Posts

Showing posts from January, 2017

”கடல்நீர் நடுவே”

Image
இந்த ஜல்லிக்கட்டு பரபரப்புக்கெல்லாம் மத்தியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று திருநெல்வேலிக்கும் நாகர்கோயிலுக்கும் போய்வந்திருந்தேன். குமரியில் திரிவேணி இலக்கியச் சங்கமம் ஏற்பாடு செய்திருந்த இரண்டு நூல்களின் வெளியீட்டு விழாவில் எழுத்தாளர் பொன்னீலன், மலர்வதி, முத்தாலங்குறிச்சி காமராசு, மற்றும் பலரோடு கலந்துக்கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருந்தது.  நாகர்கோயிலில் கலந்துக்கொண்ட முதல் இலக்கிய நிகழ்வு என்பதால் ரொம்பவும் உற்சாகமாகவும் அதேநேரம் பழைய நண்பர்களைச் சந்திக்கும் சூழலாகவும் அமைந்தது. நூல் வெளியீட்டுக்குப் பிறகு, நன்றியுரை பேசிவிட்டு மலர்வதியின் காட்டுக்குட்டி, ஜீவா எழுதிய தற்கொலைக் கடிதம், முத்தாலங்குறிச்சி காமராசு எழுதிய சுடலை சாஸ்தா, கடிகை அருள்ராஜ் எழுதின ‘கடல்நீர் நடுவே’ ஆகிய புத்தகங்களையும் வாசிப்பதற்கு என்று வாங்கியிருந்தேன்.  கடல்புரத்தில் உலவும் நாவல்கள் என்று ஒரு பட்டியல் போட்டால் என் வாசிப்பில் வெகு சிறந்ததாக ஒரு பத்துப் புத்தகங்கள் பேரைக் குறிப்பிட்டுச் சொல்லத் தோன்றும். ஜோ சாரின் படைப்புகளைக் கொண்டாடுவதுகூட அவை முழுதும் கடல்காற்று வீசுகிற நிலத்தில் எழுதப் பட்டவை

‘நல்ல சுழி சல்லி மாடு’ - ஜல்லிக்கட்டு ஒரு கிராமத்தான் கதை

Image
            பால்க்காரக் கோனாரிடம் கதைகேக்கப் போனால் அவர் முதலில் சொல்ல ஆரம்பிக்கிறது மாடுகளின் கதையைத்தான். அப்படி மாடுமாடாய் வரிசைக்கு நிறுத்தி அவர் சொன்ன கதைகளில் ஒன்றுதான் அய்யமுத்துத் தாத்தனின் கதை. எங்கள் வட்டாரமான திருநெல்வேலியில் சல்லிக்கட்டு விளையாட்டுக்கென்று காளை வளர்ப்பவர்கள் ஒன்றிரண்டு பேர் இருந்தார்கள். அய்யமுத்து தாத்தா அதிலொருத்தர். நல்ல வளர்த்தியான பாராசாரிக் குதிரையும், வில்வண்டியும் கட்டிக்கொண்டு, கருத்த உடம்பும், கழுத்தில் வெண்சங்கு மாலையும் போட்டுக்கொண்டு ஊருக்குள் நடமாடுவாராம். நான் சொல்லுவது எழுபது எண்பது வருசத்துக்கு முந்தி. மூக்குக் கருத்து, முதுகெல்லாம் வெளுத்து, நல்ல காட்டெருது கனத்தில் கிண்ணென்று நிற்கும் காளை ஒன்று அவர் வளர்ப்பிலே சிறந்த வித்து என்று வெளியூர் வரைக்கும் பேர் இருந்தது. ஆட்களெல்லாம் வண்டிகட்டிக்கொண்டு வந்து அந்த மாட்டை விலைக்குப் பேசுவார்களாம். “காளிப்பட்டிச் சந்தையில் வாங்கிவந்த நேர்விருத்தி இவன். அஞ்சாறு தலைமுறை தொட்டு வந்த  கலப்பில்லாத ஆண் வாரிசு. பிள்ளை மாதிரி இருப்பவனை விக்கவா கொடுப்போன். போவே அந்தப் பக்கம்” விரட்டித் தள்ளுவாராம்