கெட்டிமேளம் கெட்டி மேளம்
இதுவரைக்கும் ஒரு போட்டோவையும் பார்க்காமலே புடிக்கலைன்னு சொல்லிகிட்டு இருந்தவன் இன்னைக்கு சரின்னு ஒத்துகிட்டான்னா பாரேன். இதோட பத்துவாட்டி கேட்டுட்டாங்க பொண்ணுகிட்ட கேட்டுட்டியாம்மா! புடிச்சிருக்குன்னு அதுவே சொன்னிச்சான்னு ஆமாடா ஆமாடான்னு சொல்லி எனக்கு வாய்தான் வலிக்கலை.. சீக்கிரம் அந்த பொண்ணுவீட்டுக்காரங்கட்ட பேசுங்களேன்.. நல்ல நாள் பார்த்து போய் பூ வைச்சுட்டு வந்துடலாம் *** என்ன மச்சான் இந்நேரத்தில் போன் . என்னடா பண்ணிட்டு இருக்கே.. உனக்கு ஒரு மெஸேஜ் வந்திருக்கும் பாரு எதுல ! இரு பார்க்கிறேன் “பூவே பூச்சூடவா “ என்னடா அது பூவே பூச்சூடவா! நீயே கண்டுபிடி டொக். இவன் யார்ர்ரா இவன் இன்னேரத்தில் தூங்கிட்டு இருக்குறவனை எழுப்பி மெஸேஜ் பார்க்கச் சொல்லிட்டு போனை வைச்சுட்டான். ட்விஸ்ட் வைக்குறான். *** சரவணா ! ஜகதீஷ் எதோ மெஸேஜ் அனுப்பி இருக்காண்டா.,.. என்னவாம் கேட்டா சொல்ல மாட்றான். எனக்கும் வந்திருக்கு மாமா! “பூவே பூச்சூடவா தானே” உனக்குமா! என்னவோ மேட்டர் போல இரு புடிப்போம் சங்கதியை *** சரவணா ஜகதீஷ் அண்ணா எதோ மெஸேஜ் பண்ணி இருக்காரு உனக்குமா! ...