கம்பிவடம்
அ ப்பாவோடு வயலுக்குப் போகிறோம் என்றாலே தனீ உற்சாகம் வந்துவிடும். நாள் முழுக்க சோறுதண்ணியே வேண்டாம். சிவப்பு கைப்பிடி போட்ட பார் சைக்கிளில் முன்னும் பின்னுமாக, தம்பியையும் என்னையும் உட்கார வைத்துக்கொண்டு, சங்கரங்கோயிலில் இருந்து சைக்கிளை மிதித்தால் பூலித்தேவன் அரண்மனை இருக்கும் நெற்கட்டான் செவல் வரைக்கும்கூட சலிக்காமல் அழுத்துவார். அவரோடு சைக்கிளில் போவதே என்னம்மோ ராசா குதிரையில் சவாரி போகிற மாதிரி இருக்கும். அப்பாவுக்குச் சொந்தமாக தாத்தா காலத்தைய புஞ்சைகள் தலைவன் கோட்டைக்கு கீழ்த்திசையில் கொஞ்சம்போல மிச்சமிருந்தது. காற்றடி மழையடிக்கும் தப்பின ஆவுடையாறு கோடைக்கு வற்றிப்போனபிறகு, ‘இந்த நிலத்தில கிடந்து நான் பாடுபார்த்தது போச்தும் நீ படிக்கப்போ’ என்றுசொல்லி அப்பாவைப் படிக்க அனுப்பிவிட்டார் தாத்தா. அவரது மறைவுக்குப் பிறகு வயல் என்பது வேலிபோட்ட தோட்டமானது. தரிசு விட்டதுபோக மிச்சத்தை ஆட்கள் வைத்து பராமரித்தார் அப்பா. சின்னவயசில் எப்பவாவது பூஞ்சைத் தோட்டத்துக்கு போகும்போது, எங்களையும் இப்படி கூடேக் கூட்டிக்கொண்டு போவார். இன்றைக்கும் ஊருக்குள் “நாயனா பூஞ்சை இங்