அன்பு அண்ணன் அருள்ராஜ் அவர்களுக்கு, இந்த வாரத்தில் நடந்த இரண்டு அனுபவங்களை உங்களிடம் சொல்லவேண்டுமெனத் தோன்றியது. தமிழில் வெளியாகவிருக்கும் திரைப்படங்களை வெளியீட்டுக்கு முன்பாக சினிமா, பத்திரிகை, ஊடக பிரஜைகளுக்குத் திரையிட்டுக் காட்டுவதும், படம் பற்றி பொதுவெளியில் பேச்சு மற்றும் சலனத்தை உருவாக்குவது வெகுகாலமாக நடைபெறும் வழக்கமாகத்தான் இருந்துவருகிறது. இந்த ‘ப்ரிவ்யூ ஷோ’ கலாசாரத்தில் புதிதாக இடம்பெற்றிருப்பவர்கள் ‘இணையதள நண்பர்கள்’ எனும் புதிய கேட்டகரி. எனது பத்திரிகைத் துறை நண்பர்கள் வழியாகச் சிலநேரங்கள் அடாபுடிகள் எதுவும் இல்லாமல் வெளியாகிற படங்களுக்கான டிக்கெட் முதல் பார்க்கிங் டோக்கன் வரை சிலநேரம் கிடைப்பதுண்டு. அவற்றை தேவைப்படும்போது பயன்படுத்திக் கொள்கிறதுதான். இதுதவிர்த்து, தற்போது முகநூல் ஊடகம் வழியாக நண்பர்கள் பரிந்துரைந்த்து ப்ரிவ்யூ ஷோக்கள் பார்க்க வாய்ப்பமையும்போது ஒருவிஷயம் பயங்கர நெருடலாகிவிட்டது. சமீபத்தில் ஒரு திரைப்படத்தை வெளியீட்டுக்கு முன்பாக நண்பர்களோடு பார்த்துவந்தோம். நிறைய சொதப்பல்களும், பெருவாரியாக...