வாடி ராசாத்தி - 36வயதினிலே

ஜோ-வுக்கு நீண்ட இடைவெளிக்குப் பின் அட்டகாச ஒப்பனிங் 36 வயதினிலே. “சினேகிதியே”வில் காட்சிக்குக் காட்சி பரபரவென்றோடும் வாசு*வாகட்டும் “மொழி”யில் கட்டைவிரலை கம்பீரமாய் அசைத்து தன் இயல்பைச் சொல்லும் அர்ச்சனா*வாகட்டும் ஜோ மீதான ஈர்ப்பு இத்தனை ஆண்டுகள் பின்னும் ரசிக,ரசிகைகளிடம் அப்படியேதான் இருக்கின்றது. “36வயதினிலே” - இந்த ஸ்க்ரிப்ட்டை ஜோ பண்ணா நல்லா இருக்கும் என முடிவெடுத்த சூர்யாவுக்கு நிச்சயமாய் ஒரு பூச்செண்டு வழங்கலாம். இந்த கதாப்பாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு படமாகக் கரை ஒதுங்கியிருக்கும். அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன், “நம்ம ஊரில் எதெல்லாம் பெண்கள் செய்யக்கூடாதுன்னு ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருக்கோ அதெல்லாம் உலகத்திலே எங்காவது ஒரு மூலையில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டே தான் இருக்கு” என்று. 49 வயசெல்லாம் ஒரு வயசே இல்லை என்பதை அம்மா உணர்வதற்கு நாற்பத்து எட்டு வருடங்கள் செலவாகி இருக்கிறது. மட்டம் தட்டி மட்டம் தட்டி அவளுக்குள்ளான திறமைகள் எல்லாவற்றையும் அவள் மனதுக்குள்ளே மு...