடல்களை விடிவி கணேஷ் போல இனிமையாகப் பாடினார்கள். என்கூடே வந்தவர்களுக்கு ரசனை பத்தவில்லை. ஆனால் நான் மிக ரசித்தேன் தோழமைகளே!

பாடிக்கொண்டே போகவேண்டிய இடத்தைக் கோட்டை விட்டுவிட்டோம். பழையனூர் சந்துக்குள் பஸ் நுழைந்ததும் சந்தேகத்தில் இறங்கி அங்கு நின்றுகொண்டிருந்த பைக்காரரை அணுகி பக்கத்தில் இருக்கும் சாட்சிபூதத்தார் சிவன் கோயிலை விசாரித்தோம்.  ‘அவர் வாங்க போலாம்’ என்று அழைத்துப் போவதிலே குறியாய் இருந்தார். ஐயா முப்பது நாப்பது பேர் இந்த பைக்கில் ஏற முடியாது வழியைச் சொல்லுங்கள் என்றேன். அவருக்கு என்மேலே அப்படி என்ன பாசமோ நீங்களாச்சும் வாங்க என்று கூட்டிப் போய்விட்டார். போய் பார்த்தால் தேடிவந்த கோயில் அல்ல அது. குழுவினர் அதற்குள் வண்டியிலிருந்து இறங்கி நடந்து பாதிதூரம் வந்துவிட்டார்கள்.  ‘சரி பாடிக் கொன்றதற்கு பலிவாங்கிவிட்டோம்’ என்றார் முகுந்தன். சத்தியமாய் முகுந்தன் தான் அப்படிச் சொன்னார். நம்புங்கள்.

அது என்ன சாட்சி பூதத்தார் என்பதை விளக்கினார் பேராசிரியர். பழையனூர் நீலி என்ற பெண் தன்னை  மணந்து ஏமாற்றிக் கொன்ற கணவனை அடுத்த சென்மத்தில் காவு வாங்க நினைக்கிறாள். அவன் பிறப்பை அறிந்த சோதிடர்கள் அவன் காவலுக்கு பூசிக்கப்பட்ட கத்தி ஒன்றைத் தருகிறார்கள். வணிகனான அவன் அன்றைக்கு வணிகம் செழித்திருத்த திருவலங்காட்டில் வியாபாரம் பண்ண வருகிறான். (என்னைக்கூட கத்திரிகாய், வெண்டைகாய் தலா அரைக்கிலோ வாங்கிய பிறகே விட்டார்கள்.)

இவன் தன் கணவன் என்று பேயாக வந்த பெண் அவ்வூரின் தலைமையினராகிய வேளாளர்கள் அறுபது பேரிடமும் மன்றாட, அவள் கணவனோடு சேர்த்து வைக்கிறார்கள். கணவன் மனைவிக்குள் என்ன கத்தி என்று அதையும் நீலி வாங்கிக்கொள்ளச் செய்கிறாள். இவள் என்னைக் கொன்றுவிடுவாளே என்று வணிகம் தயங்க, அப்படி நிகழவெல்லாம் விட மாட்டோம் இது சத்தியத்துக்குக் கட்டுப் பட்ட ஊர் என்று விடைபெறுகிறார்கள். காலையில் வந்து பார்த்தால் வணிகண் சடலம் மட்டும் கிடக்கிறது. நியாயம் செத்துப் பேச்சு என் ராசா என்று யாரோ அழுதிருக்க வேண்டும். அறுபத்து ஒன்பதுபேரும் சாட்சிபூதத்தார் கோயில் முன்பு தீக்குள் பாய்ந்து உயிரை விடுகிறார்கள். மிச்சமொருவர் வயல்புறத்தில் உழுதுகொண்டிருக்க விஷயமறிந்து அவரும் கழுத்தறுத்துக் கொண்டு மாய்கிறார்.

நாங்கள் அவர்கள் தீப்பாய்ந்த மண்டபத்திற்குப் போனோம். திருவலங்காடு சிவனின் தேரடியிலிருந்து ஐநூறு சொச்சம் மீட்டரில் சாட்சி பூதத்தார் கோயில். எதிரே குளம். குளத்தில் மருங்கில் பழைய கல் மண்டபம். யாரோ முதலியார் ஒருத்தர் கட்டுமானம் பண்ணிக் கொடுத்திருக்கிறார். அதன் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்று சொன்னால் நீங்கள் சரியாக சோழ சாம்ராஜ்ஜியம் உதிப்பதற்கும் முன்னால் என்று புரிந்துகொள்ளவேண்டும். உள்பக்கமாக அறுபத்தொன்மர் தீப்பாய்ந்த வரலாற்றை புடைப்பு சிற்பமாக வரைந்திருக்கிறார்கள். எகிப்தியன் பாறை சிற்பங்கள் போல இருந்தது. முள்ளிவாய்கால் முற்றத்தின் மினியேச்சர் என்று காட்சிப் படுத்திக் கொள்ளுங்கள்.

பிறகு பத்ரகாளி கோயில் தெப்பத்தின் ஆல நிழலில் மதிய உணவு பரிமாறினார்கள். பயணத்துக்குச் சேட்டை செய்யாத உணவு. கோயிலின் பின்னால் கிடந்த கல் ஒன்றைப் பார்த்ததும் ‘பிரம்மஹத்தி’ கதை ஒன்றைச் சொல்லி நேரங்கடத்திக்கொண்டிருந்தேன் நண்பர்களோடு. அந்த பெரிய தெப்பத்தின் குளிர்ச்சியில் இளைப்பாறினோம். சொல்ல மறந்தேனே! சாட்சி பூதத்தார் கோயிலில் அற்புதமான கிணறு ஒன்று இருந்தது. பல வருடங்களுக்குப் பின் கிணற்றில் நீர் இறைத்தேன். அகரமுதல்வல் லாவகமாய் வாளி நிறைக்க இறைத்தார். பிறகு என்ன வேண்டுதலோ பாத கமலங்களை நீரால் குளிர்விக்க பலருக்கு உதவினார். கிணற்றுத் தண்ணீர் யாழ்பாணத்து இளநீராய் சுவைத்தது.

மதியம் மூன்றாவது அமர்வில் இதுவரையிலான பயணத்தைப் பற்றி, சிவனை அடைய மன்னர்கள் செய்யும் காரியங்கள், பள்ளிப்படை கோயில்கள் போன்றவை பற்றியெல்லாம் பேராசிரியர் விவரித்தார். உண்ட மயக்கத்தையும் மீறி உரையில் பலர் ஆழ்ந்திருந்தோம். கொஞ்சம்பேர் நிழலில் முதுகைச் சாய்த்தார்கள். மூன்று மணிக்கெல்லாம் திட்டமிட்டபடி திருவலங்காட்டிலிருந்து தக்கோலம் புறப்பட்டோம்.  மீதியை நாளைக்குச் சொல்லவா! இல்லை  தைரியமாக வாசிக்கப் போகிறீர்களா! சரி விதி யாரை விட்டது!

தக்கோலம் போய் இறங்கினபோதே கோயில் நடை சாத்தியிருந்தது. விளக்கு பூஜைக்கு அடித்திருந்த பேனரைப் பார்த்து அதிலிருந்து ஊர்தலைவருக்கு போன் அடித்தேன். சிபிஐ ரெய்டு என்று சொல்லலாமென்றுதான் நினைத்தேன். வம்பு எதற்கென்று ஆர்கியாலஜி துறையிலிருந்து முப்பது பேர் வந்திருக்கிறோம் என்றது அரைமணியில் வந்துட்றேன் சார் என்றார். அதுவரைக்கும் என்ன பண்ண… கோபுரத்தில் இருந்த சிற்பங்களை கவனித்துக் கொண்டிருந்தேன். நின்று கொண்டிருந்த ட்ராக்டரில் ஸ்டியரிங் ஒடிப்பது போல் படமெடுத்தேன். முகநூலில் போடும் போது உங்களை ஏமாற்றி விடுகிறேன் என்று குற்றம் சாட்டக்கூடாது.

பக்கத்தில் ஆறு ஓடுகிறதாகச் சொன்னார்கள். ஜலநாதர் ஆலயத்தில் ஆறு ஓடவில்லை என்றால் தானே ஆச்சர்யம். ஆற்றுக்குச் செல்லும்போதே குழுவினர்கள் சிலரும் இணைந்துவிட்டார்கள். முட்டளவு தண்ணீரில் இறங்கி பெண்கள் சிலர் படம் எடுத்தார்கள். ஆண் நண்பர்கள் இறங்க நிறைய யோசித்தார்கள். இப்போதுதான் தெரிகிறது சென்னைக்குள் தண்ணீர் பஞ்சம் வராமல் இருக்க இந்த ஆண்களே காரணம். தண்ணீர் என்றால் பத்தடி தள்ளி நிற்கிறார்கள்.

ஆற்றின் அக்கரைக்கு முகுந்தன் பெண்கள் சிலர் வர நான் அக்கரையில் ஆடுமேய்த்துக் கொண்டிருந்தவரிடம் கதைகேட்கப் போனேன். ஆற்றின் பெயரை அவர் வட்டாரத்தில் ‘பூஹாளம்’ என்கிறார்கள். அது கொற்றலை என்றழைக்கப்பட்ட கொசஸ்தலை. சென்னை வெள்ளத்தில் அறிந்திருப்பீர்களே. அதேதான். பூண்டி ஏரிக்குச் சென்று செம்பரம் பாக்கத்தில் கலக்கிறதைச் சொன்னார். ஏன் இந்த தக்கோலத்துக்குத் திருஊறல் என்று பேர் இருந்தது என்று கேட்டேன். ஊறல் என்றால் வேறென்ன ஊற்றுத்தான் அதோ இருக்கே அந்தக் கோயில் தான் ஊற்றுக்கு உறைவிடம் என்று இன்னொரு சிறிய மண்டபத்தைக் காட்டினார். அது கோயில் போல இல்லை. அதைவிட முக்கியமாக உள்ளே செல்ல அனுமதி இல்லை என்றார்.

 ‘குதிக்கப் போறீங்களா ஜீ!’ என்றார் குழு நண்பர். அவர் அப்படிக் கேட்டுக் கொண்டுருக்கும்போதே ஆள் பார்க்காமல் உள்ளே குதித்துவிட்டேன். பழைய மண்டபம் அதன் முன்பாகத்தில் சிறு தெப்பம். ராணி மாதிரியானவர்கள் குளிக்கும் இடம் போல தேர்ந்த வடிவமைப்பு. அட இது என்ன மீன் சின்னமா! போடு! பாண்டிய மன்னன் தொடர்பு இருக்கும்போல. கெல்வெட்டு இருக்கிறதா? ஒன்றுமில்லை.. கொஞ்ச நேரம் தனியாக வேறு ஏதாவது காணச் சிக்குகிறதா என்று தேடினேன். அவ்வளவு சளைத்தும் அந்த மண்டபத்துக்கு வாயில் என்று எதுவும் இல்லாததை அப்போதே அறிந்தேன். கல் சன்னல்கள் வைத்திருக்கிறார்கள். சரி என்னவோ என்று குழுவினர் இருந்த இடத்திற்கு விரைந்தேன்.

சுற்றுப் பிரகாரங்கள் நுழைந்து, சிலைகள் பற்றி விவரித்து, தக்கோலத்தில் நிகழ்ந்த தாட்சாயிணியின் கதையை விவரித்து, தமிழ்க்கடவுள் முருகனின் மண்டபத்தில் நான்காவது அமர்வில் ஒன்றிணைந்தோம். கோயிலின் அமைப்பு எப்படி இருக்கும். தக்கோலத்தில் நடந்த போர், இங்குள்ள சிற்பங்களில் காணக் கிடைக்கும் தொன்மை, தடயங்கள் ஆகியவற்றைக் குறித்து பேராசிரியர் விவரித்தார். பின் இந்தப் பயணத்தின் முக்கியத்துவத்தையும், பண்டைய அடையாளங்களைக் காப்பதின் அவசியத்தையும்  கூட விவரித்தார்.

தக்கோலம் கோயிலின் உபயதாரரின் மகனான விஜயராகன் என்பவர் பேராசிரியரின் உரை முடிந்தபிறகு அவர் குறிப்பிட்ட இடங்கள் இங்கு பக்கத்தில் எங்கெங்கு இருக்கிறது என்று சில  ‘ஹிண்ட்’களைக் கொடுத்தார். அடேயப்பா! புடி ஆளை என்று அவரைக் கேள்விகளால் குடைய இன்னும் பல தகவல்களை உதிர்த்தார். மேய்ச்சல் நிலமான முல்லையும், உழவு வயலான மருதமும் ஒன்றிணைந்து காணப்படும் ஒரே இடம் தக்கோலம் தான் என்றார். கல்லாற்றுக்கு பெயர் அமைந்த காரணம், தக்கோலத்தின் பெயர்காரணம் (தக்கன் ஓலமிட்ட தலம் தக்கோலம்) என்றெல்லாம் தகவல்களை இரைத்தார். அதெல்லாம் விட ஊறல் மண்டபத்தில் மீன் சின்னத்தைப் பார்த்ததும் ‘பாண்டியன்’ தடயமோ என்று அல்ப ஆசைகொண்ட எனக்கு அது, ‘நீரோட்டத்தைக் குறிக்கும் குறியீடு’ என்று விளக்கினார். ஆகஸ்டில் 2-ல்தக்கோலம் பற்றி தன்னுடைய புத்தகம் வெளியாகிறது என்றார்.  தொடர்பெண்ணை வாங்கிக் கொண்டேன்.

இறுதியாக கடை ஓனர் முகுந்தன் பேராசிரியருக்கு நினைவுப் பரிசு கொடுத்து சிறப்பித்தார். கம்பெனி ஆர்டிஸ்டான என்னை வழக்கம்போல பேசச் சொன்னபோது ஒரு காரியம் செய்தேன். இப்போது இன்னார் பேசுவார், அடுத்து நீங்கள், நீங்கள் என்று வந்திருந்த அத்தனை பேரையும் பேசும்படி செய்தேன். முதல் தடவையாக இத்தனை பேருக்கு மத்தியில் பேசுகிறவர்கள் என்று அடையாளம் கொள்ளும்படி சிலரின் குரல் அதிர்ந்ததை உணர்ந்தேன். மகிழ்ச்சியாய் இருந்தது. சென்னைக்காரர்கள் நிறையபேர் தமிழ் பேசினார்கள். அதுவும் மனந்திறந்து பேசினார்கள். முப்பது சொச்சம் பேர் பேசி முடித்தபிறகு லெச்சர் எடுப்பது இருட்டுக்கடை முன்னாடி நின்று பஞ்சுமுட்டாய் விற்பது என்பது உங்களுக்கே தெரியும். நன்றி வணக்கம் என்று ரெண்டெ சொல்லில் முடித்துக்கொண்டேன். கூட்டமே கலாய்த்தது. அன்புக்கு நன்றி.

பிறகு ஊர்த்திரும்பும் வழியில் ஒரு அட்டகாசமான புகைப்படம் எடுத்தேன். பாட்டுக்காரர்களோடு ஜோதியில் ஐக்கியமாகிக்கொள்ள குரல் போகும் வரைக்கும் பாடித் தீர்த்தோம். மகிழ்ச்சி மிகுதியில் ஒவ்வொருவரும் விடைபெறும் போதெல்லாம் ‘லாலே லாலலே லாலா! ஆ…….’ என்று வடிவேலு பாணியில் வழியனுப்பி வைத்தோம். ஒரு நல்ல ஞாயிற்றுக்கிழமையை உபயோகமாகவும் அதே வேலையில் மகிழ்ச்சிகரமாயும் மாற்றித் தந்த நண்பர்களுக்கு நன்றி என்று பனுவல் ஆர்கியாலஜி டூர் வாட்ஸப் குழுவில் எழுதி அனுப்பினேன். மெஸேஜ் போகவே இல்லை. காரணம் நாங்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த ஹோட்டலில் கவரேஜ் இல்லை. அடபோப்பா!

-கார்த்திக். புகழேந்தி 
25-07-2016

பி.கு : எழுத்துப்பிழைகள் பிறகு ஆற அமர சரிபார்க்கப்படும். அந்த அற்புத படம் - நாங்களே சொல்லிப்போம்.


Saturday, 16 July 2016

ஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...நேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன்.


எட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவது படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க.


முதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக் கூடத்துக்குன்னு தனியா ஹாக்கி கிரவுண்ட் உருவாகுதுன்னு.


ஹாக்கி மேல சின்னதான் ஒரு பொறி உருண்டை அளவுக்கு தாகம் இருந்தது. கௌசானல் நகர் பள்ளிக்கூட மைதானம் வாளி வாளியா தண்ணி சுமக்கச் சொல்லி தாகத்தை தூண்டி விட்டுச்சு. அடுத்த மாதமே, புது கோச்; புது ஹாக்கி மட்டைகள்; உபகரணங்கள் டீம் செலக்‌ஷன்னு ஹாஸ்டல் முழுக்க ஹாக்கி தான் பேச்சு!


ஜூனியர் அணிக்கு ஆளெடுக்க ஓட்டப்பந்தயம் வைத்தார் கோச் சூர்யா சார். பாளையங்கோட்டைக் காரர் தான். தவிர எங்கள் வளவில் குடியிருக்கும் ஜெபா மிஸ்ஸுக்கு மருமகனும் வேறே. முதல் சுற்றில் ஆறாவதாக வந்தேன். மூன்று சுற்றாக 18பேர் தேர்வானோம். அந்த பதினெட்டுல கழட்டிவிட்டது போக மீதம்பேரில் எப்படியோ பயிற்சி ஜூனியர் அணிக்குள் சேர்ந்துவிட்டேன்.


*
செம்மண் புழுதி பறக்க வெறுங்காலில் பொழுதுக்கும் பயிற்சி! “ஓடு ஓடு ஓடிக்கொண்டேயிரு! ஓடி முடிச்சுட்டியா.. கால்ல எவ்ளோ கல்லு குத்துது பார்த்தியா, போ அதையெல்லாம் பிறக்கு”. “யோவ் ஹாக்கி ஸ்டிக்கை எப்பய்யா கையில் கொடுப்பீங்க.. கண்ணுலயாவது காட்டுங்கைய்யா” என்று ஏங்கிக்கொண்டோம்.


ஒருவழியாக நீண்ட ஓடுதலுக்குப் பிறகு காலணிகள் வழங்கப்பட்டது. அதுவரை அணிந்தே யிராத ஸ்போர்ட்ஸ் சாக்ஸ்களை வித்யாசமாகப் பார்த்தோம். சாக்ஸுக்குள் தடிப்பான கவசம் வைத்துக்கொண்டு ஓடுவது என்னம்மோ மாதிரி இருந்தது.


கருப்பும் பளீர் பச்சையுமாக இருந்த ஹாக்கி மட்டை எனக்குக் கிடைத்தது. இரண்டு கால்களின் முன்முனைக்கு நேரே ஸ்டிக்கைப் பிடித்துக்கொண்டு வெறும் காற்றில் மட்டையைத் திருப்பும் பயிற்சி. கை மணிக்கட்டு வளைந்துகொடுக்க பயிற்சி. பிறகு பந்தை திருப்ப... இப்படியே நின்ற இடத்தில் கினிந்தே கிடந்தோம்.


அடுத்தடுத்த நாளிலெல்லாம் மட்டையை திருப்பிக்கொண்டே பந்தை கால்களுக்குள்ளே இடம் வலம் நகர்த்து! நகர்த்திக் கொண்டேயிரு! இப்போது இரண்டும். இப்போது ஓடு, பந்தை வசப்படுத்தி வைத்திருப்பவனை நெருங்கு, அபகரி, கால்கள் கவனம். பந்து படும் என்று பயமில்லாமல் ஓடு. எதிரியின் திசைக்குள் நுழை... முன்னேறு..


பிடுங்கியவனிடமிருந்து பந்தைப் பறி! சக அணிக்காரனுக்குக் கடத்து! உன் பக்கம் வருகிறதா பந்தைத் தடு! மட்டையால் இழுத்துக்கொண்டு ஓடு இலக்கு நோக்கி! கடத்து; பறிக்கிறவனை ஏமாற்றி சுற்றியடி. கோல் போஸ்டை நெருங்குகிறாயா... கீப்பரை அசைவுகளால் ஏமாற்று... அடி கோல்!

*
வியர்வையில் குளித்துக் களைத்தோம். ஹாக்கி பயித்தியங்கள் ஆனோம். ஜூனியர் இறுதி அணிக்கான பட்டியல் தயாரானது! லிஸ்டில் பெயர் இல்லை. இருந்துமென்ன பொழுதுக்கும் கிரவுண்டிலே கிடந்தோம். பயிற்சி பயி்ற்சி பயிற்சி...


எங்கள் களத்தில் அது முதல் போட்டி கிறிஸ்து ராஜா vs கிறிஸ்து ஜோதி பள்ளிகளின் முதன்மை அணிகளுக்கு இடையேயான ஆட்டம். ஆட்டத்தின் முடிவில் எதிர் அணியினர் 12-1 என்ற கணக்கில் எங்களை பள்ளி முதன்மை அணியைத் துவைத்தெடுத்துவிட்டுப் போனார்கள்.


*
சி.எஸ்.ஐ பள்ளிகளுக்கு இடையேயான முதல் டோர்னமெண்ட். ஜூனியர் அணியின் சப்ஜூட் ப்ளேயர் என்ற பெயரில் எங்களையும் டோர்னமெண்டுக்கு அழைத்துச் சென்றிருந்தார்கள். காட்டுக் கத்தலாக எங்கள் அணியை உற்சாகமேற்றிக் கொண்டிருந்தோம். ஓடி ஓடி குளுக்கோஸ் கொடுத்தோம்.


பெனால்டி வாய்ப்பைச் சரியாக பயன்படுத்தி அணியின் முதல்கோல் விழுந்தது. 0-1. இரண்டாம் பாதியில் மட்டும் 11கோல்களை மளமளவென்று அடித்துத் தள்ளினார்கள் இரண்டு அணியினரும். 3-9 என்று எங்கள் அணிக்கு முதல் வெற்றி. எல்லோர் முகத்திலும் வெற்றிக் களிப்பு! முதல் வெற்றியின் ருசியில் அன்றைக்கு ஹாஸ்டல் சாப்பாடுகூட நன்றாக இருந்தது.


*
பயிற்சி அணியிலிருந்து சப்ஜூட் ப்ளேயராக முன்னேறியிருந்தேன். கிரவுண்டுக்கு லேட்டாக வந்ததற்கு கோச் திட்டித் தீர்த்துக்கட்டினார். காரணம் ஒண்ணுமில்லை, ஹாஸ்டல் வாழ்க்கையில் நிறைய ஒழுக்கக் கட்டுப்பாடுகள் விதிகள் எல்லாம் இருந்தன. அதில் முக்கியமானது சூசையப்பர் மாதிரி ஒன்று தலைமுடியை வட்டம் போட்டு வெட்டிவிடுவது. அல்லது மிகச் சிக்கனமாகக் கருமி விட்டுவிடுவது. இதெல்லாம் பண்ணினால் மகிழ்வார்கள்.


நான் இரண்டுக்கும் அடங்காமல் நீளமாகத் தலைமுடி வளர்த்துக்கொண்டு திரிந்தேன். அதற்காக அடிக்கடி தண்டனைகளும் கொடுக்கப்பட்டன. அப்படி ஒரு காரணத்திற்காகத் தான் கிரவுண்டுக்கு லேட்டாக வந்திருந்தேன்.கதையைச் சொன்னதும் கோச் கேட்டார், “முடி வெட்றதுக்கு உனக்கு ஏண்டா வீம்பு?”


“ எனக்கு தன்ராஜ் பிள்ளை மாதிரி முடி வளக்கணும்னு ஆசை சார். அவர் தான் எனக்கு ஹாக்கி ரோல்மாடல் என்றேன். அடர்ந்துகிடந்த என் தலைமுடியைப் பற்றி ஒரு உலுக்கு உலுக்கிவிட்டு சிரித்தார்.

-கார்த்திக்.புகழேந்தி
16-7-2014

There was an error in this gadget