Coffee To Copy
கோவை மண்டலம் முழுக்க கவனித்ததில் அங்காங்கு ஆவின் சார்பில் நேரடி தேனீர் விடுதிகள் எழுப்பி இருக்கிறார்கள். ஐந்து ரூபாய்க்கு டீ, ஐந்து ரூபாய்க்கு வடை வகைகள், பஜ்ஜி மாதிரியான மேற்படி ‘கடிகளுக்கு’ ஏழு ரூபாய் என சிக்கன விலை. கூட்டம் பரபரவென்று நிற்கிறது. நிறைய பழம்பெரும் பாய்லர் டீக்கடைக்காரர்களுக்கு அடிபிடித்திருக்கும் வியாபாரத்தில். கண்ணாடிக்கூண்டுக்குள் பலகாரங்கள், கைகழுவ வாஸ் பேஷின், முழுக்க கேமிரா கண்காணிப்பு. இளவயது பையன்கள் கல்லா நிர்வாகம் என்று தூள்கிளப்புகிறது ஆவின் தேனீர்விடுதி. இந்த விடுதியில் என்போன்ற காபி விரும்பிகளுக்கும் சிக்கன விலையில் சிக்கிரி காபி கிடைக்கச் செய்தால் புண்ணியமாகப் போகும். காபி என்றதும் நினைவுக்கு வருகிறது. இந்த அரசு தேனீர் விடுதிபோல அல்லது மதுமானக்கடைகள் போலாவது (!) வீதிக்கு ஒரு குறைச்சலான விலையில் நகலகம் (XEROX) தொடங்குங்களேன். [ டி.என்.பி.எல் காப்பியர் பேப்பர்களுக்கான வர்த்தக கமிசனை வாடிக்கையாளர்களுக்கு விட்டுக்கொடுப்பதன் மூலம் பெரும் புண்ணியத்தைக் கட்டிக்கொள்ளலாம்] காப்பிக்கடைக்காரர்களான நகலகர்கள் அடிக்கும் கொள்ள...