சுப்பிரமணிய பாரதி - நினைவலைகள்
பாரதி கொஞ்சம் நினைவுகள். *** *** *** வேதாந்தி, நித்திய தீரர், உத்தம தேசாபிமானி, ஷெல்லிதாஸ், ராமதாஸன், காளிதாசன், சக்தி தாசன், சாவித்திரி... மேற்கண்ட புனைப்பெயர்களுக்குச் சொந்தக்காரன். *** "யாருங்கானம் இந்த பொடியன். பதினோரு வயசு விரல் எழுதினதா இது. சரஸ்வதி தாண்டவம். பாரும் இவன் எங்கேயோ போகப்போறான்." "இந்த போட்டியில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற இம்மாணவன் சுப்பிரமணியனுக்கு சரஸ்வதியின் பெயரால் *பாரதி*என பட்டம் சூட்டுகிறேன்." *** "செல்லம்மா என் பிச்சுவாவை எங்கே! பொட்டையும் காணோம்." "இதோ இருக்கிறதே." "கண்ணன் படத்துக்கு கீழிறிந்து ஏன் மாற்றி வைக்கிறாய். காலையில் வணங்கத் தேடுவேன் தெரியாதா. சரி வருகிறேன் தாமதமாகிக் கொண்டிருக்கிறது." "கிழிந்திருக்கிறதே கோட்டு நெஞ்சுப்பக்கம்" "நூல் கொண்டா. தைத்துக்கொள்ள" "வெள்ளைதான் இருக்கிறது" "தைத்துவிட்டு வண்டிமையினைத் தேய்த்துவிட்டால் ஆகிறது" *** "செல்லம்மா வா கடலலைகள் கவிழ்ந்துவிழும் அழகு ர...