சந்திரஹாசம் - அகமும் புறமும்..
புத்தகம் கையில் கிடைத்த தினத்திலிருந்து இன்றைக்குவரைக்கும் “படிச்சதும் கொடுங்க” என்று முன்பதிவு செய்தவர்களின் எண்ணிக்கை நூறைத் தொட்டிருக்கும். சரி என்ன இருக்கிறது சந்திரஹாசத்தில். என்னதான் அந்த முடிவில்லா பெரும் யுத்தத்தின் கதை? நிற்க!... முழுக்கதையுமோ புத்தகத்தின் மொத்த தொகுதியையுமோ இங்கே நான் எழுதப் போவதில்லை. அதற்கு வாய்ப்புமில்லை. ஆம்! வாசித்துவிட்டு எப்படி இருக்கின்றதெனச் சொல்லுங்கள் என “விகடன் கிராபிக்ஸில்” இருந்து தரப்பட்டது முதலாம் பாகம் மட்டுமே. அந்த அனுபவத்தை மட்டுமே நான் முலாம் பூசமுடியும். பாண்டியர்களின் சரித்திரம் சோழர்கள் அளவுக்கு மெய்கீர்த்திகளால் நிரம்பியது அல்ல. சமகாலத்தில் வெளியான பல சரித்திரநாவல்கள்கூட சோழர்களின் உயர்வைக் கொண்டாடும் மனநிலையிலே எழுதப்பட்டவையாகவே கருதுகிறேன். அந்தவகையில் பாண்டியர்களின் சரித்திர மற்றும் புராணக் கதைகள் திரைப்படங்களின் மூலம்தான் அதிகம் வெளிப்பட்டது. சோழர்கள் தங்களைச் சூரியகுலத்தினர் என்று அழைக்க, பாண்டியர்களோ தங்களைச் சந்திர குலத்தினரென்று அடையாளப்படுத்திக் கொண்ட...