ஆரஞ்சு முட்டாய் - நூல்வெளியீடு அழைப்பிதழ்
படபடன்னு எழுதுகிறவன்தான். அதென்னம்மோ இப்ப கை ஓட மாட்டேங்குது. எப்படித் தொடங்கட்டும். எப்படியானாலும் எழுதித்தான் ஆகணுமில்லையா.. உள்ளபடியே சொல்லவேணுமென்றால் இது இன்னும் கொஞ்சம் உற்சாகமான ஆண்டுதான். ரொம்ப வேகமானதும் கூட. தூரத்தில் நின்னபடி பார்த்து, வாசித்து, நேசித்தவங்க பலபேரையும் கிட்டத்தில் நெருங்கிப் பேசுவதற்குக் கூடச் சந்தர்ப்பங்கள் அமைந்த நாட்கள் இவை. ரொம்பப் பக்கத்தில் நிற்கிறேன். புகைப்படங்களில் அவர்கள் கை என் தோள்மீது விழுகிறது. அவர்கள் பார்வைகள் நான் எழுதுகிற எழுத்துகளின் மீது ஊர்கிறது. என் வார்த்தைகளைக் கவனிக்கிறார்கள். பலசமயம் தட்டிக் கொடுக்கிறார்கள். கொஞ்சம் வீம்புபிடிக்கிறபோது பொறுமைகாக்கச் சொல்லி அனுபவம் பகிர்கிறார்கள். இன்னுமதிகமாய் நிறைய அன்பு செய்கிறார்கள். அட உங்களைத்தான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். உங்களை என்றால் நீங்கள் எல்லோரும்தான். இது அடுத்தத் தொகுப்புக்கான அழைப்பிதழ். எல்லாரையும் அழைக்க வேண்டும். அன்புக்கு அன்பு செய்கிறவர்கள் அத்தனைபேரையும். ஒரு தைரியம் தான். தாயார் சன்னதியிலிருந்து சொந்த ஊரின் நேசத்தோடு சுகா ...