எங் கதெ - இமையம்
எதேச்சையாக எழுத்தாளர் இமைய(ம்)த்தைச் சந்தித்தேன். முரளிகிருஷ்ணன் தான் அறிமுகப் படுத்தி வைத்தார். சாவுச் சோறும், கோவேறு கழுதைகளும் இமையம் என்ற படைப்பாளனோடு என்னை ஏற்கனவே வாசிப்பினால் நெருக்கி விட்டிருந்தது.
சமீபத்தில் வந்த “என் கதெ” வாங்கிப் படிக்க நினைத்துக் கொண்டேயிருந்தேன். வாசிக்கிறவன் பிரச்சனை இந்த “நினைத்துக் கொண்டே இருப்பது மட்டும் தான்”. இறுக்கக் கையைப் பற்றிக்கொண்டு என்னைப் பற்றி கேட்டுக் கொண்டிருந்தான். நிகழ்காலத்து இறப்புகளின் மீதான கதையாளர்களின் பார்வை படாதது குறித்து அவருக்குள்ளிருந்த உக்கிரமான வார்த்தைகள் சில மிதந்து விழுந்தன.
நெருக்கடிகாலத்தில் இல்லாமலாக்கப்பட்ட ராஜனின் தந்தை தன் ,அகனை எழுதுகிறார். மலையாளத்தில் பாலியல் தொழிலாளியான பெண்ணொருத்தி தன் கதைகளை எழுதுகிறாள். இங்கே எழுதுகிறவர்கள் தன் பழங்கதைகளை இன்னும் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருக்கிறார்களென சில நிமிடங்களுக்குள் அவர் பார்வையை தீட்டிக் காண்பித்தார்.
“எங்கதெ” குறுநாவலை கையெழுத்திட்டு வாங்கிக்கொண்டேன். பேரன்புடன் தம்பிக்கு என்று எழுதியிருந்தார். சில மணிநேரங்களுக்குள் பாதிப் பக்கங்களை வாசித்து நகர்ந்திருந்தேன். கோடை நாளில் பொட்டு பொட்டென ஓட்டுக்கு மேலே தடித்த மழையடிக்குமே அப்படியான எழுத்து இமையத்துடையது...
- கார்த்திக் புகழேந்தி
11-07-2015
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது