சொத்து (2014)
மழை ஊரை ச் சதசதப்பாக்கி இருந்தது. கொண்டைச் சேவல் முழு வலிமையோடு ஊரை கொக்கரித்து எழுப்பவும் போர்வையைச் சுருட் டி எழுந்தமேனிக்கே பால்வாங்கிவரச் சொல்லி கட்டளை வ ரவும் மிகச்சரியாய் பொழுது புலரும் . கடைக்குட்டியாய் பிறந்தவனின் சாபம் இப்படியாக விடிகிறது. மாடாக்குழிக்குள் ஒழித்து வைத்திருந்த கோலிக்காயை எடுத்து டவுசர் பையை நிரப்பிக்கொண்டு வாய்க்கால் பாலம் தாண்டி கூட்டுறவுப் பண்ணையில் பால் வாங்க நடந்து செல்லவேண்டும். வழியெங்கும் இரண்டு கோலிகளை விசிறி அதனை ஒன்றுக்கு அடுத்த ஒன்றை குறிபார்த்து அடித்தபடியே நடந்தால் தூரம் தெரியாது . கூட்டுறவுப் பண்ணையில் கூட்டம் அதிகமாய் இருக் கும் . தொடை பெருத்த கண்டியன் குளத்துக்கார மாடன் அண்ணாச்சி கத்திக்கொண்டே டம்ளர் /போணி/ யானம்/செம்பு/வாளிகளில் பால் அளந்து நிரப்பிக்கொண்டிருப்பார். நூறு பால் அரையணா என்றிருந்த காலம் அது . கூட்டுறவுத் தொழுவம் பசுக்களால் நிரம்பி இருக்கும் . காலை எட்டு மணிக்குள் அத்தனை பசுக்களும் பால் கறக்கப்பட்டு கன்றுகளோடு அவரவர் வீட்டுக்கு பற்றிவரப்படும். தங்கமக்காவின் பசுக்கள் தான் அதிகப்படியாக தென்படும...