Posts
Showing posts from October, 2016
மலரே நின்னே - பிரேமம் |Premam Malare Ninne Kannathirunnal |Tamil Lyrics
- Get link
- X
- Other Apps
தெளிமானம் மழவில்லின் நிறம் அணியும் நேரம் நிறமார்ந்நொரு கனவு என்னில் தெளியுன்ன போலே புழையோரம் தழுகும் நீர் தணு ஈரன் காற்றும் புளகங்ஙள் இழை நெய்தொரு குழல் ஊதிய போலே குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகம் அருவும் மயிலிணைகள் துயிலுணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம் அழகே...... அழகில் தீர்த்தொரு சிலையழகே மலரே....... என்னுயிரில் விடரும் பனிமலரே... மலரே நின்னை காணாதிருந்நால் மிழிவேகிய நிறமெல்லாம் மாயுன்ன போலே அலிவோடு என் அரிகத்தின் அணையாதிருந்நால் அழகேகிய கனவெல்லாம் அகலுன்ன போலே ஞானென்றே ஆத்மாவின் ஆழத்தின் உள்ளில் அதிலோலம் ஆரோரும் அறியாதே சூட்சிச்ச தாளங்ஙள் ராகங்ஙள் ஈணங்ஙளாயி ஓரோரு வர்ணங்ஙளாயி இடறுன்னு ஒரென்றே இடை நெஞ்சின் உள்ளில் ப்ரணயத்தின் மழையாய் நீ பொழியுன்னீ நாளில் தளருன்னு ஒரென்றே தனு தோறும் நின்றே அலை தல்லும் ப்ரணயத்தால் உணரும் மலரே...... அழகே..... குளிரேகும் கனவு என்னில் கதிராடிய காலம் மனதாரில் மதுமாசம் தளிராடிய நேரம் அகம் அருவும் மயிலிணைகள் துயில் உணரும் காலம் என் அகதாரில் அனுராகம் பகருன்ன யாமம் ...
அகலே யாரோ பாடுன் நுவோ | சார்லி Charlie | Akale Song |Tamil Lyrics
- Get link
- X
- Other Apps
அகலே… ஏ…அகலே அகலே... அகலே யாரோ பாடுன் நுவோ அந்தமில்லா காலம் கொண்டு வச்சதாரு… எது ஸ்வப்ன ஜாலம் பல கல்லொலமென்னொடு முல்லகெ துல்லடுமா சந்தமுள்ளதானோ.. உள்ளனிஞ்சதானோ என்கிவிட்டதே ஒ..ரக்ஞாத விஸ்மேய ஸ்வர்கீய சங்கீதமா… நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ…ஓ…. ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ…ஓ….ஓஹ்..ஓ… ஓ….ஓஹ்..ஓ… நிமிஷமதோ ஓஹ்..ஓ… அகலே ஏஏ…. அகலே… அகலே நேரம் பூக்கும் மீடு அகலே நேரம் பூக்கும் மீடு அகலே…ஏஏ….அகலே…ஏஏ…. அகலே…ஏஏ…. அகலே…ஏஏ…. அகலே…ஏஏ……….. தானானானே தானானே தானாரெனா தார தானே ஹோ… தானதான தாந்தான தான தான தான தானே…. அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ… ஓஹ்…. அகலே….ஏஏஏ…. அகலே…ஏஏஏ…ஹே.
முக்கத்தே பெண்ணே - என்னு நிண்டே மொய்தீன் | Ennu Ninte Moideen |Mukkathe Penne |Tamil
- Get link
- X
- Other Apps
என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. என்னிலே எல்லினால் படச்ச பெண்ணே முக்கத்தே மண்ணிலாய் பிறந்த பெண்ணே என்னிலே ரூகிலே பகுதி யல்லெ என்னிலே நூறாய் நீ நிறஞ்ஞதல்லே என்னிலே வ்ளிச்சமும் நீயே முத்தாய் நீ மின்னன மால யல்லே என்னிலே இஸ்கிண்டே நூரே ஆரும் காணா ஒளியும் நீயே.. எண்டே கிதாபிலே பெண்ணே எண்டே கிதாபிலே பெண்ணே யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. யஹெ மெரே தில் கி கீ முஹபது யஹெ மெரே யஹெ மெரே யஹெ மெரே தில் கி கீ கிஸ்மது. Ennu Ninte Moideen
சொற்களைத் தேர்ந்தெடுத்தவர் “பாப் டிலன்”
- Get link
- X
- Other Apps

மருத்துவம், பொருளாதாரம், வேதியியல், இயற்பியல், உலக அமைதி என, ஐந்து நோபல் பரிசுகளும் அறிவித்து முடித்த பின், இலக்கியத்திற்கான நோபல் பரிசு, யாருக்கு கிடைக்கப் போகிறது என்று, ஒட்டுமொத்த இலக்கிய ஆர்வலர்களும் காத்திருந்தனர். அத்தனை பேரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது அந்தச் செய்தி. அமெரிக்காவின் கவிதை முகத்தையே மாற்றியமைத்தவரும், கிடார் நரம்புகளின் அதிர்வுகளால், தன் எதிர்ப்புக் குரலை பாடல்களின் வழியாகப் பதிவு செய்து கொண்டிருக்கும், பாடலாசிரியருமான பாப் டிலனுக்கு, இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டிருக்கிறது. அமெரிக்க குடியுரிமைப் போராட்டங்கள், அந்நாடெங்கும் கொழுந்துவிட்டு எரிந்த போது, போராட்ட இயக்கங்களுக்கு, டிலனின் பாடல்கள் தான் தேசிய கீதம். 50 ஆண்டுகளாக, தன் பாடல் வரிகளில் அணையாத தழல் கொண்டிருந்த இசையைத் தந்து கொண்டிருக்கிறார், டிலன். யூதப் படுகொலைகளினால், அமெரிக்காவில் தஞ்சமைடைந்த டிலனின் குடும்பம், துருக்கியைப் பூர்வீகமாகக் கொண்டது. சிறுவனாக இருந்த போது, ராபட் என்றே அறியப்பட்ட டிலன், பள்ளி நாட்களில், இசைக் குழுக்களை உருவாக்கி பாடல்களை அரங்கேற்றி...
பாப் டிலன்; கட்டுரையும் விளக்கமும்.
- Get link
- X
- Other Apps
வணக்கம் Thiruvendra Kumar உங்களுடைய செய்தி கிடைத்தது. அதில் பாப் டிலன் பற்றி தினமலரின் வெளியான எனது கட்டுரையும், எழுத்தாளர் ஜெயமோகனின் கட்டுரையும் உங்களை குழப்பியதாகக் குறிப்பிட்டிருந்தீர்கள். இரண்டும் வெவ்வேறு விதமாக பாப் டிலனைத் தங்களுக்கு அடையாளப் படுத்துகிறது என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள். எனது கட்டுரை பாப் டிலன் என்பவர் யார்? அவருடைய வாழ்க்கை, இசைப்பயணம் எங்கிருந்து தொடங்கியது என்ற ஸ்கெட்ச்களுக்குள் மட்டும் எழுதப்பட்டது. பாப் நோபல் பரிசுக்குத் தகுதியானவரா, அவருக்கு இலக்கியத்திற்கான நோபல் கொடுப்பது சரியா என்ற விவாதத்திற்குள் நான் நுழையவே இல்லை. எனக்கு டிலனைப் பற்றி ஓர் அறிமுகம் எழுதவேண்டும் என்று தோன்றியது. "I am Not There" படத்தைப் பார்த்ததிலிருந்து. க்ரானிகல்ஸ் வால்யூம் ஒன் பற்றித் தெரிந்துகொண்டதிலிருந்து, எல்லாவற்றுக்கும் மேலாக டிலனின் பாடல்களின் மொழிப்பெயர்ப்பை வாசித்ததிலிருந்து, நான் டிலனின் பாடல்களைக் கேட்கிறேன். அவை பற்றிய மேலதிக விசயங்களைத் தெரிந்துகொள்கிறேன். அமெரிக்க நாட்டுப்புற செவ்வியல் இசையைத் தன் பாடல்களுக்குப் பயன்படுத்துகிறார் பாப் என...
ஐஸ் ஹவுஸ் - சென்னை
- Get link
- X
- Other Apps

2014 இறுதியில் திருவல்லிக்கேணி சிவராமன் தெருவில் அறையெடுத்துத் தங்கியிருந்தேன். அப்போது போக்கு வரத்துக்கெல்லாம் பேருந்து பயணங்களைத் தான் நம்பியிருந்தேன். ஒவ்வொரு தடத்துக்கும் ஒவ்வொரு எண் கொண்ட பேருந்துகளை அடையாளம் கண்டுபிடிக்க நண்பனின் உதவியை நாட வேண்டிவரும். அறைக்குத் திரும்பும்போது மட்டும் சரியாக ஐஸ் ஹவுஸ் வழித்தடத்தில் செல்லும் பேருந்தைப் பிடித்து, பார்த்த சாரதி கோயில் ஆர்ச் நிறுத்தத்தில் இறங்கிக் கொள்வேன். அப்போதுதான் இந்த ‘ஐஸ் ஹவுஸ்’ என்று ஏன் பேருக்கான காரணம் பற்றி தெரிந்துகொள்ள விரும்பினேன். என் துருப்புச் சீட்டுகள் சிலர் வழியாகக் கேட்டறிந்தபோது, காயிதே மில்லத் சாலை முனையில் உள்ள பள்ளிவாசலைக் கைகாட்டி இதுதான் ஐஸ் ஹவுஸ் என்றார்கள். நானும்கூடக் கொஞ்ச காலத்துக்கு அதையே நம்பிக் கொண்டு திரிந்தேன். ‘கலோனல் லவ்’ என்பவர் எழுதிய ‘வெஸ்டிஜெஸ் ஆஃப் மெட்ராஸ்’ புத்தகத்தில் ஐஸ் ஹவுஸ் பற்றி எழுதிய ஒரு குறிப்பு ஒன்று வாசிக்கக் கிடைத்தது. அப்போது தான் உண்மையான ஐஸ் ஹவுஸ் பற்றியும், அதன் பேருக்கான வரலாறும், சாமுவேல் ஆஸ்டின் பற்றியும், ஃப்ரெட்ரிக் தாதர் பற்றியும் தெரியவந்தது. இன்றைக...
அஜ்வா - ஏழு பேரீச்சம் பழங்கள்
- Get link
- X
- Other Apps

ஒரு குரல் நாவல் முழுக்கக் கதை சொல்கிறது. ஒரு ராட்சதக் கை அந்தக்குரலை கண்காணித்துக் கொண்டே பின்தொடர்கிறது. அந்தக் கை ஒருசமயம் வானம் அளவுக்கு விரிந்து வரவேற்கிறது. அந்தக் கை பாவங்களை மன்னிக்கிறது, அந்தக் கை வழிநடத்துகிறது. அந்தக் கை தைரியத்தைக் கொடுக்கிறது. அந்தக் கை ஏழு பேரிச்சம் பழங்களை வழங்குகிறது. இறுதியில் ஒரு குடையாக மாறி கதைசொல்லும் குரலுக்குச் சொந்தக் காரனைத் தாங்குகிறது. அஜ்வா. போதை உலகத்தில் தன்னைத் தொலைத்துவிட்ட ஒருவனது மீட்சியின் கதைதான் அஜ்வா. மீட்சியென்தோடு மட்டும் அல்லாமல் தான் வாழ்ந்த உலகத்தின் சந்துபொந்துகளுக்கெல்லாம் நம்மை அழைத்துச் சென்று அதன் கட்டமைப்புகளையும், கசடுகளையும் அவ்வுலகிலிருந்து மீண்டவர்களையும், மாண்டவர்களையும் பற்றிய கதைகளை முன்பின்னென்று எந்த ஒழுங்கமைவுகளும் எதுவுமில்லாமல் ஒரு மிதபோதைக் காரனின் மனநிலையிலேயே சொல்லிச் செல்கிறார் சரவணன் சந்திரன். மூன்றாவது நாவலைப் புரட்டும்போதும் அதே வேகம். இடையில் கீழே வைத்துவிட முடியாத விறுவிறுப்பு. செய்தித் தாள்களின் ஆறாம்பக்கத்து பத்திகளின் தலைப்பில் புதைந்துகிடக்கும் ஆதாரச் சம்பவங்களின் மையப்புள்...