சந்திர நந்தி முதல் சர்வசிவ பண்டிதர் வரை - செஞ்சி வரலாற்றுச் சுற்றுப் பயணம் 09-05-2015
“ நாங்கள் முதலில் பாறைகள் குவிந்து கிடந்த குன்றுகளின் மீது ஏறினோம். அங்கே குகைகளுமிருந்தன. பின்னே பெரும் பாறையினைக் குடைந்து கட்டியிருந்த குடைவரைக்குள் நுழைந்திரு ந் தோம். எங்கள் வயது அப்போது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இளைத்திருந்தது. ” ப னுவல் புத்தக நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது வரலாற்றுச் சுற்றுலாவில் நேற்றைக்கு (09-05-2015) நானும் நண்பர் கேசவனும் கலந்துகொண்டோம். காலை சுமார் 6.30 மணிக்கே திருவான்மியூரில் அமைந்துள்ள புத்தக அரங்கில் சுற்றுலாவில் பங்கெடுப்பவர்கள் குழுமத் தொடங்கியிருந்தோம். ஏழு மணி முப்பது நிமிடங்களுக்கு கிண்டி, தாம்பரம் வழியாக இடையில் இணையும் குழுவினர்களையும் அழைத்துக் கொண்டு பயணம் துவங்கியது. வண்டலூர், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி சுமார் 28கி.மீட்டர் தூரம் பயணித்து செஞ்சியை அடைந்தோம். பனுவலின் இரண்டாவது தொல்லியல் சுற்றுலாவில் காஞ்சி, திருப்பருத்தி குன்றம் ஆகிய ஊர்களில் எங்களை வழிநடத்திய பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்களே இம்முறையும் எங்களை வழிநடத்தினார். பேராசிரிய...