சென்னை -376

ஜெண்டூஸ் என்பார்கள் அந்த மக்களை. அவர்கள் தெலுங்கு மொழியில் பேசிக்கொண்டிருந்தார்கள். அவர்களே மதராஸ் நிலத்தில் பூர்வீகமாய் வசித்து வந்தவர்கள். வேப்பேரி, எழும்பூர், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் போன்ற சின்னச் சின்ன கிராமங்கள் கொண்டடங்கிய நிலப்பரப்பு அது. பரந்து விரிந்த கடற்கரை, இரண்டு ஆறுகள் கடலைச்சேரும் ஆற்றுக்கழிமுகம். (கூவம் , அடையாறு) பார்த்ததுமே இந்த இடத்தில் வியாபாரத்தைத் தொடங்கலாம் என்று ஆந்திரா மசூலிப்பட்டினத்தில் இருந்த ஆர்மகாம் கவுன்சில் உறுப்பினர் “பிரான்சிஸ் டே” முடிவு செய்தார். அடையார் கரை டச்சுக்காரர்களுக்கு, கூவக்கரை பிரிட்டிஷ் காரர்களுக்கு. எந்த ஒரு நாடும் பிறநாடுகளை வென்று ஆட்சிக்கு உ ட்படுத்திய பிறகு தங்கள் வணிகக் கடை விரிக்கும் வழக்கத்திலிருந்து மாறாக இந்தியாவை வணிகத்திற்காக உள்நுழைந்து பிறகு ஆட்சிக்கு உட்படுத்தினார்கள் மேலைநாட்டுக்காரர்கள். அப்படி வணிகம் செழித்த முக்கிய நகரம் ...