Posts

காக்காய்ச் சோறு (2008) - விமலன்

Image
அன்பு தோழருக்கு,      என்னை உங்களுக்குத் தெரியாது, உங்கலை எனக்குத் தெரியாது. நம் இருவரையும் பிணைத்தது ஒருகைப்பிடி சோறுதான். காக்கைச் சோறென்று பெயரிட்டிருக்கின்றீர்கள் அதற்கு. மரியாதைக்குரியவரின் பரிந்துரைத்தலான அன்பின் பேரில் உங்கள் காக்கைச் சோற்றை சுவைபார்த்தேன். என்ன ஒரு அட்டகாசமான எழுத்து நடை உங்களுடையது. மனம்போன போக்கில் தடதடவென்று எழுதி இருந்தீர்கள். கொண்டாட்டத்தில் திக்குமுக்காடிப்போய் முதல் இரண்டு கதைகளை முடித்ததும் உங்கள் எண்ணுக்கு அழைத்துப் பேசினேன் நினைவிருக்கிறதா! என் பெயர் புகழேந்தி. நீங்கள் விமலன் தானே. காக்கைச் சோறு உங்கள் முதல் சிறுகதைத் தொகுப்புதானே. நலம் நலம். மொத்த புத்தகத்தையும் முடித்துவிட்டேன்.      கதைகளின் ஊடுதிரள் வழியாக நுழைந்து கடக்கும் புலங்கள் / மனிதர்கள் / பாடுகள் என்று பெருவாரான கதைகள் கவனிக்கத் தகுந்தவை. இந்தக் கதைகள் இத்துடன் முடிகின்றன என்ற எந்த முன்னறிவிப்பும் இல்லாதது போல சில முடிந்துவிட்டும் மனதிலிருந்து மறைய மறுக்கின்றன. சில கொஞ்சமும் பிடிகொடுக்காமல் நகரமறுக்கும் தேர் போல சலிப்பேற்றுகின்றன. அநேக கதைகளும் நான் ...

ஜன்னல் திறந்தவன் எட்டிப்பார்க்கப் படுகிறான் (2015)

Image
ஜெய்குட்டிக்கும் அவன் அப்பாவுக்குமான இரண்டு கடிதங்கள். அன்பு ஜெய்குட்டிக்கு ,      அப்பாக்களின் கரங்களால் கவிதையாக எழுதப்படும் பாக்கியத்தைப் பெற்றிருக்கிறாய் வாழ்த்துகள் கண்ணா. உனக்குத் தெரியாது அப்பாவுக்குள் அந்த கவிதைகளை உன் சிறு சிறு அசைவுகள் தான் வரைந்துகொண்டிருக்கின்றன என்பது.  இந்த வினாடிகளில் நீ எப்போதும் இறகுகளோடு அசைகின்றவனாக எனக்குள் உருவகம் கொள்கிறாய். உன் கையில் கிடைத்த தோட்டத்துக் கல், தம்ளர் மழை, காகிதக்கப்பல் காற்றிலசையும் இறகு எல்லாவற்றிற்கும் உயிர் இருக்கின்றதென்பதும் அவர்களுக்கும் (கவனி”: அவைகளுக்கும் அல்ல அவர்களுக்கும் உயர்திணை) உனக்கும் நிகழும் உரையாடல்களின் கவிதைகளை இன்றிரவு வாசித்தேன். தனித்திருக்கும் என் அறைக்குள் நீ காற்றைக்கிழிக்கும் ஓசையுடன் ஓடியாடி அலைகிறாய். ஜெய்குட்டி ஜெனிவீட்டு ஜன்னல் திறந்திருக்கிறதாய் மகிழ்ந்துகொண்டாயாமே ஜெனி உனக்கு எத்தனை பிடிக்கும் என்பதை ஜெனிக்கு யாரேனும் மழையை அனுப்பிச் சொல்லட்டும். அப்புறம் ஒரு முக்கியமான விஷயம் முதலையை விமானமாக மாற்றும் மேஜிக்கை எனக்கும் சொல்லித்தருகிறாயா. நான் யாருக்கும் தெ...

மழை நடந்தோடிய நெகிழ் நிலம்

Image
மழை நடந்தோடிய நெகிழ் நிலம். (2015) கனிமொழி.ஜி எழுதி இருக்கும் முதல் கவிதைத்தொகுப்பு. அகத்துறவு வெளீயீடு. இதுதான் நான் இது என்வழி என்று தொடங்கும் புத்தகத்தின் நன்றி கதாப்பாத்திரங்களுக்கடுத்து நளிநடனம் ஆடும் சிவனைக் கடந்து உட்செல்லச் செல்ல இயற்கையின் நுகர்ப்பையும் பனியில் ஈரச்சுடுதலையும் கடந்துசெல்லும் கவிதைகள். முதன்முதலாக இவருடைய கவிதைகளை வாசிக்கின்றேன்.  வார்த்தைகளின் நடனம் எனக்குப் பிடித்திருந்தது.  என் நிலம் புது வண்ணங்கொள்ளும் என்ற தலைப்பைச் சொல்லியே தொகுப்பைப் பற்றி எழுதி முடித்துவிட முடியும் இந்த கவிதைகள்  எல்லாம் என் நிலம் சார்ந்தவை, என் உணர்வு சார்ந்தவை, என் வலி, அன்பு,பேரன்பு,கருணை, நேசம், கரைந்துவிடும் இயற்கை என என்னோடு சம்பந்தப்பட்டவை இவை அனைத்தும் என்னுடையது. இது நான் இது எல்லாமே நான் தான் என தன்னுலகை கவிதைகளில் பறந்தலைகிறார்.  மழை வழிந்தோடிய நிலத்தில் பதிந்த பாதச்சுவடுகள் காய்ந்த நாட்களில் விளிம்புகள் உடைந்து மணலாய் உட்குவிவது போல இந்தக்கவிதைகள் ஒரு தடத்தையும் பின்னே ஒரு சமநிலைக்கான தயாரிப்பையும் செய்து போகிறது. இவர...

லைட்ஸ் ஆஃப்!

Image
ரா மசாமி நாடாரைத் தெரியாதவர்கள் வடசேரி சந்தையில் வெகு சொற்பம் பாக்குக் கொட்டை வியாபாரத்தில் பழமில்லாமலே கொட்டை எடுத்தவர். மார்த்தாண்டம் சந்தையிலிருந்து தோவாளை வரைக்கும் கடைகளுக்கு வட்டிக்குக் கொடுத்திருப்பவர். வடசேரி காய்கறிக் கடைகளுக்கு நடுவே அழுக்கப்பின மண்டியில் இருபது சாக்கு பாக்குப்பைகளை விரித்து வைத்திருப்பார்கள். கரும்பாக்கு விலைகுறைச்சல். கொஞ்சம் பழுப்பும் மங்சளுமாய் இருக்கும் பாக்குக் கொட்டையில் மட்டுமே ஈக்கள் உட்கார யோசிக்கும்.  வெள்ளை வெளேர் சட்டையில் ராமசாமி நாடார் தலையில் துண்டும் நெற்றியில் அய்யாவழி நாமமும் இட்டபடி கணக்கு வழக்குகள் பார்த்தபடி அமர்ந்திருப்பார். அப்பாவோடு சந்தைக்குப் போகும் போதெல்லாம் பல்லாரியைக் கீழே சிதறவிடுபவர்களுக்கு உதவியாக கைகள் நிரம்பிய ஒற்றை பல்லாரியை எடுத்துக் கொடுக்கப் பார்ப்பேன். எட்டுவயதிருக்கும் எனக்கு. திங்கள்நகர் சந்தையில் பணம் பட்டுவாடா முடித்து எஸ்.கே.பி . பஸ்ஸில் வடசேரி முனையில் இறங்கி சந்தைக்குள் நுழைவர். சந்தையில் அப்பாவுக்கு நல்ல அறிமுகம் இருந்தது சந்தை மனிதர்களோடு. கூடவே ராமசாமி நாடாரிடமும். தொழில்விருத்திக்காக கடன்...

டெசி கதை

Image
பரவலாகவே முருகன் குறிச்சியில்  எல்லோருக்கும் டெசியைத் தெரிந்திருக்கும்.  சிமெண்டு நிற கால்சட்டைப் போட்ட முருகன்குறிச்சிக்காரப் பயல்கள் அத்தனை பேரும் கதீட்ரலில் தான் படிப்பான்கள். பள்ளிக்குப் பக்கத்திலே வீடு அமைவதில் ஒரு வசதி.. எத்தனை லேட்டாக வேண்டுமானாலும் கிளம்பலாம். ஒரே ஒரு வருத்தம் ”இன்னைக்கு எங்க ஸ்கூலு லீவு”.. எனப் பொய் சொல்லி கிரிக்கெட் ஆட முடியாது. சரி டெசி கதைக்கு வருவோம். டெசி முருகன் குறிச்சி வடக்குத் தெருவின் முன்னாள்* ஏஞ்சல்.  டெசியின் அப்பா லாரன்ஸ் அந்த ஊரிலிருந்து இராணுவத்துக்குப் போன முதல் குடும்பத்தைச் சேர்ந்தவர். . பின்னாளில் லாரன்ஸ் பட்டாளத்தாரைக் கண்டாளே நடுங்கும் பொடிப்பயல்களாக நாங்கள் இருந்தோம்... ஆனாலும் அவர் மகள் டெசியை ஒரு நாள் நேரில் பார்த்துவிட ப்ரியப்பட்டவனாகினேன்.  அதற்குக் காரணமும் இருந்தது. பரிட்சைக்கு மறுநாள் வைக்கும் கோச்சிங் க்ளாஸைக் கட் அடித்துவிட்டு குளக்கரை கிணற்றடியில் பரணி, க்ளாட்ஸன், ராமச்சந்திரன், ராஜ்குமார் சகிதம் அரட்டை அடித்துக் கொண்டிருக்கும் போது டெசி..கதையை ராமச்சந்திரன் சொல்லத் தொடங்குவான், சேகரித்து ...

சென்னை 375*

Image
1.        தமிழ்நாட்டின் தலைநகரமாகிய சென்னை தோற்றுவிக்கப்பட் டது கி.பி. 1639 , ஆகஸ்ட் 22 ஆம் நா ள் . அதாவது இன்றுடன் 375- வது வயதினை சென்னை நகரம் அடைந்திருக்கின்றது . அதனைக் கொண்டாடும் வகையில் சென்னை தினம் 375 கொண்டாடப்படுகின்றது. 2.        பத்திரிகையாளர்களான சசி நாயர் , மயிலாப்பூர் டைம்ஸின் ஆசிரியரான வின்சண்ட் டி சொஸா , மெட்ராஸ் மியூசிங்ஸின் ஆசிரியரான முத்தையா ஆகிய மூவரும் இணைந்து 2004 உருவாக்கியதே இந்த சென்னை தினம். 3.        முதன் முதலில் ஒரு சில கருப்பு வெள்ளைப் படங்களுடன் 2004 ஆம் ஆண்டு தொடங்கிய இந்தக் கொண்டாட்டம் இன்று வளர்ச்சியடைந்து புகைப்படக் கண்காட்சி , உணவுத் திருவிழா , மாரத்தான் ஓட்டம் என பல பரிமாணங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. 4.        சென்னை நகருக்கு நீண்ட வரலாறு உள்ளது. கி.பி. 1 ம் நூற்றாண்டு முதல் பல்லவ , சோழ , மற்றும் விஜயநகர பேரரசுகளில் சென்னை ஒரு முக்கிய இடமாக விளங்கியதாக கருதப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வர்த்தகர்களும் மத போதகர்க...