Posts

Showing posts from April, 2014

கெட்டிமேளம் கெட்டி மேளம்

Image
இதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன்.
இதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா! புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட்ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம் ***
என்ன மச்சான் இந்நேரத்தில் போன் .
என்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு எதுல ! இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா! 
நீயே கண்டுபிடி டொக்.
இவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட்  வைக்குறான். ***
சரவணா !
ஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான்.
எனக்கும் வந்திருக்கு மாமா! “பூவே பூச்சூடவா தானே”
உனக்குமா! என்னவோ மேட்டர் போல
இரு புடிப்போம் சங்கதியை ***
சரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு
உனக்குமா!
ஐ திங் அவருக்கு பொண்ணுபார்த்துட்டாங்கன்னு நினைக்குறேன்
அட ஆமா!…

ரயிலும்... சமூகமும்.

Image
கோவையிலிருந்து சென்னை செல்லும் ரயில்...
D11-ல் 60-வது இருக்கையை முன்பதிவு செய்திருந்ததால் அவசரமில்லாமல் இடத்தில் உட்கார்ந்துவிட்டேன்.

டிக்கெட் செக்கரிடம் பி.என் ஆர். மெஸேஜ் காண்பித்துச் சோதனை முடிந்தது..

கையிலிருந்த 'வறீதையா கான்ஸ்தந்தின் - அந்நியப்படும் கடல்" வாசிக்கத் தொடங்கினேன். மீண்டும்...

(எட்டாயிரம் கிலோமீட்டர் கடற்கரையைக் கொண்ட ஒரு தீபகற்ப நாட்டில் வாழும் மக்களில் பாதிப்பேர் கடலைப் பார்த்தே இராதவர்கள்.

ஆனால்,
இக்கடற்கரையில் வளங்கள் சார்ந்து வாழும் பூர்வக்குடி மக்கள் குறித்த எந்தப் புரிதலும் இல்லாத அதிகாரிகள் மேல்தட்டில் அமர்ந்து கொண்டு கடல் குறித்த கொள்கைகளை வகுக்கின்றார்கள்.
 - அ.கடல் )

ஆச்சர்யம் மிக்கதாய் நான் இருந்த வரிசையில் நானும் எதிரே ஒரு பெண்ணும் மட்டுமே இருந்தோம்.

கருமமே கண்ணாக அடுத்த புத்தகத்திற்குள் நுழைந்துகொண்டிருந்தேன்.

 இடையில் ஈரோடு, சேலம் எல்லாம் கடந்துவிட்டிருந்தது.

அவ்வப்போது அனிச்சையான திரும்பலில் கவனித்தேன். அவர் அணிந்திருந்த இதய வடிவ சிமிக்கியும், நெழிற் வளைந்த மோதிரமும் பார்வையை ஈர்த்தது.
:P

இதனால் என்னை நீங்கள் திருட்டுப் பயல் என நினைச்சுக்கப்…

குற்றாலமும் கனவுப் பிரியனும்

Image
கனவுப் பிரியன்

இந்த மனுஷர் சும்மா இருந்திருக்கலாம்ல… யாரோ கிளப்பி விட்டாங்கன்னு.. இவரும் குற்றாலத்தைப் பற்றி எழுத.. நம்ம முகத்திலும் சாரல் அடிக்க ஆரம்பிச்சுட்டு..

குற்றாலத்திற்கு எத்தனை முறை போயிருக்கேன்னு என்னைக் கேட்டா ஒரு முப்பது நாற்பது..இல்ல ஒரு ஐம்பது முறை… ஆவ்வ்வ் கணக்கில்லீங்க…
திருநெல்வேலில இருந்தது ஐம்பத்தி ஆறு கிலோமீட்டர் சராசரியில் உள்ள பேரூராட்சிதான் தென்காசி,

 சொந்தபந்தங்கள் நிறைந்த ஊர்.
அங்கிருந்து நான்கு இல்ல ஐந்து கி.மீட்டர் தொலைவில் மேற்கு தொடர்ச்சி மலையில் பயணித்தால் குற்றாலம்.

லீவு விட்டா கிளம்பு குற்றாலத்துக்குன்னு தூக்குச்சட்டியில் லெமன் சாதத்தோடு மேக்ஸி கேப் வேன் பிடித்துப் போகும் அக்கம் பக்கத்து உறவுகள் சூழ்ந்த புண்ணிய பூமியில் இரண்டு தலைமுறைக்கும் மேல் வாழ்ந்த குடும்பம் எங்களுடையது.

பக்கத்துவீட்டுப் பெண்களை அத்தை  சித்தி, மாமா, சித்தப்பான்னு உறவு முறை சொல்லி அழைக்கும் பாக்கியம் பெற்ற குழந்தைகளாகவே வளர்ந்தோம்.

***
பேரருவி (Main Falls), பழைய குற்றால அருவி, ஐந்தறுவி, செண்பகாதேவி அருவி, புளியருவி, பழத்தோட்ட அருவி..இப்படி ஒன்பது அருவிகள் பாயும்  குற்றாலத்திற்கு ம…