அங்காடித் தெரு
அங்காடித் தெரு ************************ SKDS திருநெல்வேலியிலிருந்து, திசையன்விளையிலிருந்து, சாத்தான்குளத்திலிருந்து மஞ்சள் பைகளோடு மற்ற மாவட்டங்களில் வியாபார நிறுவனங்களைத் தொடங்குகிற அண்ணாச்சிகள் நிறைந்த ரங்கநாதன் தெருபோல கோவைக்கும் நிறைய பெரிய வணிகச் சாலைகள் உண்டு. அதில் முக்கியமானது காந்திபுரம் கிராஸ்கட் சாலை. மேற்கு மாவட்டங்கள் முழுக்க கிளைவிரித்து கிட்டத்தட்ட 30க்கும் அதிகமான கிளைகளை விஸ்தரித்திருக்கும் அந்நிறுவனத்தின் கணபதி கிளையில் நான் கணக்காளராக இருந்தேன். அநேகமாக கொங்குக்காரர்கள் யூகித்திருக்கலாம் நான் எந்த நிறுவனத்தைச் சொல்கிறேன் என்று.. இந்த கணக்காளர் வேலை என்பது கணக்கு வழக்குகள் பார்ப்பது மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த கிளையின் நிர்வாக முடிவுகளை எடுக்கக் கூடிய அளவுக்கு கொஞ்சம் பலமான பதவி. 2007-09களின் இறுதிவரைக்கும் இந்த “டான்” பொறுப்பில் நடமாடிக் கொண்டிருந்தேன். விற்பனை, கொள்முதல் அனைத்தும் கணினி மயமாக்கப்பட்டுவிட்டாலும் மற்ற கணக்குவழக்குகளை கையால் எழுதியே சாகடிக்கிற நிறுவனத்தில் மற்றெல்லா கிளைகளுக்கும் ’மின்னணு தரவு செயலாக்கப் பொறுப்பாளர்’ என்று ...