Posts

Showing posts from August, 2016

இட்டிலி

Image
உடம்பு சரியில்லாத அப்போதுதான் மனசு இட்டிலியை ஏற்றுக்கொள்ளத் துணிகிறது. அதென்னவோ இட்டிலி, தோசை என்றால் நம் வீட்டில் சுட்டது மட்டும்தான் மனசுக்குப் பிடித்து சாப்பிடத் தோணும். சில நேரம் தோசை விதிவிலக்கு.  ஊர்ப்பக்கங்களிலெல்லாம் ரொம்பச் சின்ன வயசில் பண்டிகைக்கு மட்டும்தான் இந்த மாவுப் பதார்த்தம் கிடைக்கும். பெரியம்மையின் மூத்த மகளைப் பெண் பார்க்க வரும்போது, நான் கையில் நிற்காத பிள்ளையாக திரிந்துகொண்டிருந்தேன். விடிந்தால் சொந்தமெல்லாம் வந்துவிடுமென்று வட்டம் போட்டு ஆட்டுரலில் மாவு அரைத்துக் கொண்டிருந்தார்கள் அத்தை சித்தி அம்மைகள். கைவலி எடுத்தால் சித்தியிடமிருந்து பெரியம்மை, அவளிடமிருந்து சின்ன அத்தை என்று நான்கு ஐந்து ஆள் மாறும் அரவை. அவ்வளவு பெரிய ஆட்டுரல் அது. எட்டு பத்து கிலோ குழவியைத் தூக்கி கல்லைக் கழுவும் வலு கொண்ட பெண்கள் இருந்த வீடு அது.  உப்பு, சோடாப்பு கூட குறைய அல்லது மாவு பதத்தில் ஏதும் குறை இருக்கா இல்லையா என்பதற்கு ஒரு சொலவடை உண்டு. "ஆறு கைபோட்டு அரைச்ச மாவுல கூறு கொறை சொல்ல முடியாது கேட்டியளா" என்று. இதற்கு நான் ரெண்டு அர்த்தம் பண்ணிக்கொண்டேன். ஆறு பெ