வாசிப்போம் வாருங்கள் - வற்றாநதி
சிறுகதை என்பது...சட்டென்று
ஜில்லென்று தொட்டு விலகும் காலைப் பனிக்காற்றினைப் போல... அடுத்தென்ன அடுத்தென்ன எனப்
பக்கங்களைப் புரட்டும் தொடர் புதினங்களைப் போலன்றி, சட்டென்று தொற்றிக்கொள்ள வைக்கும்
பரவசம் அது. வருடக் குறிப்புகளோ, நாட்குறிப்புகளோ தேவைவில்லை. ஏனெனில் பலசமயம் நாம்
கடந்து வந்த விசயங்கள் தான் இங்கே கண்முன் விரிகிறது.
’’வற்றா நதி’’ திரு.கார்த்திக்
புகழேந்தி அவர்களின் சிறுகதைத் தொகுப்பு, மண் மணக்கும் திருநெல்வேலி வட்டார மொழிநடையில்
22 சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு. ஆசிரியரின் முதல் வெளியீடு....
நண்பர்கள், நட்பு, பால்யம்,
விசேசங்கள், குடும்பப் பின்னணி, கோவில் திருவிழாக்கள், பதின்பருவ ஊர்சுற்றல்கள் எனத்
தான் சுற்றியதோடு நம்மையும் உடன் அழைத்துச் சென்று சுற்றிக் காட்டுகிறார். தாமிரபரணியின்
ஜில்லென்ற குளிர்ச்சியும், மனம் முழுதும் அப்பிக் கொண்ட தென்பொதிகைச் சாரலோடு, ஒரு
சந்தோச சுற்றுப் பயணம் செய்யாலாம் ‘’வற்றா நதியில்’’.
- வாசிப்போம் வாருங்கள்
February 12, 2015 ·
Comments
Post a Comment
மேலான விமர்சனங்கள் வரவேற்கப்படுகின்றது