Posts

Showing posts from April, 2016

10 புத்தகங்கள்

Image
01, கோபல்ல கிராமம் (1976) கி. ராஜநாராயணன். காலச்சுவடு பதிப்பகம்.   02, கடைத்தெரு கதைகள் ஆ.மாதவன். நற்றிணை பதிப்பகம். 03, வெண்ணிலை (2006) சு.வேணுகோபால் . தமிழினி   பதிப்பகம். 04,கொற்கை(2013) ஜோ டி குருஸ் காலச்சுவடு பதிப்பகம். 05,கூளமாதாரி (2000) பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகம். 06, கோவேறு கழுதைகள் (1994) இமையம். க்ரியா பதிப்பகம். 07, சிறகுகள் முறியும் அம்பை. காலச்சுவடு பதிப்பகம். 08, அஞ்சலை கண்மணி குணசேகரன் தமிழினி பதிப்பகம். 09, உப்புவேலி – ராய் மாக்ஸம்.(2015) தமிழில் : சிறில் அலெக்ஸ்  “எழுத்து” 10, மௌனத்தின் சாட்சியங்கள் (2015) சம்சுதீன் ஹீரா பொன்னுலகம் பதிப்பகம்.

ராம் முத்துராம் சினிமாஸ் | Ram Muthuram Cinemas | Tvl

Image
ந ண்பர் வே.ராமசாமி முகநூல் பக்கத்தில் திருநெல்வேலி ராம் தியேட்டர் பத்தின பேட்டியைப் பகிர்ந்திருக்கிறார். அதைப் பார்த்ததுமே ஒருமாதிரி பரவசம். நெ ல்லை சந்திப்பிலிருந்து தச்சநல்லூருக்குப் போகும் பாதையில் உடையார்பட்டி குளத்தாங்கரை முக்கில் நிற்கிறது ராம் முத்துராம் தியேட்டர்ஸ்.ஊருக்குச் செல்கிறபோது பைபாஸ் ரயில்வே பாலத்தில் பேருந்து ஏறுகிறபோதே ராம் தியேட்டரின் கூரையைப் பார்த்துவிட்டால் ஒரு திருப்தி.  “இம்ம்...” இன்னும் கொஞ்ச தூரம்தான் வண்ணாரப்பேட்டைக்கு என்று முதுகில் பையை எடுத்து மாட்டிக்கொள்ளலாம். சிறுசில் ஒரு பத்து இருபது சேக்காளிகளாக படத்துக்குப் போகவேண்டுமென்று முடிவெடுத்ததும் ஒவ்வொருத்தன் சைக்கிள்களாகத் திரட்டுவோம். சைக்கிள் இல்லாதவன் டபிள்ஸ் அடிக்கத் திராணி உள்ளவனோடு கூட்டு சேர்ந்துகொள்வது. முன்னாள் ஒருத்தன் பின்னால் ஒருத்தனாக மூன்று பேர், நான்கு பேராகவெல்லாம் வெக்கு வெக்கு என்று பாளையங்கோட்டையிலிருந்து படம்பார்க்கப் போவோம். டிக்கெட்டுக்கு காசு பார்க்கவே கடுகு டப்பாக்களைக் கலவரப்படுத்த வேண்டிய சூழல் எப்போதாவது ஏற்படும். இல்லை என்றால் படம் பார்க்கவும், பரோட்டாவுக்குமாக

உப்புவேலி | ராய் மாக்ஸம்

Image
      பா ற்கடலைக் கடைந்தபோது நஞ்சு தோன்றியதாகவும், அந்த ஆலகால விஷத்தை பரமசிவன் விழுங்கியதும் பார்வதி அவர் கழுத்தைப் பற்றிப் பிடித்துக்கொள்ள, பரமனுக்கு நீலகண்டன் என்று பேர் வந்து தாண்டவம் ஆடியதும்  புராணத்தில்   கதையாகச் சொல்வதுண்டு, இதற்கு இன்னொரு மாற்று விளக்கம் ஒன்று வாசித்தேன். பாற்கடலைக் கடைந்தபோது, வெளிப்பட்டது விஷம் அல்ல அது உப்பு என்று. கையிலாயத்தில் கிடைக்காத பொருளும் அதுதானே? பொதுவாகவே மலைப்பாங்கான இடங்களில் உப்பிற்கான ஆதாரங்கள் குறைவு. அங்குள்ள மக்களுக்கும் சரி, விலங்குகளுக்கும் சரி  உப்பு கிடைப்பதில் பெரிய இடர்பாடுகள் உண்டு. கடல்சாரா நிலங்களில் வசிக்கும் காட்டுவிலங்குகளில் யானைகள் தான் உப்புருசி எங்கே கிடைக்கும் என்றுத் தேடியலைந்து உப்புச்சுவையுள்ள மண்ணைக் கண்டுபிடிக்கும். மற்ற விலங்குகள் யானையைப் பின் தொடரும்.   கயிலாய மலையில் வசித்த சிவனுக்கு உப்புச்சத்து குறைவாகவே கிடைத்திருக்கிறது. அதனாலே பாற்கடலைக் கடைந்தெடுத்த  உப்பை அவர் விழுங்க, தொண்டைப் பகுதியில் உள்ள தைராய்டு சுரப்பிக்கு உப்பின் சத்துகள் கிடைக்கும் வண்ணமாக பார்வதி கழுத்தைப்பற்றிக் கொள்கிறார். உடல்சோர்வு