அகம் புறம் மரம் | குகை.மா.புகழேந்தி

குகை.மா.புகழேந்தியின் “அகம் புறம் மரம்” கவிதைத் தொகுப்பை அலுவலக நண்பரின் மேசையிலிருந்து எதேச்சையாக எடுத்து வாசிக்கத் துவங்கினேன். கட்டிடங்களுக்குள் உட்கார்ந்து ஒரு காட்டை வாசிக்கிற அனுபவத்தை தந்துபோனது அந்தக் கவிதைகள். புதுவீடு கட்டுவதென்று முடிவானபிறகு, புறவாச இரண்டு தென்னம்பிள்ளைகளை நடுவதென்று முடிவானது. பருத்த கன்னுக்கு அண்ணன் பேரும், இளசுக்கு என் பேரும் வைத்து வளர்த்தோம். அத்திவாரம் கல்நிரப்பி, கட்டிடம் எழுந்தபோது அரை ஆள் உயரத்துக்கு மரங்கள் ரெண்டும் கீற்றுவிட்டிருந்தது. கட்டிட வேலைக்காக கட்டின தொட்டியை அப்படியே பரமாரிக்க ஆரம்பித்ததால் புழங்குகிற தண்ணீரெல்லாம் மடைவழியாக தென்னம்பிள்ளையின் பாத்திக்குப் போய்விடும். இந்தப்பக்கம் ரெண்டு மூணு வாழைகள், ஒரு மாங்கன்னு, கீரைச்செடி, பூசணி, முருங்கை என்று வீட்டுக்குத் தேவைப்படும் அத்தனைக் காயும் தோட்டத்திலே விளையத் தொடங்கி...