அன்னதோர் சொல் : அஸ்தினாபுரம் | ஜோ டி குருஸ்

வாழ்க்கை அவரவரது போராட்டங்களால் ஆனது. நிரைந்து ததும்புகிற மனத்தோடு வாழ்க்கைப்பாடுகளின் பின்னோக்கிப் பார்க்கிறபோது அத்தனையும் ஊழ் என்று வலியுறுத்துகிறது இந்தப் போர்க்களம். எத்தனையோ இடர்களை சிலுவைகள் போல் சுமந்துகொண்டே வாள்களைச் சுழற்றி முன்னேறுகிறோம். யுத்தத்தின் பெருங்குரல் உள்ளே கிடந்து அரற்றிக்கொண்டே இருக்கிறதை மறைத்தபடி... அஸ்தினாபுரம் தலைப்புக்கும் உள்ளடக்கத்திற்கும் நேரடியாக எந்தக் களத்தொடர்பும் இல்லை. ஆனாலும் முழுமொத்தப் பக்கங்களில் உருளும் பகடைகளைக் காண்கிறபோது அஸ்தினாபுரம் என்ற தலைப்பு நிகரற்றதாய் பிணைந்து கொள்கிறது. கொற்கை நிலத்தில் ஆமந்துறையில் பிறந்து, முதல் மனைவியின் கடூரத்தினால் வாழ்க்கைப் பாதையில் புரட்டியெடுக்கப்பட்ட அமுதனுக்கு, தொண்டை மண்டலத்தில் செம்மாங்குப்பத்தில் வாழ்ந்துகெட்ட குடும்பத்தின் இளையவளாகப் பிறந்து, ‘வழக்கு முடியும் வரை நீ யாரென்று யாரும் கேட்டால் வேலைக்காரி என்றுவிடுகிறேன்’ எனச் சொல்லி மாலை மாற்றிக்கொள்ளும் புதுமனைவி ஆனந்தியின் அறிமுகத்தோடு தொடங்குகிறது அத்தினாபுரத்...