Posts

திருவலங்காட்டு செப்பேடும் திரு ஊறல் மீன் சின்னமும்...

Image
சிலமாதங்கள் முன்பு வரைக்கும் ஞாயிற்றுக்கிழமை முழுக்க சுகவாசத்தை அனுபவித்துவிட்டு வந்து, அதனைத் திங்கள்கிழமை அலுவலகத்தில் உட்கார்ந்து சிலாகிக்கும் வேலையை கர்ம சிரத்தையாகச் செய்து கொண்டிருந்தேன். உங்களில் யாரோ வைத்த கண்ணால் அது கிட்டத்தட்ட ஒரு ஐந்தாறு வாரங்களாக நிகழாமல்ப்போய், ‘கிட வீட்டிலே’ என்று அடைத்து வைத்து வேலை வாங்கிவிட்டது. பனுவலில் ஆறாவது தொல்லியல் சுற்றுலா அறிவித்தபோதே, இந்த தடவை விடக்கூடாது என்று எல்லா நடவடிக்கைகளையும் கச்சிதமாகச் செய்துவைத்துவிட்டு முதல் நாள் இரவில் உறங்கப் போனேன். ஒவ்வொரு முறையும் நண்பர் கேசவராஜ் இந்தப் பயணங்களில் உடன் இருப்பார். இந்த தடவை மனிதர் பிராஜக்ட் ரிவ்யூ என்று பின்வாங்கிக்கொள்ள துணைக்கு மற்ற நண்பர்களைஅழைத்தேன்.    ஆகா ஏழு பேர் என்று நெஞ்சு நிமிர்த்தும் முன்னே மூன்று பேர் லீவ் லெட்டரை நீட்டிவிட்டார்கள். நான்குபேராகக் கிளம்புகையில் அகரமுதல்வனையும் ‘வாருங்கோ’ என்றழைத்தேன். மனிதர் ஐந்தரை மணிக்கே பனுவலில் நின்றுகொண்டு போனடித்தார். சாவகாசமாகக் கிளம்பி, அங்குராசுவோடு இணைந்து பனுவலுக்குப் போய் காத்திருந்து, ‘படிவிருதாளர்’ மணிவண்ணன் அவரின்...

ஹாக்கி மட்டைகளும், தன்ராஜ் பிள்ளையும், தலைமுடியும்...

Image
நேசமணி வாத்தியார் ஒத்தைக் காதைப் புடிச்சு திருக்கினார்னா அரைமணி நேரம் கழிச்சு அதுமட்டும் செவந்து ஒரு தினுசா வீங்கி இருக்கும். காதை வச்சே ‘என்னடா போன பீரியர்டு சைன்ஸா’ என்று பக்கத்துக் க்ளாஸ் பசங்களே கேப்பானுங்க... அவர்கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்காகவே செக்‌ஷன் மாறின பயல்களே உண்டு. ஆனா நான் இன்னுமொரு படி மேலே போய் ஸ்கூலே மாற முடிவெடுத்தேன். எட்டாவது வரைக்கும் கதீட்ரல்ல படிச்சவன் ஒன்பதாவது படிக்க வேற பள்ளிக்கூடம் பாருங்கன்னு அடம்புடிக்க, ஹாஸ்டல்ல சேர்த்துவிட்டா அங்கேயே கிடந்து நல்லா படிப்பான். சேட்டையும் குறையும். ஸ்காலர்ஷிப் அது இதுன்னு எதும் கிடைக்கும் மேல்படிப்புக்கு ஆகும்ன்னு பாணாங்குளத்துக்குப் பக்கம் ஒரு சி.எஸ்.ஐ பள்ளிக்கூடத்தில கொண்டு போய் சேர்த்துட்டாங்க. முதல் நாள் சாயங்காலம் ‘எல்லா பசங்களும் ஹாஸ்டலுக்குப் பின்னாடி இருக்கும் கிரவுண்டுக்கு புல் பிடிங்கப் போங்க’ன்னு வேலை சொன்னாங்க. நல்ல பொழப்புதான் போன்னு நானும் போயிருந்தேன். இப்படி ஏழெட்டு நாள் வேலைக்கப்புறம் ரோடு ரோலர்லாம் வந்து மண்ணைச் சமன் படுத்திட்டு இருந்தது. அப்போதான் தெரியும் பள்ளிக் ...

பெருசுகள் - 2

Image
தெருமுக்கில் இருந்த வீடு பண்டாரம் ஆசாரியுடையது. பம்பரத்துக்கு ஆணி வைத்துத்தர 'வெட்டுரும்பு' கேட்டு சிறுசுகள் எல்லாம்  அவரைத்தான் நச்சரிப்பாங்களாம். நல்ல மதமதப்பில் இருந்தாரென்றால் அவரே கட்டைக்கு பதமாக ஆணி அடித்துக் கொடுப்பார். மத்தமாதிரியான நேரமென்றால் 'சீ போ சனியனே' என்பது மாதிரி மூஞ்சி தூக்கிக்கொண்டிருக்கும் அவருக்கு. அப்பத்திய நேரத்தில் மனுசர் கிட்டேபோனால் நாய்கடிதான்.   ஒருதடவை கோயில் காரியமாக ஒரு தச்சு வேலை ஒண்ணை அவருக்கு கொடுத்திருந்தார்கள். வேற ஒண்ணுமில்லை பழைய சப்பரத்தில் வைக்கும் சிங்க வாகனத்துக்கு தலை எல்லாம் உலுத்துவிட்டது. புதூசாக தலையை மட்டும் செஞ்சு மாத்துகிற வேலை.  வண்டிச் சட்டலெல்லாம் நூல் பிடித்தமாதிரி செஞ்சு கொடுக்கிறவருக்கு இந்த தலையை கடைவது கழுதைக்குட்டியை பால்குடியிலிருந்து பிரிக்கிறமாதிரி ரொம்பவும் படுத்திவிட்டது. ஒரு சீனித்தாளில் வரைந்த சிங்கத்னதோட மூஞ்சியை ரொம்பநாளைக்கு சட்டப்பையிலே  வைத்துக்கொண்டு திரிந்தார்.  என்னென்னவோ இழைத்துப் பார்த்தும் மனுசமண்டை மாதிரி சிங்கத்தலை சிறுத்துக்கொண்டே போனதே தவிர அந்த அமைப்பு அவருக்க...

இந்தவாரம் கலாரசிகன்

Image
இந்தவாரம் கலாரசிகன் Author:  தினமணி First Published: Mar 6, 2016 1:20 AM Last Updated: Mar 6, 2016 1:20 AM உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணி அறக்கட்டளை சார்பில் முதலாவது ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பத்திரிகை உலகின் ஜாம்பவானான அவர் மறைந்து பதினான்கு ஆண்டுகளாகியும், அவரது நினைவைப் போற்றும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையே என்கிற ஆதங்கத்துக்கு வடிகால் கிடைத்தது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் தினமணி அறக்கட்டளை சார்பில் முதலாவது ஏ.என்.சிவராமன் நினைவுச் சொற்பொழிவு நடத்தப்பட்டதில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி. பத்திரிகை உலகின் ஜாம்பவானான அவர் மறைந்து பதினான்கு ஆண்டுகளாகியும், அவரது நினைவைப் போற்றும் வகையில் எதுவும் செய்யப்படவில்லையே என்கிற ஆதங்கத்துக்கு வடிகால் கிடைத்தது மனதிற்கு மிகப்பெரிய ஆறுதல். நீதியரசர் இராமசுப்பிரமணியத்தின் "இதழியல் அறம்' என்கிற தலைப்பிலான அன்றைய முதலாவது நினைவுச் சொற்பொழிவு அற்புதமான பதிவு. அதையே சற்று விரிவுபடுத்தி, வரவிருக்கும் நீதிமன்ற விடுமுறை நா...

பெருசுகள்

Image
கிழவருக்கு சொடலை என்று பேர். ஆள் பார்க்க வண்டிமையை மேலே தேய்ச்சதுமாதிரி அரைக் கருப்பாக இருப்பார். கைகாலெல்லாம் குச்சு குச்சாய் மூங்கில் குருத்துமாதிரி இருக்கும். மூளிக்குளத்தில் பேராச்சியம்மன் கோயிலுக்கு எதிர்ப்புறத்தில் இருக்கும் வளவு மொத்தத்துக்கும் கிழவருக்குச் சொந்தமானதுதான். ஆனால் கொத்துச்சாவி எல்லாம் பெஞ்சாதி தங்கம்மாள் பெயரில்தான் இருந்தது. ஒண்ணேகால் ரூவாய் செய்யதுபீடிப் பொட்டலத்தை கையில் வாங்கி கசக்கி, உருட்டி, கீழே கட்டை விரலால் ஒரு குத்து குத்தினாரென்றால் மேட்ல்வாடு பிஞ்சுகொண்டு பீடிகள் வெளியில் நீண்டுகொள்ளும். அதில் ஒத்தைப்பீடியை எடுத்து பத்தவைத்துக் கொண்டு ஒருபல் கடியில் வாயில் வைத்துக்கொண்டே, ஏணிமீது ஏறி வைக்கப்போர் ஏத்துவார். “ஒருநா இல்ல ஒருநா பாரு கங்கு வுளுந்து படப்பு பத்திக்கலன்னா இருக்கு” என்று ஏசிக்கொண்டே தங்கம்மா ஆச்சி கரிச்சட்டியை கழுவி தொழுவத்துப் பக்கம் ஊத்தும். சொடலை தாத்தனுக்கு ரெண்டு பெஞ்சாதி. ஆச்சியைக் கட்டி ரெண்டு பொண்ணு பெத்தபிறகு, சீவலப்பேரியில் இருந்து ஒருத்தியை இழுத்துக்கொண்டு பச்சேரியில் வீடேத்திக் கொண்டார். இந்த சங்கதியெல்லாம் எங்களுக்கு ஆ...

நெற்கட்டான் செவல் கதை

Image
 போன வருஷ மேமாசத்தில் வண்டியைக் கிளப்பிக்கொண்டு சென்னையிலிருந்து கிழக்குகடற்கரைச் சாலை வழியாக தூத்துக்குடி வரைக்கும், பிறகு அங்கிருந்து திருநெல்;வேலி, வட்டாரங்கள், மதுரை, புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை, வைத்தீஸ்வரன் கோயில், அப்படியென்று ஒருபாடு ஊர் சுற்றுவந்தேன். இந்த வருசத்தில் ஆந்திரா, ஒரிசா வழியாக சட்டீஸ்கர் வரைக்கும் அப்படி ஒரு சுற்றல் போட நினைத்துவைத்திருந்தேன். நினைப்பு நினைப்பாகவே தேம்பிவிட்டதால் எலெக்‌ஷனை மனதில் வைத்து ஊர்ப்பக்கங்களில் கொஞ்சம் விட்டேத்தியாகச் சுத்த நினைத்தேன். அப்போதுதான் நண்பர் துரைமோகன்ராஜ் அவர்களை எதேச்சையாக வேறோரு காரியத்துக்காக அழைத்து, கடேசியில் அவரோடே சங்கரன்கோயில் பகுதிகளைச் சுற்றுக்கொண்டு வந்தேன். நான் கொஞ்சம் சுமாராக எழுதி இருந்தேன். அவர் ரெக்கார்டர் ஆன் செய்து வைத்து பேச்சுக்களை பதிந்தது போல அப்படியே கச்சிதமாக மொத்த நாளில் நடந்ததையும் எழுதிவிட்டார்.  எழுதியது....  துரை.மோகன்ராஜ்                                 ...

பத்தாம் வகுப்பு தேர்வு முடிவுகள்

Image
             577776 இதுதான் எனக்கு வழங்கப்பட்ட பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு என்ரோல் எண். ச்சே! கொஞ்சம் பிந்தி இருந்தால் ஐந்து 7-வருகிறமாதிரி அடுத்த எண் கிடைத்திருக்குமே என்றெல்லாம் ஹால் டிக்கெட்டை கையில் வாங்கினதிலிருந்து ஒவ்வொரு நாளும் நினைத்துக் கொண்டிருப்பேன். மொத்தம் இருபது பேர் தேர்வெழுதிய அந்த அறையில் நான் இரண்டாவது ஆள். இந்த கார்த்திக் என்ற பேரை கூட்டத்தில் கல் எறிந்த மாதிரி சும்மா சொல்லிப் பாருங்கள் பத்தில் ரெண்டு பேராவது திரும்பிப்பார்ப்போம். எம்., என்., எஸ்., என்று இனிஷியலை வைத்து வரிசையாக கார்த்திக்குகளாக உட்கார்ந்திருந்தோம். பேரதிசயமாக அப்போது நான் கொஞ்சம் நன்றாகப் படிக்கிற பையனாக இருந்திருக்கிறேன். சரியாகச் சொன்னால் எங்கள் தேர்வறையில் நானும் என்.எஸ்.மணி என்பவனும் தான் ஒன்றாவது, ரெண்டாவது ரேங்க்கைத் தொடுகிறவர்கள். (நம்புங்கள்) தமிழ் முதல் தாளில் மண்டையைப் பிய்த்துக்கொண்டிருந்த மற்ற பையன்கள், இரண்டாம் தாள் எழுதப் போகும் முன்பே யார் நமக்கு தேர்வு அறை கண்காணிப்பாளர் என்பதுவரைக்கும் விசாரிக்க ஆரம்பித்து, இந்த பொருத்துக, நிரப்புக மாதி...