மழை நடந்தோடிய நெகிழ் நிலம்

மழை நடந்தோடிய நெகிழ் நிலம். (2015)












கனிமொழி.ஜி எழுதி இருக்கும் முதல் கவிதைத்தொகுப்பு. அகத்துறவு வெளீயீடு. இதுதான் நான் இது என்வழி என்று தொடங்கும் புத்தகத்தின் நன்றி கதாப்பாத்திரங்களுக்கடுத்து நளிநடனம் ஆடும் சிவனைக் கடந்து உட்செல்லச் செல்ல இயற்கையின் நுகர்ப்பையும் பனியில் ஈரச்சுடுதலையும் கடந்துசெல்லும் கவிதைகள். முதன்முதலாக இவருடைய கவிதைகளை வாசிக்கின்றேன். வார்த்தைகளின் நடனம் எனக்குப் பிடித்திருந்தது. 

என் நிலம் புது வண்ணங்கொள்ளும் என்ற தலைப்பைச் சொல்லியே தொகுப்பைப் பற்றி எழுதி முடித்துவிட முடியும் இந்த கவிதைகள்  எல்லாம் என் நிலம் சார்ந்தவை, என் உணர்வு சார்ந்தவை, என் வலி, அன்பு,பேரன்பு,கருணை, நேசம், கரைந்துவிடும் இயற்கை என என்னோடு சம்பந்தப்பட்டவை இவை அனைத்தும் என்னுடையது. இது நான் இது எல்லாமே நான் தான் என தன்னுலகை கவிதைகளில் பறந்தலைகிறார். 

மழை வழிந்தோடிய நிலத்தில் பதிந்த பாதச்சுவடுகள் காய்ந்த நாட்களில் விளிம்புகள் உடைந்து மணலாய் உட்குவிவது போல இந்தக்கவிதைகள் ஒரு தடத்தையும் பின்னே ஒரு சமநிலைக்கான தயாரிப்பையும் செய்து போகிறது. இவரது நிலம் /கவிதைகள் புதுப் புது வண்ணங்கொள்கிறது. நமக்குள் புதுப்புது எண்ணமும் கொள்கிறது. மழை நடந்தோடிய நிலத்தில் மழையின் வாசனை அடித்தது. மழைக்குப்பிறகான தும்பிகள் போல அவை நமக்குள்ளே அலைதல் கொள்கின்றன.

-கார்த்திக் புகழேந்தி 

கண்ணில் பட்ட பிழை :
பக்கம் 3 –
21-ம் வரி.
அயர்வற்ற- அயற்வற்ற என அச்சாகியிருக்கிறது.


writterpugal@gmail.com
12-01-2015

Comments

  1. மிக்க அன்பும் மகிழ்வும் கார்த்திக்

    ReplyDelete

Post a Comment

மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது

Popular posts from this blog

மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics

தமிழ் மாதங்களும் சொலவடைகளும்

முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil