லைட்ஸ் ஆஃப்!

ரா மசாமி நாடாரைத் தெரியாதவர்கள் வடசேரி சந்தையில் வெகு சொற்பம் பாக்குக் கொட்டை வியாபாரத்தில் பழமில்லாமலே கொட்டை எடுத்தவர். மார்த்தாண்டம் சந்தையிலிருந்து தோவாளை வரைக்கும் கடைகளுக்கு வட்டிக்குக் கொடுத்திருப்பவர். வடசேரி காய்கறிக் கடைகளுக்கு நடுவே அழுக்கப்பின மண்டியில் இருபது சாக்கு பாக்குப்பைகளை விரித்து வைத்திருப்பார்கள். கரும்பாக்கு விலைகுறைச்சல். கொஞ்சம் பழுப்பும் மங்சளுமாய் இருக்கும் பாக்குக் கொட்டையில் மட்டுமே ஈக்கள் உட்கார யோசிக்கும். வெள்ளை வெளேர் சட்டையில் ராமசாமி நாடார் தலையில் துண்டும் நெற்றியில் அய்யாவழி நாமமும் இட்டபடி கணக்கு வழக்குகள் பார்த்தபடி அமர்ந்திருப்பார். அப்பாவோடு சந்தைக்குப் போகும் போதெல்லாம் பல்லாரியைக் கீழே சிதறவிடுபவர்களுக்கு உதவியாக கைகள் நிரம்பிய ஒற்றை பல்லாரியை எடுத்துக் கொடுக்கப் பார்ப்பேன். எட்டுவயதிருக்கும் எனக்கு. திங்கள்நகர் சந்தையில் பணம் பட்டுவாடா முடித்து எஸ்.கே.பி . பஸ்ஸில் வடசேரி முனையில் இறங்கி சந்தைக்குள் நுழைவர். சந்தையில் அப்பாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தது சந்தை மனிதர்களோடு. கூடவே ராமசாமி நாடாரிடமும். தொழில்விருத்திக்காக கடன்...