வாசிக்கும் பிம்பங்கள்

ஏழை எளியோர் வாழ்வைச் சித்தரிக்கும் நாவல்கள் என்று குறிப்பிட்டு கி.ரா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அதில் நாவலின் ஒவ்வொரு நிலைக்களன்களையும் குறிப்பிட்டு, குறுங்கதை ஒன்று சொல்லி காலக்கட்டத்தை அறிமுகப்படுத்தி அதுபற்றி எழுதினவர்களையும் அந்தந்த நூல்களையும் மேற்கோள் காட்டியிருந்தார். அப்படி கி.ரா குறிப்பிட்ட வரிசையில் தேயிலைத் தோட்டங்களின் வாழ்வைச் சொல்லும் செல்வராஜ் எழுதிய ‘தேனீர்’, கோகிலம் சுப்பையா எழுதின ‘தூரத்துப் பச்சை’, கொங்கு நாட்டு கிராமங்களை நிலைக்களமாகக் கொண்டு ஆர்.ஷண்முக சுந்தரம் எழுதிய ‘அறுவடை’, ‘பூவும் பிஞ்சும்’ மற்றும் ‘மாயத்தாகம்’ கைத்தறி நெசவாளர்களின் வாழ்வைச் சித்தரிக்கும் எம்.வி.வெங்கட்ராம் எழுதிய ‘வேள்வித் தீ’, தொ.மு.சியின் ‘பஞ்சும் பசியும்’ தென்மாவட்டங்களில் பனைத் தொழில் செய்யும் தொழிலாளர்களின் வாழ்க்கையை மையச் சரடாகக் கொண்டு ஹெப்ஸிபா ஜேசுதாசன் எழுதிய ‘புத்தம் வீடு’, ஆற்றுமணலை அள்ளிக்குவித்து வயிறுவளர்த்த கொள்ளையர்களைப் பற்றி ஆ. மாதவனின் ‘புனலும் மணலும்’, வெற்றிலைக் கொடிக்கால் வாழ்வை எழுதின ஆ. பழநியப்பனுடைய ‘கா...