Posts

Showing posts from 2017

கடிதம் 03 - இந்திரா கிறுக்கல்கள்

Image
இடம் : சென்னை,
                                                                                                                        நாள் : 15-12-2017


அன்புள்ள இந்திரா கிறுக்கல்கள் அவர்களுக்கு,

வணக்கம்,

இந்த வாரத்தின் இரண்டாம் நாளில் சென்னை சத்தியம் திரையரங்கில் திரையிடப்பட்டிருந்த ‘அருவி’ திரைப்படத்தின் முன்னோட்டக் காட்சிக்கு நண்பர்கள் கவிமணி, யமுனைச் செல்வன் ஆகிய இருவரோடும் சென்றிருந்தேன். முன்பாகவே இதுபோலான இரண்டு திரையிடல்களிலும் கலந்துகொள்ள முடியாமலிருந்ததால் படம் பார்த்த பலரும் ‘அட்டகாசம்’ என்ற வார்த்தைக்கு மேல் எதையும் சொல்லாமல் விட்டது மேலும் ஒரு எந்துசியஸத்தை வளர்த்தெடுத்திருந்தது.


ஒரு சமூகத்தின் பண்பாடு எத்தகையது என்பதை அறிந்துகொள்ளுவதற்கான உபாயம், பெண்பால் ஒருத்திக்கு அந்தச் சமூகம் எத்தகைய இடம் அளிக்கிறதோ அதுவே, அச் சமூகத்தின் பண்புக்கு அறிகுறி என்று சித்பவானந்தா எழுதிய மஹாபாரத நூலின் முன்னுரையில் எழுதியிருந்ததை நேற்றைக்கு இரவு வாசித்திருந்தேன். அருவி த…

கடிதம் 02 அருள்ராஜ் குமாரசாமிக்கு...

அன்பு அண்ணன் அருள்ராஜ் அவர்களுக்கு, 
 இந்த வாரத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது. தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை வெளியீட்டுக்கு முன்பாக சினிமா, பத்திரிகை, ஊடக பிரஜைகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதும், படம் பற்றி பொதுவெளியில் பேச்சு மற்றும் சலனத்தை உருவாக்குவது வெகுகாலமாக நடைபெறும் வழக்கமாகத்தான் இருந்துவருகிறது. 
இந்த ‘ப்ரிவ்யூ ஷோ’ கலாசாரத்தில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள்  ‘இணையதள நண்பர்கள்’ எனும் புதிய கேட்டகரி. எனது பத்திரிகைத் துறை  நண்பர்கள் வழியாகச் சிலநேரங்கள் அடாபுடிகள் எதுவும் இல்லாமல் வெளியாகிற படங்களுக்கான டிக்கெட் முதல் பார்க்கிங் டோக்கன் வரை சிலநேரம் கிடைப்பதுண்டு. அவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறதுதான். இதுதவிர்த்து, தற்போது முகநூல் ஊடகம் வழியாக நண்பர்கள் பரிந்துரைந்த்து ப்ரிவ்யூ ஷோக்கள் பார்க்க வாய்ப்பமையும்போது ஒருவிஷயம் பயங்கர நெருடலாகிவிட்டது. 
 சமீபத்தில் ஒரு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக நண்பர்களோடு பார்த்துவந்தோம். நிறைய சொதப்பல்களும், பெருவாரியாக இடங்களில் மேம்போக்காக நகர்த்தப்பட்ட காட்சிகளுமாகச் சேர்ந்து க…

கடிதம் 01 - ஜீவாவுக்கு...

Image
அன்புள்ள ஜீவா,

ஊருக்குப் போய்விட்டு வந்ததுபற்றி எழுதச் சொல்லிக் கேட்டிருந்தீர்கள். உண்மையைச் சொன்னால் நவம்பர் தொடங்கி இப்போதுவரை நாட்கள் முழுக்க நிறைய வேலைப் பளுவுடனே நகர்கிறது. கிடைத்த இடைவெளிகளில் தான் ஒன்றிரண்டு புத்தகங்கள் வாசிக்கிறேன். இடையே ஒரு மூன்று நாட்கள் விடுப்பு எடுத்துக்கொண்டு ஊருக்குப் போனதும், நம் ஜீவா படைப்பக புத்தக வெளியீட்டு நிகழ்ச்சிக்காகத்தான். வள்ளியூரில் நடைபெற்ற அந்த நிகழ்ச்சியை ஒரு குடும்ப விழாவாக மாற்றியிருந்தார் நண்பரும் நூலாசிரியருமான எழுத்தாளர் மு.வெங்கடேஷ். 

அவரை எனக்கு சொல்வனத்தில் எழுதியிருந்த சிறுகதை வழியாகத்தான் தெரியும். கூடவே, அவர் மாதவன் இளங்கோவின் நண்பர். (மாதவன் இளங்கோவும் நானும் ஒரே நேரத்தில் அகநாழிகையில் முதல் சிறுகதைத் தொகுப்பை வெளியிட்டிருந்தவர்கள்) வெங்கடேஷ் சிறுகதைகளைத் தொடர்ந்து வாசித்தபோது, அவரின் எளிமையான கதைசொல்லித் தனமும், திருநெல்வேலி வட்டார வழக்கும்  எனக்குப் பிடித்துப் போயிருந்தது. நம் படைப்பகத்திலே தொகுப்பு கொண்டுவருவோம் என்றதும் முழுமனதாகச் சம்மதித்திருந்தார். 

வள்ளியூருக்கும் எனக்கும் பெரிய தொடர்புகள் இல்லாவிட்டாலும் அந்த ஊரோடு எனக்க…

‘தீரன் அதிகாரம் ஒன்று’ - ஆப்ரேசன் பவாரியா

Image
2010ம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் அல்வாரில் இருந்து ஓர் அடையாளம் தெரியாத செல்போன் அழைப்பு வந்திருந்தது எனக்கு. தெரிந்த தத்து பித்து இந்தியில் பேச்சுக் கொடுத்தபோது, அதில் பேசிய ராஜூ என்பவன், ‘எங்கள் ஊரில் ஜே.சி.பி இயந்திரத்தில் வேலை செய்யும்போது ஒரு புதையல் கிடைத்தது. அது ராஜஸ்தான் மன்னர்கள் காலத்தைய தங்கக் கட்டிகள், யாருக்கும் தெரியாமல் விற்க நினைக்கிறேன். நீங்கள் வாங்கிக் கொள்ள நினைத்தால் தொடர்ந்து இது பற்றிப் பேசலாம்’ என்று புரிய வைத்திருந்தான். 

அன்றைக்கு இருந்த மனநிலையில், ‘ஏமாத்துப் பேர்வழிகள் எப்படியெல்லாம் அலையுதுங்க பார்’ என்று அந்த அழைப்பை அப்படியே கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டேன். பிறகு 2015ம் வருடம், உண்மையிலே அப்படி ஒருத்தன்கிட்டே ‘பிசிறு’ கிடைத்து, அதை அவன் விற்கச் சென்னைக்கு வந்து, இங்குள்ள ‘குதிரை’ சூதாடிகள் அவனிடம் ஏமாறுவது போலவும் புனைவாக ஒரு சிறுகதை எழுதினேன். சில தகவல் சரிபார்ப்புக்காகச் சென்னை சௌகார்பேட்டையில் நகை தயாரிப்பு தொழிற்சாலை நடத்திவந்த நண்பனிடம் அந்தக் கதையை வாசிக்கக் கொடுத்தேன். 
முழுவதும் வாசித்துவிட்டு, உனக்கு அல்வார் பற்றி உனக்கு என்ன தெரியும் என்று கேட்டான…

வாசிப்பில்... 12-10-2017

Image
சமீபத்தில் என்னென்ன புத்தகங்கள் வாசித்தீர்கள் கார்த்திக்?
-மா.கோதண்டம், சென்னை.
“மூன்று புத்தகங்கள். அதில் ஒன்று ஜீ.முருகன் அவர்களின் கண்ணாடி சிறுகதைத் தொகுப்பு. இரண்டாவது மு.ஆனந்தன் எழுதிய யுகங்களின் புளிப்பு நாவுகள் கவிதைத் தொகுப்பு. மூன்றாவது சா.தேவதாஸ் மொழிப்பெயர்ப்பில் புனைவும் பிரக்ஞையும் என்ற தொகுப்பில் உள்ள பிறமொழிக் கதைகள் சில...
எனக்குக் குறிப்பாக இது இப்படியான கவிதை என்றெல்லாம் பிரித்து வகுத்து வாசித்துப் பழக்கமில்லை. அந்த ஏரியாவில் அதிகம் புழக்கமுமில்லை என்றாலும், யுகங்களின் புளிப்பு நாவுகள் தொகுப்பில் ஒரு நான்கு கவிதைகள் அப்படியே அதன் படிமங்களால் மனத்தில் உறைந்துபோன காட்சிகளாக நின்றுவிட்டது. பொணந்தூக்கி சாமி, நாங்கள் யாராலும் பாராட்டப் படாத குழந்தைகள், அம்மா பலூன் குட்டி பலூன், அம்மாக்களின் செவிப்பூக்கள் ஆகிய தலைப்பிலான கவிதைகள் அவை. * ஜீ.முருகனின் முந்தைய தொகுப்புகள் படித்ததில்லை. சில கதைகள் மட்டும் வாசித்திருக்கிறேன், கேட்டிருக்கிறேன். அவரது காண்டாமிருகம் சிறுகதையை அந்தத் தலைப்புக்காக வாசித்தேன். ‘கண்ணாடி’ தொகுப்புக் கையில் கிடைத்த சில நாட்களுக்குப் பிறகு அதன் முதல் கதையா…

கி.ரா- 95 | கி ரா என்றொரு கீதாரி - தொகுப்பு : கழனியூரன்

Image
நானிலமாக இருந்த தமிழ் நிலம் பின்வந்த இலக்கியங்களினால், குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்திணைகளாகப் பிரிகிறது. ஒவ்வொரு திணைக்கும் ஒவ்வொரு வாழ்க்கை ஒவ்வொரு கடவுள். ஒவ்வொரு விலங்குகள், பறவைகள்.
சரி, இந்த ஐந்தில் கரிசல் எங்கே வருகிறது. காணவே காணோம். கரிசல் மட்டுமில்லை உட்கார்ந்து தடவினால் இன்னும் பல புதிய நிலத் திணைகள் அண்மைய கால வரலாற்றில் நம்மால் உருவாக்கப் பட்டிருக்கின்றன. அதை எல்லாம் நாம் கண்ணைமூடிக்கொண்டு கடந்து போய்விட முடியாது. அங்கே ஒரு தனித்த வாழ்க்கை இருக்கிறது. வேறெங்கும் நிலவாத தட்பவெட்பம் சுடுகிறது. மழைக்குப் பிறகு வண்டிமை போல களிம்பாக வழுக்கும் தனித்த நிலம் இருக்கிறது. எல்லாவற்றுக்கும் மேலாக அங்கே ஒரு வாய்மொழி நீண்டு நிலைத்திருக்கிறது.
இந்த வாய்மொழிகளை, ஆவணங்களை, நிலக்காட்சிகளை, வாழ்க்கையை, மனிதர்களை தன் எழுத்தில் பதிந்தவர் கி.ராஜநாராயணன். அவர் தெற்கத்தி கரிசல் நிலத்தில் செய்த எழுத்து வேலைகளில் பாதியை உலகின் வேறெந்த திசையில் வாழ்கிற அல்லது வாழ்ந்த வேறெந்த படைப்பாளியாவது தொடர்ந்து தன் தொன்னூற்றைந்து வயது வரை செய்து வந்தார் என்றால் அவருக்…

கோடை விடுமுறையும் கையெறி குண்டுகளும்

ஆதம்பாக்கம் வீதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவன் ஒருவனைக் காட்டி, “புகழ் அந்தப் பெடியன பாருங்களேன்” என்றார் அகரமுதல்வன். அவர் சொல்லுகிற பெடியன் என்கிற அந்தச் சொல் எனக்கு ரொம்பவே பிடிக்கும். சிறுவன் அவன்பாட்டுக்கு மண்ணையோ கல்லையோ வைத்து தனியாளாக விளையாடிக் கொண்டிருந்தான். விழுகிற வெயிலெல்லாம் அவன் தலைமேலே மின்னிக் கொண்டிருந்தது.நானும் சின்ன வயசில் கோடை விடுமுறை விடுகிற காலத்தில் இதேமாதிரி தண்ணியைக் காணாத கழுதைபோல ஊரைச் சுற்றிக் கொண்டு, விளையாடித் திரிவேன். என்ன ஒன்று என்னைச் சுற்றி எப்போதும் ஒரு பெங்கூட்டம் நிழல்வட்டம் போட்டபடி இருக்கும். கையில் கிடைத்தது, எடுத்தது என்று என்னத்தையாவது உருட்டி விளையாடிக் கொண்டிருப்போம்.
கொஞ்சம் வசதி உள்ள வீட்டான்கள் எல்லாம் கிரிக்கெட்டு, பேங்க்கும், வெள்ளைக்காரன் சீட்டு விளையாட்டுகளும் ஆடிக் கொண்டிருக்க, வீதி விளையாட்டுகளில் இப்போ என்ன சீசன் என்று நிர்ணயிக்கிற தார்மீகவாதிகளாக நாங்கள் இருப்போம். எங்கள் தெருவில் எந்த விளையாட்டைக் கையில் எடுக்கிறோமோ அதுதான் பக்கத்துத்தெருக்களில் சீசனாக அமையும்.
பம்பரம், கோலிக்காய், சீட்டட்டை, செதுக்காங்கல், எறிபந்து, தா…

ஆடு வளர்ப்பு

Image
வெள்ளாடுகளை ஏழையின் பசு என்பாராம் காந்தி. அவர் ஆட்டுப்பால் குடித்த பாசத்தில் சொல்லி இருக்கலாம். அதுவும் உண்மைதான். ஊரில் ஆடுகள் வளர்க்காத வீடுகளே கிடையாது. ஆட்டுக் கிடைக்கும் பட்டிக்கும் அலைந்து திரிந்தே ஆயுசைத் தீர்த்த மக்களைக் கொண்ட தெரு எங்களுடையது .


எட்டு பத்து வயசில் எல்லாம் மேய்ச்சல் நிலங்களிலே என் பூரணப் பொழுதும் கழிந்துக் கிடந்தது. கிடை போட்டிருக்கிற வயல்களிலும், ஆற்றங்கரை திறந்த வெளிகளிலும் ஆடுகளை பத்திக்கொண்டு போகிற சேக்காளிகளோடு சுற்றித்திரிந்து, மரமேறிக் குரங்கு விளையாட்டு ஆடி, ஆட்டுக்கு கிளை ஒடித்துப் போட்டு, தூக்குப் போணியில் மோர்க்கஞ்சி குடித்து, ஆடுபுலி ஆட்டம் ஆடி, ஆலமர நிழலடியில் ஒரு குட்டித் தூக்கம் போட்டு எழுந்து வீடுவந்து சேருவது தனிவேலை.
வெள்ளாட்டுப் பெட்டைகளும், கிடாய்களும் செம்மறிகளும் தான் உள்ளூரில் அதிகம் வளர்க்கப்படும். முதல் தடவை நான் ஆத்தூரில் பிரசவம் பார்த்த பெட்டை ஆட்டு மூன்று குட்டிகள். மூன்றில் ரெண்டு கிடாய்.தலையீத்துக் குட்டியே வெள்ளையில்லாத கருங்கிடாய்கள் என்பதால் அந்த ஆத்தூர் ஆச்சிக்கு மனசு பொங்குமுகமாகிவிட்டது. ‘கருங்கிடாய் பிறந்தால் கையிலே காசு’ என்ப…

கள்ளும் நறவும் தேறலும்..

Image
ன்னன் என்கிற மன்னன் முன்னிலையில் கூத்து நிகழ்த்தி, ஆடல் பாடல் பாடி மகிழ்வித்து, பரிசுகள் வாங்கித் தங்கள் ஏழ்மையைத் தீர்த்துக்கொள்ள பாணர்களும், கூத்தர்களும் அடங்கிய கூட்டம் ஒன்று மேற்குமலைகள் வழியாகப் பிரயாணம் போகிறது. அவர்களை வழியில் சந்திக்கிற பரணர் என்கிற புலவர் நன்னன் இறந்த கதையைச் சொல்லி, “நீங்கள் பறம்புமலை அரசன் பாரிகிட்டே செல்லுங்கள். தன் படைகளால் மூவேந்தரையும் வெல்லக்கூடியவன் உங்கள் கலைக்கு முன்னே சரணடைவான். பெரும்வள்ளல் அவன். கூடவே, கபிலர் என்கிற அறிஞனையும் வைத்திருக்கிறார்” என்று வழிகாட்டுகிறார். ஆக, பாணரும் கூத்தரும் அடங்கிய கூட்டம் பாரியிடம் செல்கிறது. இது பெரும்பாணாற்றுப் படையில் மேல்ச்சுருக்கக் கதை.
கலை மக்களால் எடுத்து இயம்பப்பட்ட இந்தக் கதைப்பாடலுக்கு உள்ளே நிகழும் சின்னச் சின்ன விஷயங்கள்கூட ரொம்ப நுணுக்கமாக நம்மை அந்தக் காலத்தின் சித்திரத்தைக் காட்சிப்படுத்தி சிலிர்க்க வைத்துவிடும். உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்கிறேன் கேளுங்கள். பாரியைப் பார்க்கப் போகும் பாணர்கூட்டம் வழியிலே சில வேளாளர்களைச் சந்திக்கிறது. ஏழுநாள் நடக்கும் தங்களுடைய கோயில் நிகழ்ச்சியில் நீங்கள் வந்து கலை …