உப்பு புளி மொளகா....

தோ ழமை ஒருவரோடு வாட்சப்பில் பேசிக்கொண்டிருந்தேன். நகரத்து உணவு விடுதிகளில் பதார்த்தங்களை,“ ஸ்டார்ட்டரில் தொடங்கி டெசர்ட் வரைக்கும்” விதவிதமாக விரும்பிச் சாப்பிடும் அனுபவத்தைச் சிலாகித்துக் கொண்டிருந்தார். விதவிதமாகச் சமைக்க ‘மட்டுமே’ தெரிந்து வைத்திருந்த தலைமுறைப் பெண்கள் தனக்குப் பிடித்ததை தேர்ந்தெடுத்து விரும்பிச் சாப்பிடுவதைப் பற்றி பெருமையாக சொல்லும் போது கேட்கவே மகிழ்ச்சியாயிருக்கிறது. காலம் எவ்வளவு மாறிவிட்டது என்றேன். ஆமாம், சமைக்க மட்டுமே தெரிந்தவர்கள் சாப்பிட மட்டுமே தெரிந்தவர்களாக உருவாகிக் கொண்டிருக்கிறோம் என்று புன்னகைக்க வைத்தார். ஏதோ வென்னீரில் கொதிக்கவிட்டு இந்த மேகி மட்டுமாவது கைகொடுத்து வந்தது அதுவும் போச்சு என்ற ஆதங்கமும் வெளிப்பட்டது. நிஜம் தான். வருங்காலங்களில் அம்மாவின் சமையலை சிலாகிக்கும் குழந்தைகள் அரிதாகிவிடுவார்களோ என்னவோ. ஒரு ஹைக்கூ படித்தேன். “விமானங்களை அனாயசமாகவும் பட்டாம்பூச்சிகளை ஆச்சர்யமாகவும் கடக்கும் நகரத்துக் குழந்தைகள்” என்று. புதிதாய் திருமணமான அத்தனை மாப்பிள்ளைகளையும் நமட்டுச் சிரிப்போடு வீட்டில் சமையல் எல்லாம் எப்படி என்ற கேள்வி உதிர்...