புகழேந்தியும் ஒட்ட கூத்தனும் - ஒரு தற்காலக்கற்பனை
ஒட்டகூத்தரை உங்களுக்கு தெரிந்திருக்கும்... இல்லை தெரியாமலிருக்கும் ஆனால் நேற்றிரவில் எனக்கு அவரை நினைவில் இருக்கும் என்பது உங்களுக்கு தெரியாது. அல்லது இப்போது தெரிந்து இருப்பீர். நான் யார் என்பதாவது நினைவிருக்கிறதா? அட நான் தானைய்யா புகழேந்தி! நேற்றிரவு ! அது என்ன நேற்றிரவு. இதோ இப்போது தான்.. இதை எழுதும் போது கூடத்தான். என்ன திடீரென்று என்னை நினைத்து அழைக்கிறாயப்பா? என்று கூத்தரென்னருகில் வந்து கேட்டாலும் ஆச்சர்யமில்லை. ஆனால் வரவில்லை நான் தான் தேடிப்போகிறேன். ஆமாம் ஏன் அவரைத்தேடுகின்றேன். நான் எங்கே தேடினேன் அவரல்லவே என்னை மீனவன் எனவும் வீரனா என்றும் கேட்டுப்போயிருக்கிறார், இந்த சோழக்கிளங்கவிஞர்களுக்கு வேலையே இல்லாமல் சங்கப் பாண்டியரை சரமாரியாய் வறுத்தெடுப்பதே வேலையாய் போயிற்று. என்னைய்யா பழங்கதை சொல்கிறீரென்கிறீர்களோ! இல்லை அப்படியானால் உங்களுக்கு புகழேந்தி புதியவன். யார் புகழேந்தி? பாண்டிய அவையில் ஒரு பெருங்கிழவனா? இருக்கலாம்! இல்லை இளம்வயது நரம்பு புடைக்க தமிழ்சாறுகுடித்த கரிய உடல் இளையோனா ? அதுவும் இருக்கலாம். இல்லை பாண்டியத்தேவிக்கு படையல்ச்சீராக சோழநாடு க...