Posts

Showing posts from January, 2015

காக்காய்ச் சோறு (2008) - விமலன்

Image
அன்பு தோழருக்கு,      என்னை உங்களுக்குத் தெரியாது, உங்கலை எனக்குத் தெரியாது. நம் இருவரையும் பிணைத்தது ஒருகைப்பிடி சோறுதான். காக்கைச் சோறென்று பெயரிட்டிருக்கின்றீர்கள் அதற்கு. மரியாதைக்குரியவரின் பரிந்துரைத்தலான அன்பின் பேரில் உங்கள் காக்கைச் சோற்றை சுவைபார்த்தேன். என்ன ஒரு அட்டகாசமான எழுத்து நடை உங்களுடையது. மனம்போன போக்கில் தடதடவென்று எழுதி இருந்தீர்கள். கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப்போய் முதல் இரண்டு கதைகளை முடித்ததும் உங்கள் எண்ணுக்கு அழைத்துப் பேசினேன் நினைவிருக்கிறதா! என் பெயர் புகழேந்தி. நீங்கள் விமலன் தானே. காக்கைச் சோறு உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்புதானே. நலம் நலம். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன்.      கதைகளின் ஊடுதிரள் வழியாக நுழைந்து கடக்கும் புலங்கள் / மனிதர்கள் / பாடுகள் என்று பெருவாரான கதைகள் கவனிக்கத் தகுந்தவை. இந்தக் கதைகள் இத்துடன் முடிகின்றன என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாதது போல சில முடிந்துவிட்டும் மனதிலிருந்து மறைய மறுக்கின்றன. சில கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நகரமறுக்கும் தேர் போல சலிப்பேற்றுகின்றன. அநேக கதைகளும் நான் எனும் ஒற்றைப் பார்வையோடே எழுதப்பட்டிருப்…

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான் (2015)

Image
ஜெய்குட்டிக்கும் அவன் அப்பாவுக்குமான இரண்டு கடிதங்கள்.
அன்பு ஜெய்குட்டிக்கு,
     அப்பாக்களின் கரங்களால் கவிதையாக எழுதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய் வாழ்த்துகள் கண்ணா. உனக்குத் தெரியாது அப்பாவுக்குள் அந்த கவிதைகளை உன் சிறு சிறு அசைவுகள் தான் வரைந்துகொண்டிருக்கின்றன என்பது.  இந்த வினாடிகளில் நீ எப்போதும் இறகுகளோடு அசைகின்றவனாக எனக்குள் உருவகம் கொள்கிறாய். உன் கையில் கிடைத்த தோட்டத்துக் கல், தம்ளர் மழை, காகிதக்கப்பல் காற்றிலசையும் இறகு எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கின்றதென்பதும் அவர்களுக்கும் (கவனி”: அவைகளுக்கும் அல்ல அவர்களுக்கும் உயர்திணை) உனக்கும் நிகழும் உரையாடல்களின் கவிதைகளை இன்றிரவு வாசித்தேன். தனித்திருக்கும் என் அறைக்குள் நீ காற்றைக்கிழிக்கும் ஓசையுடன் ஓடியாடி அலைகிறாய். ஜெய்குட்டி ஜெனிவீட்டு ஜன்னல் திறந்திருக்கிறதாய் மகிழ்ந்துகொண்டாயாமே ஜெனி உனக்கு எத்தனை பிடிக்கும் என்பதை ஜெனிக்கு யாரேனும் மழையை அனுப்பிச் சொல்லட்டும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் முதலையை விமானமாக மாற்றும் மேஜிக்கை எனக்கும் சொல்லித்தருகிறாயா. நான் யாருக்கும் தெரியாமல் ரகசியமாய் முயற்சித்துப் பார்க்கிற…

மழை நடந்தோடிய நெகிழ் நிலம்

Image
மழை நடந்தோடிய நெகிழ் நிலம். (2015)கனிமொழி.ஜி எழுதி இருக்கும் முதல் கவிதைத்தொகுப்பு. அகத்துறவு வெளீயீடு. இதுதான் நான் இது என்வழி என்று தொடங்கும் புத்தகத்தின் நன்றி கதாப்பாத்திரங்களுக்கடுத்து நளிநடனம் ஆடும் சிவனைக் கடந்து உட்செல்லச் செல்ல இயற்கையின் நுகர்ப்பையும் பனியில் ஈரச்சுடுதலையும் கடந்துசெல்லும் கவிதைகள். முதன்முதலாக இவருடைய கவிதைகளை வாசிக்கின்றேன். வார்த்தைகளின் நடனம் எனக்குப் பிடித்திருந்தது. 
என் நிலம் புது வண்ணங்கொள்ளும் என்ற தலைப்பைச் சொல்லியே தொகுப்பைப் பற்றி எழுதி முடித்துவிட முடியும் இந்த கவிதைகள்  எல்லாம் என் நிலம் சார்ந்தவை, என் உணர்வு சார்ந்தவை, என் வலி, அன்பு,பேரன்பு,கருணை, நேசம், கரைந்துவிடும் இயற்கை என என்னோடு சம்பந்தப்பட்டவை இவை அனைத்தும் என்னுடையது. இது நான் இது எல்லாமே நான் தான் என தன்னுலகை கவிதைகளில் பறந்தலைகிறார். 
மழை வழிந்தோடிய நிலத்தில் பதிந்த பாதச்சுவடுகள் காய்ந்த நாட்களில் விளிம்புகள் உடைந்து மணலாய் உட்குவிவது போல இந்தக்கவிதைகள் ஒரு தடத்தையும் பின்னே ஒரு சமநிலைக்கான தயாரிப்பையும் செய்து போகிறது. இவரது நிலம் /கவிதைகள் புதுப் புது வண்ணங்கொள்கிறது. நமக்குள் புது…