காக்காய்ச் சோறு (2008) - விமலன்

அன்பு தோழருக்கு, என்னை உங்களுக்குத் தெரியாது, உங்கலை எனக்குத் தெரியாது. நம் இருவரையும் பிணைத்தது ஒருகைப்பிடி சோறுதான். காக்கைச் சோறென்று பெயரிட்டிருக்கின்றீர்கள் அதற்கு. மரியாதைக்குரியவரின் பரிந்துரைத்தலான அன்பின் பேரில் உங்கள் காக்கைச் சோற்றை சுவைபார்த்தேன். என்ன ஒரு அட்டகாசமான எழுத்து நடை உங்களுடையது. மனம்போன போக்கில் தடதடவென்று எழுதி இருந்தீர்கள். கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப்போய் முதல் இரண்டு கதைகளை முடித்ததும் உங்கள் எண்ணுக்கு அழைத்துப் பேசினேன் நினைவிருக்கிறதா! என் பெயர் புகழேந்தி. நீங்கள் விமலன் தானே. காக்கைச் சோறு உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்புதானே. நலம் நலம். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன். கதைகளின் ஊடுதிரள் வழியாக நுழைந்து கடக்கும் புலங்கள் / மனிதர்கள் / பாடுகள் என்று பெருவாரான கதைகள் கவனிக்கத் தகுந்தவை. இந்தக் கதைகள் இத்துடன் முடிகின்றன என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாதது போல சில முடிந்துவிட்டும் மனதிலிருந்து மறைய மறுக்கின்றன. சில கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நகரமறுக்கும் தேர் போல சலிப்பேற்றுகின்றன. அநேக கதைகளும் நான் ...