சென்னை 375*
1. தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட் டது கி.பி. 1639 , ஆகஸ்ட் 22 ஆம் நா ள் . அதாவது இன்றுடன் 375- வது வயதினை சென்னை நகரம் அடைந்திருக்கின்றது . அதனைக் கொண்டாடும் வகையில் சென்னை தினம் 375 கொண்டாடப்படுகின்றது. 2. பத்திரிகையாளர்களான சசி நாயர் , மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா , மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004 உருவாக்கியதே இந்த சென்னை தினம். 3. முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி , உணவுத் திருவிழா , மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 4. சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1 ம் நூற்றாண்டு முதல் பல்லவ , சோழ , மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்க...