Posts

Showing posts from May, 2015

வாடி ராசாத்தி - 36வயதினிலே

Image
  ஜோ-வுக்கு  நீண்ட இடைவெளிக்குப் பின் அட்டகாச ஒப்பனிங் 36 வயதினிலே.  “சினேகிதியே”வில் காட்சிக்குக் காட்சி பரபரவென்றோடும் வாசு*வாகட்டும்  “மொழி”யில் கட்டைவிரலை கம்பீரமாய் அசைத்து தன் இயல்பைச் சொல்லும் அர்ச்சனா*வாகட்டும் ஜோ மீதான ஈர்ப்பு இத்தனை ஆண்டுகள் பின்னும் ரசிக,ரசிகைகளிடம் அப்படியேதான் இருக்கின்றது.  “36வயதினிலே” - இந்த ஸ்க்ரிப்ட்டை ஜோ பண்ணா நல்லா இருக்கும் என முடிவெடுத்த சூர்யாவுக்கு நிச்சயமாய் ஒரு பூச்செண்டு வழங்கலாம். இந்த கதாப்பாத்திரத்தை வேறு யார் செய்திருந்தாலும் வெள்ளிக்கிழமை ரிலீஸாகும் தமிழ் சினிமாக்களில் இதுவும் ஒரு படமாகக் கரை ஒதுங்கியிருக்கும். அம்மாவிடம் அடிக்கடி சொல்லுவேன், “நம்ம ஊரில் எதெல்லாம் பெண்கள் செய்யக்கூடாதுன்னு ஒரு கண்ணுக்குத் தெரியாத தடை இருக்கோ அதெல்லாம் உலகத்திலே எங்காவது ஒரு மூலையில் சர்வசாதாரணமாக நடந்துகொண்டே தான் இருக்கு” என்று.  49 வயசெல்லாம் ஒரு வயசே இல்லை என்பதை அம்மா உணர்வதற்கு நாற்பத்து எட்டு வருடங்கள் செலவாகி இருக்கிறது. மட்டம் தட்டி மட்டம் தட்டி அவளுக்குள்ளான திறமைகள் எல்லாவற்றையும் அவள் மனதுக்குள்ளே முதுமக்கள் தாழிபோல மூடிப்புதைத்

சந்திர நந்தி முதல் சர்வசிவ பண்டிதர் வரை - செஞ்சி வரலாற்றுச் சுற்றுப் பயணம் 09-05-2015

Image
 “ நாங்கள் முதலில் பாறைகள் குவிந்து கிடந்த குன்றுகளின் மீது ஏறினோம். அங்கே குகைகளுமிருந்தன. பின்னே பெரும் பாறையினைக் குடைந்து கட்டியிருந்த குடைவரைக்குள் நுழைந்திரு ந் தோம். எங்கள் வயது அப்போது ஆயிரத்து நானூறு ஆண்டுகள் இளைத்திருந்தது. ”  ப னுவல் புத்தக நிலையத்தின் சார்பில் ஏற்பாடு செய்திருந்த மூன்றாவது வரலாற்றுச் சுற்றுலாவில் நேற்றைக்கு (09-05-2015) நானும் நண்பர் கேசவனும் கலந்துகொண்டோம்.   காலை சுமார் 6.30 மணிக்கே திருவான்மியூரில் அமைந்துள்ள புத்தக அரங்கில் சுற்றுலாவில் பங்கெடுப்பவர்கள் குழுமத் தொடங்கியிருந்தோம். ஏழு மணி முப்பது நிமிடங்களுக்கு கிண்டி, தாம்பரம் வழியாக இடையில் இணையும் குழுவினர்களையும் அழைத்துக் கொண்டு பயணம் துவங்கியது.   வண்டலூர், மேல்மருவத்தூர் வழியாக திண்டிவனம் அடைந்து அங்கிருந்து மேற்கு நோக்கி சுமார் 28கி.மீட்டர் தூரம் பயணித்து செஞ்சியை அடைந்தோம்.   பனுவலின் இரண்டாவது தொல்லியல் சுற்றுலாவில் காஞ்சி, திருப்பருத்தி குன்றம் ஆகிய ஊர்களில் எங்களை வழிநடத்திய பேராசிரியர். ஆ.பத்மாவதி அவர்களே இம்முறையும் எங்களை வழிநடத்தினார். பேராசிரியர்.பத்மாவதி ஆனையப்பன்