திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது. பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன். ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள். நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின்...